பிஸியாக இருப்பது முக்கியம் இல்லை; எறும்புகள் எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன. என்ன வேலையில் நாம் பிஸியாக இருக்கிறோம் என்பதே முக்கியம். ஹென்றி டேவிட் தோரோ
சாதாரண மக்கள் நேரத்தைச் செலவழிப்பதைப் பற்றி யோசிக்கிறார்கள்; நேரத்தைப் பயன்படுத்துவது பற்றி யோசிப்பவர்களே ஜெயிக்கிறார்கள். யாரோ
வாங்கிவிட முடிகிற அத்தனைப் பொருட்களைவிடவும், பணமே அதிக ஆச்சரியங்கள் தருகிறது. தங்களிடம் இருப்பதை வைத்துச் சிக்கனமாக வாழ்ந்துவிடலாம் எனத் தீர்மானிப்பவர்கள், தங்களது கற்பனைத் திறனை இழந்துவிடுகிறார்கள். பணம் இல்லாமல் இருக்கும் நிலையே, எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர். பேசுவதற்குமுன் கவனி; எழுதுவதற்குமுன் யோசி; செலவழிப்பதற்குமுன் பணம் சேர்; முதலீடு செய்வதற்குமுன் புலனாய்வு செய்; விமர்சனம் செய்வதற்குமுன் பொறுமை காத்திரு; வழிபடுவதற்குமுன் மன்னித்து விடு; வேலையை விடுவதற்குமுன் முயற்சி செய்துகொள்; ஓய்வுபெறுவதற்குள் சேமித்துக் கொள்; இறப்பதற்குமுன் கொடுத்துவிடு! உங்கள் சந்தேகங்களைக் […]
*காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். *குறைந்தது தினமும் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் நீண்ட நேரம் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. பசியை வளர்த்தால், அது அளவுக்கு அதிகமாக நம்மை சாப்பிட வைக்கும். *உடல் பருமனுக்கு முக்கியக் காரணம் அரிசிச் சாதம். உங்கள் உணவில் சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு […]
நாம் அதிகம் ஆசைப்பட்டுக் கேட்பது நேரத்தைத்தான்; வீணாக அதிகம் செலவழிப்பதும் அதைத்தான்! - வில்லியம் பென்
அதிகாலையில் கடற்கரை மணலில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். குட்டிக் குட்டி அலைகள் வந்து அவர் கால்களை நனைத்து நனைத்து விளையாடிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு பெரிய அலை வந்ததில் அவர் மிரண்டு போய் நகர்ந்தார். அந்த அலையில் நூற்றுக்கணக்கான குட்டி குட்டி மீன்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு மணலில் ஒதுங்கியிருந்தன. தண்ணீர் இல்லாததால் அவை துடித்துக் கொண்டிருந்தன. அடுத்து ஒரு பெரிய அலை வந்தால் அவை சுலபமாகக் கடலுக்குள் போய்விடலாம். ஆனால் அது சாத்தியமில்லை […]
நேரம்தான் உங்கள் வாழ்க்கை; நேரத்தை வீணடிப்பது உங்கள் வாழ்க்கையை வீணடிப்பது போன்றது! ஆலன் லேகெயின்
சில நேரங்களில் நெருங்கிய உறவுகளே எரிச்சல் தருவார்கள். ‘என்னடா வாழ்க்கை இது’ என விரக்தி அடைய வேண்டாம். ‘பாசிட்டிவாக யோசித்தால் அந்த நினைப்பிலிருந்து சுலபமாக மீண்டு வரலாம்’ என்கிறார்கள் நிபுணர்கள். அப்படிச் சில நேர்பட யோசனைகள்... இரவெல்லாம் ஓவராகக் குறட்டை விடும் கணவர், வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் பாடாய்ப் படுத்துகிறாரா? எரிச்சலோடு அரைத் தூக்கத்தில் அவரைத் திட்டாமல் சந்தோஷப்படுங்கள். இரவெல்லாம் கண்ட நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஊர் சுற்றாமல், டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு எங்கோ ரோட்டோரம் விழுந்து கிடக்காமல், […]
அனுபவத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறவர்கள், எப்போதுமே நேரத்தை விரயம் செய்வதில்லை. -ரோடின்
விமான நிலையத்தில் காத்திருந்தாள் அவள். விமானத்தில் ஏறத் தாமதம் ஆகும் என்பது தெரிந்ததும் ஒரு புத்தகமும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தாள். பக்கத்து நாற்காலியில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்து, அவனும் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். இருவருக்கும் இடையே கைப்பிடியில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து அவள் ஒரு பிஸ்கெட்டை எடுத்தாள். அவனும் ஒன்று எடுத்தான். உடனே அவளுக்குக் கோபம் வந்தது. ‘என்ன தைரியம் இருந்தால் நான் வாங்கி வைத்திருக்கும் பாக்கெட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுப்பான்? வேறு இடமாக […]