தினம் ஒரு கதை - 21
கோழி ஒன்று ஒரே ஒரு கோதுமையை பார்த்தது.
”யார் இந்த கோதுமையை விதைப்பது” என்றது
“நான் விதைக்க மாட்டேன்” என்று வாத்தும், பன்றியும் ஒதுங்கின.
கோழி கோதுமையை விதைத்தது.
அது வளர்ந்து பெரிதாகும் போது
“யார் இதற்கு நீர் ஊற்றுவது” கோழி கேட்டது.
“நான் செய்ய மாட்டேன்” பன்றியும் வாத்தும் ஒதுங்கின.
கோதுமை வளர்ந்து கோதுமைகளாக அறுவடைக்கு தயாரானது.
“யார் இதை அறுவடை செய்து மில்லுக்கு எடுத்து செல்வது” கோழி கேட்டது.
“எங்களால் முடியாது” வாத்தும் பன்றியும் ஒதுங்கின.
கோதுமையை மாவாக்கி எடுத்து வந்தது கோழி
“யார் இதில் ரொட்டி செய்வது”
“எங்களால் முடியாது” வாத்தும் பன்றியும் ஒதுங்கின.
சுட சுட ரொட்டி தயாரானது.
“யார் இந்த ரொட்டியை தின்பது” கோழி கேட்டது.
“நான் சாப்பிடுகிறேன். நான் சாப்பிடுகிறேன்” வாத்தும் பன்றியும் முந்தி முந்தி வந்தன.
“உழைப்பில் பங்கேற்காமல் பலனை மட்டும் அனுபவிக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லி கோழி ரொட்டியை சுவைத்து சாப்பிட்டது.