தினம் ஒரு கதை - 63

தினம் ஒரு கதை - 63

அம்மா தன் மகளை அழைத்து வர பள்ளிக்குச் சென்றிருந்தார். அங்கே ஓர் அறையின் முன்னால் நிறைய கூட்டம் இருந்தது.

அம்மா மகளிடம், ‘‘அங்க என்னம்மா ஒரே கூட்டமா இருக்கு?’’ என்று கேட்டார்.

‘‘அதுவா? அங்க வேற வேலையே இல்லாம ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் வாங்க நிக்கறாங்கம்மா!’’

‘‘அது என்ன ஸ்காலர்ஷிப்?’’

‘‘நல்லா விளையாடுபவர்களை அடையாளப்படுத்தி அரசாங்கம் மாசா மாசம் பணம் கொடுக்கிறார்கள் அம்மா.’’

‘‘அப்படியா, நல்லது!’’

‘‘அது ஒண்ணும் பெரிய தொகை இல்லைம்மா. நாம வீட்ல எல்லாரும் ஹோட்டல்ல போய் சாப்பிடுற பணம்தான்’’ என்ற மகளின் குரலில் அலட்சியம் தெரிந்தது.

‘‘சரி… உனக்கு பி.டி.உஷா தெரியுமா?’’

‘‘தெரியுமாவா? பி.டி.உஷா என் ரோல் மாடல்மா. ஓட்டப்பந்தயத்துல பல சாதனைகள் படைச்சவங்க. இந்தியாவின் தங்க மங்கை ஆச்சே!’’

‘‘அவங்க பிறந்து ஏழு வயசுவரைக்கும் உடம்பு சரியில்லாமதான் இருந்தாங்க. பெற்றோர் ரொம்ப ஏழை. சரியான உணவும் மருந்தும் கூட கொடுக்க வசதியில்லை.’’

‘‘இதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா!’’

‘‘இப்ப தெரிஞ்சிக்கோ. பத்து வயதுக்கு மேலேதான் பி.டி.உஷா ஓட்டப் பந்தய விளையாட்டுக்கு வந்தாங்க. நல்லா ஓடினாங்க. அவங்க ஓடினதைப் பார்த்த பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு அழைச்சிட்டுப் போனாங்க!’’

‘‘ஓஹோ!’’

‘‘ஆனா உஷாவோட பெற்றோரும் சொந்தக்காரங்களும், விளையாடுறதுல என்ன கிடைச்சிரும்னு நினைச்சாங்க.’’

‘‘அப்படியா?’’

‘‘அப்போதான் கேரள அரசாங்கம் பள்ளி அளவில் நன்றாக விளையாடும் பெண் குழந்தைகளுக்கு மாதம் 250 ரூபாய் ஸ்காலர்ஷிப் அறிவித்தது. அந்த ஊக்கத்தொகைதான் பி.டி.உஷா என்னும் சிறுமிக்கு விளையாடும் ஆர்வத்தை இன்னும் தூண்டியது.’’

‘‘புரியுதும்மா!’’

‘‘உனக்கு மூணு வேளை சத்தான உணவு கிடைக்குது. சொந்தமா வீடு இருக்குது. நீ ட்ராக்கில் ஓடுவாய். ஆனால் ஏழை குழந்தைகள் அது கிடைக்காமல் எப்படி ஓடும்? அப்படியான சமயத்தில் இந்த ஸ்காலர்ஷிப் பணம் அவர்களுக்கு ஊக்கமாய் இருக்கும். இந்த ஸ்காலர்ஷிப் என்றில்லை. அரசாங்கமோ, தனியாரோ, யார் கொடுக்கும் ஸ்காலர்ஷிப் பணமும் ஏதோ ஓர் ஏழையின் மனதை ஊக்குவிக்கிறது என்பதைப் புரிந்து கொள். வாழ்க்கையில் எந்த ஸ்காலர்ஷிப்பையும் ஏளனமாகப் பேசாதே. நினைக்காதே!’’

‘‘பேச மாட்டேன் அம்மா. உதவித்தொகையின் அருமையை பி.டி.உஷாவின் வாழ்க்கை மூலம் தெரிந்து கொண்டேன்’’ என்றாள் அந்த மகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu