தினம் ஒரு கதை - 43
தினம் ஒரு கதை - 43
பனி பெய்யும் நாடொன்றில் ஒரு துறவி நடந்து சென்று கொண்டிருந்தார்.
காலையில் கிளம்பியவர் மாலைக்குள் இன்னொரு விடுதியை அடைய வேண்டும். தவறினால் இரவு குளிர் வந்துவிடும். குளிரில் வெளியில் தங்கினால் உடல் உறைந்து விடும். எனவே அவர் வேகமாக நடந்தார்.
மதியம் ஆகிவிட்டது. இன்னும் வேகத்தை அதிகப்படுத்தினார். அவருக்குப் பின்னால் ஒரு வழிப்போக்கன் நடந்து வந்து கொண்டிருந்தான். இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
வழியில் மரத்தடியில் ஒருவன் கடும் காய்ச்சலில் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்தான்.
துறவி அவனைப் பார்த்து, ‘‘எல்லாமே தலைவிதிப்படி நடக்கும். உனக்கு உதவி செய்தால் நான் மாலைக்குள் விடுதிக்குப் போய்ச் சேர முடியாது. குளிரில் உறைந்து விடுவேன்’’ என்று சொல்லிவிட்டு, அவனுக்கு உதவி செய்யாமல் போய் விட்டார்.
ஆனால் வழிப்போக்கனுக்கு அப்படி விட்டுப் போக மனமில்லை. அவனுக்கு தலைவிதி போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. காய்ச்சலில் வாடிய மனிதனுக்கு தன்னிடம் இருக்கும் உணவைக் கொடுத்தான். சில மூலிகைகளைப் பறித்துக் கொடுத்தான்.
அவனை கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு பனியில் நடந்தான். சில சமயம் முதுகில் தூக்கிக் கொண்டான். சில சமயம் தோளோடு அணைத்துத் தூக்கிச் சென்றான்.
இருட்ட ஆரம்பித்து பனி பொழிந்து குளிர் அடித்தது. எப்படியோ காய்ச்சல் கண்ட மனிதனை அழைத்துக்கொண்டு குற்றுயிராய் விடுதிக்கு வந்து சேர்ந்தான்.
விடுதியில் அவர்களை ஆசுவாசப்படுத்தி உணவு கொடுத்தார்கள். துறவி இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்த வழிப்போக்கன் பதற்றம் அடைந்தான்.
பனியில் வெளியில் போக முடியாது. எனவே, மறுநாள் சூரியன் வந்த பிறகு விடுதிக்காரரை அழைத்துக் கொண்டு துறவியைத் தேடிப் போனான் வழிப்போக்கன். விடுதியிலிருந்து ஒரு மைல் தூரம் தள்ளி துறவி பனியில் உறைந்து கிடந்தார்.
‘‘நீங்கள் இன்னொரு மனிதனைத் தூக்கி வந்ததால் இருவர் உடல் சூடும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, குளிரில் உறையாமல் இருவரையும் காப்பாற்றியது. ஆனால் துறவி தனியே வந்ததால் குளிரில் மாட்டிக்கொண்டு உறைந்தார்’’ என்றார் விடுதிக்காரர்.
‘‘துன்பப்படுவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எளிமையான, ஆனால் வலிமையான தத்துவமே சரியானது. அதுவே என்னைக் காப்பாற்றியது’’ என்று வழிப்போக்கன் முனகினான்.
Share