உடை சமத்துவம் கண்ட காந்தி!
உடை சமத்துவம் கண்ட காந்தி!
வெறும் நூலால் மட்டும் ஒரு நாட்டின் உடைகள் நெய்யப்படுவதில்லை. அந்த நிலப்பரப்பின் பொருளாதாரம், தட்பவெப்பநிலை, அந்தச் சமூகத்தின் பண்பாடு என பல விஷயங்களை ஆதரமாகக் கொண்டு ஆடைகள் உருவாகின்றன. எலும்பை உறைய வைக்கும் குளிர் இருக்கிற அன்டார்க்டிகா கண்டத்தில் மெல்லிய உடை உடுத்துவது பொருத்தமற்றது. அங்கு உடலுக்கு கதகதப்பைத் தருகிற ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அடிக்கிற நம் நாட்டில், கோட் சூட் போட்டுக் கொள்வதுதான் பொருத்தமற்றது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டுக்கு ஏற்ற உடையையே இந்தியாவிலும் அணிந்தனர். இதற்கு ஒரே காரணம்தான் உண்டு. தன் உடையின் மூலமாக ‘தான் ஒரு இந்தியனுக்கு மேலானவன்’ என்பதை ஒவ்வொரு நிமிடமும் உணர்த்தினார்கள். அதிக விலை கொடுத்து நம் மக்களையும் அந்த மாதிரி உடைகளை வாங்கி உடுத்தச் செய்தனர். கதர் அடிமையின் சின்னமாகவும், வெள்ளையர்களின் உடை நாகரிகத்தின் அடையாளமாகவும் நம்பப்பட்டது. இங்கிலாந்திலிருந்து ஆடை இறக்குமதி நூறு சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தது. கோடிக்கணக்கான ஏழை நெசவாளர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் மோசடியை ஆங்கிலேயர்கள் செய்வதை உணர்ந்து ‘கதராடை இயக்கம்’ தொடங்கினார் காந்தி.
அடிமைத்தனத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க வலுவான ஓர் ஆயுதம் தேவைப்பட்டது. அது அனைத்து மக்களையும், கிராமங்களையும் இணைக்கிற ஆயுதமாக இருக்க வேண்டும். ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்று இந்தியாவின் கடைக்கோடி மனிதர் வரை கதர் ஆடையின் மூலம் ஒன்று திரட்டப்பட்டனர். காந்தியின் அறப் போராட்டத்தில் உடையின் பங்களிப்பு மிகப்பெரியது.
காந்தியடிகள் ‘கதர்’ என்கிற ஆயுதத்தை தான் மட்டும் ஏந்தவில்லை. லட்சக்கணக்காணவர்களை ஏந்த வைத்தார். ஒரு நெசவாளரின் குடிசையில் சுற்றப்படும் கைத்தறி ராட்டையின் சக்கரம், சுதந்திர வேட்கை என்னும் தேரின் சக்கரமானது. ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதுபோல, கதராடையை அனைவரையும் உடுத்தச் செய்வதன் மூலம், சுதந்திர உணர்வை ஊட்டி, வேலைவாய்ப்பின்றி கஷ்டத்தில் இருக்கும் நம் இந்திய நெசவாளர்களின் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.
எளிய இந்திய நெசவாளர்கள் நூல் நூற்கும்போது சுழலும் கைராட்டையின் ஒவ்வொரு சக்கரமும், பெரும் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொண்டு நம்மை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்துச் சுழன்றது. ‘ஆங்கிலேயரின் ஆடைகளே உயர்ந்தது’ என்கிற எண்ணத்தை உருவாக்கி, மன ரீதியிலும் நம்மை அடிமைப்படுத்தியவர்களை, நம் பாரம்பரிய கதர் ஆடைகளைக் கொண்டே எதிர்த்தார் காந்தியடிகள்.
உடைகள் மானம் சார்ந்தவை. அவற்றில் கோர்த்திருப்பது வெறும் நூல் அல்ல, நம் சுயமரியாதையும்தான்! கதரில் தொடங்கி உப்பு சத்தியாக்கிரகம் வரை, ‘நம் பாரம்பரியமே நமது பெருமை’ என்று அனைவருக்கும் உணர்த்தினார் காந்தி. கதர் இயக்கத்தின் மூலம் காந்தியடிகள் மக்களின் சுயமரியாதையை மட்டும் தட்டி எழுப்பவில்லை. ‘இனி இதை வைத்து எந்தப் பயனும் இல்லை’ என்று நெசவாளர்கள் தங்கள் வீட்டு பரண்களில் தூக்கியெறிந்த நூல் நூற்கும் ராட்டையை மீண்டும் சுழல விட்டதன் மூலம், அவர்களின் வீட்டில் அடுப்பு எரிகிற பொருளாதார மாற்றத்தையும் காந்தியடிகள் உருவாக்கினார்.
உடையின் மூலம் ஆங்கிலேயர்கள் புகுத்திய ஏற்றத் தாழ்வையும் காந்தியின் காதி இயக்கம் ஒழித்தது. பணக்காரர்கள் முதல் ஏழை வரை அனைவரும் உடுத்துகிற உடையாக கதர் மாறியது. வெள்ளையர்களின் வண்ணமயமான ஆடைகளின் பளபளப்பை, வெண்மை நிற கதரின் உண்மையும் சத்தியமும் ஜெயித்துக் காட்டின. நம் பாரம்பரிய உடையான வேட்டிகளை அணியும்போது, இந்தப் பெருமித வரலாற்றை நாம் உணர்கிறோம்.
Share
Related Posts