தினம் ஒரு கதை - 44
தினம் ஒரு கதை - 44
தத்துவப் பேராசிரியர் வகுப்பெடுத்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்தார்கள்.
‘‘ஒருநாள் ஹாஸ்டலை விட்டு வெளியே போய் சுற்றி வாருங்கள். உலகத்தைப் பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது நல்லவர்களாக மாறுங்கள். நல்ல விஷயங்களைச் செய்யுங்கள். மாலை ஏழு மணிக்கு மறுபடியும் ஹாஸ்டலுக்கு வந்துவிடுங்கள்’’ என்றார்.
மாணவர்கள் கல்லூரி ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தார்கள். ‘நல்லது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்’ என்று யோசித்தார்கள்.
அவர்கள் கையில் உள்ள பணத்தையெல்லாம் சில்லறைகளாக மாற்றி பிச்சைக்காரர்களுக்கு கொஞ்சம் கொடுத்தார்கள். ‘உங்களுக்குப் பசிக்கிறதா’ என்று கேட்டு சிலருக்கு உணவு வாங்கிக் கொடுத்தார்கள்.
இப்படி அவர்களால் என்னென்ன நல்லது செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்தார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் எதுவும் செய்யாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.
மாலை ஏழு மணிக்குள் ஹாஸ்டலுக்குத் திரும்புவதற்காக வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
கல்லூரி வளாகத்துக்குள் காலடி எடுத்து வைக்கும்போது ஒரு பள்ளிச்சிறுவன் திருதிருவென விழித்துக் கொண்டு இவர்களை நோக்கி ஓடிவந்தான்.
‘‘நான் எப்படியோ வழிதவறி விட்டேன். வீட்டுக்கு எப்படிப் போவதென்று தெரியவில்லை’’ என்று கண்கலங்கினான்.
ஆனால் தத்துவ ஆசிரியர் ‘ஏழு மணிக்கு வரவேண்டும்’ என்று சொல்லியிருந்ததால், அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. உள்ளே போய்விட்டார்கள்.
காலையில் இருந்து எதுவும் செய்யாமல் இருந்த மாணவன் பள்ளிச்சிறுவனிடம் பரிவுடன் விசாரித்தான். அவனிடம் விசாரித்து அவன் வீட்டில் விட்டு விட்டு எட்டு மணிக்கு மேலே வந்தான்.
அவன் வந்ததும் தத்துவப் பேராசிரியர் கைத்தட்டி வரவேற்றார். மற்ற மாணவர்களும் கைத்தட்டினர்.
ஆசிரியர் சொன்னார். ‘‘நான் நல்லது செய்யுங்கள் என்று மட்டும் சொல்லவில்லை. நல்லதாய் மாறுங்கள் என்றும் சொன்னேன். நீங்கள் அனைவரும் நல்லது செய்ய வேண்டும் என்று உதவி கேட்காதவர்களுக்கு வலியப் உதவி செய்தீர்கள். அது உங்கள் மனதை திருப்திப்படுத்த செய்த காரியம்.
ஆனால் இவனோ நல்லதாய் மாறியவன். உதவி என்று கேட்டவர்க்கு உதவி செய்வதே முதல் கடமை என்று வகுப்பைப் புறக்கணித்து உதவி செய்தான். நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்போதாவது அவர்களுக்குத் தோன்றும்போது மட்டும் உதவி செய்வார்கள். நல்லதாய் மாறியவர்கள் எப்போதும் பிறருக்கு உதவி செய்வார்கள்’’ என்று முடித்தார்.
Share