தினம் ஒரு கதை - 46

தினம் ஒரு கதை - 46

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது.

எலெக்ட்ரானைக் கண்டுபிடித்த இயற்பியல் விஞ்ஞானி நீல் போர் யோசனையில் இருந்தார். அவரது உதவியாளர்கள் பதற்றமாக இருந்தனர்.

நாஜி படைகள் டென்மார்க் தலைநகரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் நாட்டையே ஆக்கிரமித்து விடுவார்கள்.

நீல் போருக்கு கிடைத்திருந்த நோபல் பரிசு தங்கத்தால் உருவாக்கப்பட்டது. நாஜி படையினர் தங்கத்தைப் பார்த்தால் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

எப்படி இந்த தங்க விருதை மறைத்து எடுத்துச் செல்வது? நீல் போர் ஆய்வகத்தில் அவர் உதவியாளர்கள் குழம்புகிறார்கள். பலரும் கூடி முடிவெடுத்து, தங்க நோபல் விருதை கண்ணுக்குத் தெரியாத இடத்தில் புதைத்து வைத்து, நாஜி படைகள் போன பிறகு அதை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கிறார்கள்.

நீல் போரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர். நீல் போரோ வெகு நேரம் யோசித்து, ‘‘இல்லை... இல்லை... நாஜி படையினர் புத்திசாலிகள். நாம் விருதை புதைத்தால் கண்டுபிடித்து விடுவார்கள். நாம் வேறு ஒரு யுத்தி செய்யலாம்’’ என்றார்.

‘‘அக்குவா ரீஜியா எனப்படும் நைட்ரிக் அமிலமும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் கலந்த கலவையில் அந்த தங்க மெடலைக் கரையுங்கள்’’ என்றார். அப்படியே மெடல் கரைக்கப்பட்டு நாஜிப்படைகளிடமிருந்து மறைக்கப்பட்டது.

பிற்காலத்தில் நாஜிப்படைகள் தொந்தரவு எல்லாம் அகன்ற பிறகு அதை மறுபடியும் வேதியியல் மாற்றம் செய்து தங்கமாக்கி மெடலைச் செய்து அணிந்து கொண்டார் விஞ்ஞானி நீல் போர்.

‘மாற்றி யோசிக்கும் திறன் இருந்தால் எப்படிப்பட்ட பிரச்னைக்கும் ஒரு நல்ல தீர்வு உண்டு’ என்பதை நீல் போரிடம் இருந்து அவரது உதவியாளர்கள் கற்றுக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu