- ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபாட், ஐபேட், ஐபோன் என உள்ளங்கைக்குள் கம்ப்யூட்டரைக் கொண்டுவந்து தொழில்நுட்பப் புரட்சி செய்த ‘ஆப்பிள் கம்ப்யூட்டர்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது. அவரது கண்டுபிடிப்புகளைவிட புகழ்பெற்றது, கடந்த 2005ம் ஆண்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அவர் நிகழ்த்திய உரை. மிகச்சிறந்த தன்னம்பிக்கை உரமேற்றும் அந்தப் பேச்சு, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் எனர்ஜி டானிக். அந்த உரையின் சுருக்கம் இதோ... ‘‘கல்லூரிப் படிப்பை பாதியில் தலைமுழுகியவன் நான். […]
ஒவ்வொரு புதிய நாளின் காலைப்பொழுதிலும் நீங்கள் வீட்டுக்கு வெளியில் காலடி எடுத்து வைக்கும்போது, உங்கள் மனதுக்குள் தோன்றும் நினைப்பு என்ன? ‘சூரியன் உலகையே பிரகாசமாக்கி வைத்திருக்கிறது... எங்கும் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது... நாமும் இந்த உற்சாக நதியில் நீந்த வேண்டும்’ என நீங்கள் நினைத்தால் ஓகே! ஆனால் அதற்கு பதிலாக, ‘காலையிலயே இவ்வளவு புழுக்கமா இருக்கே. என்ன கொடுமை இது... இந்த நாளை எப்படி ஓட்டுவது? வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள் ஒருவழி ஆகிவிடுவோம் போலிருக்கிறதே’ என […]
தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒருநாள் தனிமையில் இருந்தபோது அவரை நெருங்கி வந்தார் ஒரு பெரிய மனிதர். சாக்ரடீஸுக்கு நன்கு அறிமுகமானவர்தான் அவர். பதற்றத்தோடு சுற்றும்முற்றும் பார்த்த அவர், ‘‘நீங்க ரொம்ப நம்பிக்கிட்டு இருக்கீங்களே... உங்க நண்பர், அவர் என்ன செய்தார் தெரியுமா?’’ என்று ஆரம்பித்தார். “இருங்க... இருங்க...” என அவர் பேச்சை இடைமறித்தார் சாக்ரடீஸ். ‘‘சம்பந்தமில்லாத இன்னொருத்தர் பத்திப் பேசும்போது, எப்பவுமே மூன்று சோதனைகளைச் செய்து பார்த்துக்கிட்டு அப்புறமா பேசறது நல்லது’’ என்றவர், ‘‘இப்போ முதல் சோதனைக்கு […]
கல்லூரியில் படிக்கும் தனது மகன் எல்லோரிடமும் சண்டை பிடிக்கிறான் என்ற புகாரோடு அந்த குருவிடம் வந்தார் ஒருவர். இளைஞனைப் பார்த்துச் சிரித்த குரு, ‘‘ஏன்?’’ என்றார். ‘‘அதுதான் எனக்கும் புரியவில்லை. என்னை யாராவது குறை சொன்னால் கடும் கோபம் வருகிறது. கோபத்தில் நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை” என்றான் அவன். அவனிடம் ஒரு அழகான பலகையும் கொஞ்சம் ஆணிகளும் கொடுத்தார் குரு. ‘‘இனிமேல் கோபம் வந்தால் யாரையும் அடிக்காதே. உன் கோபம் தீர எதையாவது […]
விமான நிலையத்தில் காத்திருந்தாள் அவள். விமானத்தில் ஏறத் தாமதம் ஆகும் என்பது தெரிந்ததும் ஒரு புத்தகமும் பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தாள். பக்கத்து நாற்காலியில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்து, அவனும் ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். இருவருக்கும் இடையே கைப்பிடியில் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து அவள் ஒரு பிஸ்கெட்டை எடுத்தாள். அவனும் ஒன்று எடுத்தான். உடனே அவளுக்குக் கோபம் வந்தது. ‘என்ன தைரியம் இருந்தால் நான் வாங்கி வைத்திருக்கும் பாக்கெட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுப்பான்? வேறு இடமாக […]