நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர, நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை.
வணக்கம். ‘நீங்க ஏன் ஒரு சாமியாரை உங்க விளம்பரங்களில் எல்லாம் போடுறீங்க?’’ என்று ஒருவர் என்னிடம் கேட்டார். நான் குருவாக ஏற்றுக் கொண்ட ‘வேதாத்திரி மகரிஷி’ அவர்களைத்தான், கேள்வி கேட்டவர் ‘ஒரு சாமியார்’ என்று குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய வாழ்வையும், ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சியையும் ‘மகரிஷிக்கு முன்’ - ‘மகரிஷிக்குப் பின்’ என இரண்டு கட்டங்களாகப் பிரிக்க இயலும். அப்பா, அம்மா சொல்படி கேட்டு நடந்துகொள்கிற பிள்ளை நம் சமூகத்தில் சமத்துப் பிள்ளை. […]
சோகம் எனும் பறவை உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
ஒரு நாட்டில் முரட்டுத்தனமான ராஜா ஒருவர் இருந்தார். அவர் கட்டளையிட்டால் அது நடந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். அந்நாட்டின் சிறந்த கட்டடக் கலைஞரை அழைத்து “நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. மூன்று நாட்களில் வானில் பறக்கும் அரண்மனை ஒன்று கட்டித்தர வேண்டும். எவ்வளவு வேலையாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்றார். கட்டிட கலைஞர், ராணி, மந்திரி என்று யார் சொன்னாலும் ராஜா கேட்பதாயில்லை. “மூன்று நாட்களுக்குள் கட்டித்தரவில்லை […]
மிகச்சிறிய அந்த நகரத்தில் மக்கள் உற்சாகமாக வாழ்ந்து வந்தனர். அங்கு யாருமே ஏழைகள் இல்லை; எல்லோருமே மாட மாளிகைகளில் வாழ்ந்தனர். பரம்பரை சொத்துகளுக்கும் தினசரி வருமானத்துக்கும் எப்போதும் குறைவில்லாத வாழ்க்கை. விதம்விதமான உணவுகளை சாப்பிட்டு, தினம் ஒரு கேளிக்கையில் ஈடுபட்டு சந்தோஷமாக இருந்தனர் எல்லோரும்! மாற்றம் என்பதுதானே மாறாத இயற்கை நியதியாக இருக்கிறது. விடுதிகளில், பூங்காக்களில் அடிக்கடி கூடிப் பேசும்போதுதான் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை இருப்பது புரிந்தது. ‘மகன் படிப்பதில்லை...’, ‘மகள் சொன்ன பேச்சை மதிப்பதில்லை...’, […]
கண்களைத் திறந்து பாருங்கள்..அனைவரும் தெரிவார்கள். கண்களை மூடிப்பாருங்கள்... உங்களுக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
கோழி ஒன்று ஒரே ஒரு கோதுமையை பார்த்தது. ”யார் இந்த கோதுமையை விதைப்பது” என்றது“நான் விதைக்க மாட்டேன்” என்று வாத்தும், பன்றியும் ஒதுங்கின. கோழி கோதுமையை விதைத்தது. அது வளர்ந்து பெரிதாகும் போது “யார் இதற்கு நீர் ஊற்றுவது” கோழி கேட்டது.“நான் செய்ய மாட்டேன்” பன்றியும் வாத்தும் ஒதுங்கின. கோதுமை வளர்ந்து கோதுமைகளாக அறுவடைக்கு தயாரானது. “யார் இதை அறுவடை செய்து மில்லுக்கு எடுத்து செல்வது” கோழி கேட்டது.“எங்களால் முடியாது” வாத்தும் பன்றியும் ஒதுங்கின. கோதுமையை மாவாக்கி எடுத்து […]
கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் ஆளுக்கொரு எலுமிச்சை பழம் கொண்டு வருமாறு முதல் நாளில் பேராசிரியர் சொன்னார். ‘ஏன் எலுமிச்சை பழம்?’ என்ற யோசனையுடன் மறுநாள் மாணவர்கள் கொண்டு போனார்கள். ‘‘அவரவர் இனிஷியலை எலுமிச்சை பழத்தில் செதுக்குங்கள்’’ என்றார் பேராசிரியர். மாணவர்கள் செய்தார்கள். கூடை ஒன்றில் அனைத்து எலுமிச்சை பழங்களையும் போடச் சொன்னார். நன்றாகக் கலந்தார். மாணவர்களை அவரவர் பழத்தை எடுக்கச் சொன்னார். இனிஷியல் பார்த்து எல்லோரும் சரியாக எடுத்துவிட்டார்கள். அனைவரையும் எலுமிச்சை பழத்தோலை உரித்து […]
1.இந்தியாவில் தெருக்களுக்குப் பெயர் வைக்கப்படுவதில் முதலிடம் பிடிப்பவர் மகாத்மா காந்தியே! நாடு முழுக்க எல்லா பெருநகரங்களிலும் ஒரு முக்கியமான வீதிக்கு காந்தி பெயர் இருக்கும். இந்தியாவின் முக்கியமான 53 வீதிகளுக்கு காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகில் 48 நாடுகளில் காந்தி பெயரில் வீதி உள்ளது. 2. காந்தி பிறந்த தினம். 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் சிற்றூரில் பிறந்தார். காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக […]