தினம் ஒரு கதை - 27

ஒரு நாட்டில் முரட்டுத்தனமான ராஜா ஒருவர் இருந்தார்.  அவர் கட்டளையிட்டால் அது நடந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்.  அந்நாட்டின் சிறந்த கட்டடக் கலைஞரை அழைத்து “நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. மூன்று நாட்களில் வானில் பறக்கும் அரண்மனை ஒன்று கட்டித்தர வேண்டும். எவ்வளவு வேலையாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்றார்.  கட்டிட கலைஞர், ராணி, மந்திரி என்று யார் சொன்னாலும் ராஜா கேட்பதாயில்லை. “மூன்று நாட்களுக்குள் கட்டித்தரவில்லை […]

Read More
கவலை சுமப்பவன்!

மிகச்சிறிய அந்த நகரத்தில் மக்கள் உற்சாகமாக வாழ்ந்து வந்தனர். அங்கு யாருமே ஏழைகள் இல்லை; எல்லோருமே மாட மாளிகைகளில் வாழ்ந்தனர். பரம்பரை சொத்துகளுக்கும் தினசரி வருமானத்துக்கும் எப்போதும் குறைவில்லாத வாழ்க்கை. விதம்விதமான உணவுகளை சாப்பிட்டு, தினம் ஒரு கேளிக்கையில் ஈடுபட்டு சந்தோஷமாக இருந்தனர் எல்லோரும்! மாற்றம் என்பதுதானே மாறாத இயற்கை நியதியாக இருக்கிறது. விடுதிகளில், பூங்காக்களில் அடிக்கடி கூடிப் பேசும்போதுதான் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை இருப்பது புரிந்தது. ‘மகன் படிப்பதில்லை...’, ‘மகள் சொன்ன பேச்சை மதிப்பதில்லை...’, […]

Read More
இன்று ஒன்று நன்று!

கண்களைத் திறந்து பாருங்கள்..அனைவரும் தெரிவார்கள்.         கண்களை மூடிப்பாருங்கள்...         உங்களுக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!

Read More
தினம் ஒரு கதை - 21

கோழி ஒன்று ஒரே ஒரு கோதுமையை பார்த்தது.  ”யார் இந்த கோதுமையை விதைப்பது” என்றது“நான் விதைக்க மாட்டேன்” என்று வாத்தும், பன்றியும் ஒதுங்கின. கோழி கோதுமையை விதைத்தது. அது வளர்ந்து பெரிதாகும் போது  “யார் இதற்கு நீர் ஊற்றுவது” கோழி கேட்டது.“நான் செய்ய மாட்டேன்” பன்றியும் வாத்தும் ஒதுங்கின. கோதுமை வளர்ந்து கோதுமைகளாக அறுவடைக்கு தயாரானது. “யார் இதை அறுவடை செய்து மில்லுக்கு எடுத்து செல்வது” கோழி கேட்டது.“எங்களால் முடியாது” வாத்தும் பன்றியும் ஒதுங்கின. கோதுமையை மாவாக்கி எடுத்து […]

Read More
தினம் ஒரு கதை-20

கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் ஆளுக்கொரு எலுமிச்சை பழம் கொண்டு வருமாறு முதல் நாளில் பேராசிரியர் சொன்னார். ‘ஏன் எலுமிச்சை பழம்?’ என்ற யோசனையுடன் மறுநாள் மாணவர்கள் கொண்டு போனார்கள். ‘‘அவரவர் இனிஷியலை எலுமிச்சை பழத்தில் செதுக்குங்கள்’’ என்றார் பேராசிரியர். மாணவர்கள் செய்தார்கள். கூடை ஒன்றில் அனைத்து எலுமிச்சை பழங்களையும் போடச் சொன்னார். நன்றாகக் கலந்தார். மாணவர்களை அவரவர் பழத்தை எடுக்கச் சொன்னார்.  இனிஷியல் பார்த்து எல்லோரும் சரியாக எடுத்துவிட்டார்கள். அனைவரையும் எலுமிச்சை பழத்தோலை உரித்து […]

Read More
எண்களில் காந்தி!

1.இந்தியாவில் தெருக்களுக்குப் பெயர் வைக்கப்படுவதில் முதலிடம் பிடிப்பவர் மகாத்மா காந்தியே! நாடு முழுக்க எல்லா பெருநகரங்களிலும் ஒரு முக்கியமான வீதிக்கு காந்தி பெயர் இருக்கும். இந்தியாவின் முக்கியமான 53 வீதிகளுக்கு காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகில் 48 நாடுகளில் காந்தி பெயரில் வீதி உள்ளது. 2. காந்தி பிறந்த தினம். 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் சிற்றூரில் பிறந்தார். காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக […]

Read More
தன்னம்பிக்கையை செதுக்கும் 12 வழிகள்!

பலவீனங்களை உணருங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேளுங்கள். உங்கள் பலவீனம் எது, உங்களிடம் நீங்கள் நினைத்து நினைத்து வெட்கப்படும் குணம் எது என்பதை அறியுங்கள். முகப்பரு, எவ்வளவு அழுத்தி வாரினாலும் படியாத தலைமுடி, கூட்டமாக மனிதர்களைப் பார்த்தால் கூச்சப்பட்டு தலைகவிழ்ந்து கொள்வது என ஏதாவது ஒரு விஷயம் உங்களை தன்னம்பிக்கை இல்லாதவராக ஆக்கியிருக்கும். உங்கள் தாழ்வு மனப்பான்மைக்கு எது காரணமோ, அதற்கு ஒரு பெயர் வையுங்கள். அந்தப் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, துண்டு துண்டாக கிழித்துப் […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...5

வணக்கம். ஒரு ஆப்பிள் பழத்தில் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பதை நம்மால் எண்ணிப் பார்த்து சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு விதையில் எத்தனை ஆயிரம் ஆப்பிள் பழங்கள் இருக்கும் என சொல்லமுடியாது. விதைகளின் வீரியம், ஆராய்ச்சிகளைத் தாண்டி ஆச்சரியம் தரக் கூடியது. மூன்று ஆப்பிள்களுக்கு உலக வரலாற்றில் முக்கியமான இடம் இருக்கிறது. முதல் ஆப்பிள், மத நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றில் இடம்பெற்றது.  இந்த உலகத்தில் மனிதர்கள் உருவாக ஆப்பிள் பழமே காரணம் என்பார்கள். கடவுளின் எச்சரிக்கையை மீறி, […]

Read More
இன்று ஒன்று நன்று!

உலகம் முழுவதும் மனிதர்கள் பல்வேறு மொழிகளில் பேசுகிறார்கள். ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.

Read More
1 22 23 24 25 26 29
crossmenu