அந்தப் பிரபல ஹோட்டலுக்கு வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கினான் ஒரு இளைஞன். அவன் கூடவே காரிலிருந்து இறங்கியது ஒரு நெருப்புக்கோழி. இருவரும் ஒரு டேபிளில் சாப்பிட உட்கார்ந்தார்கள். உணவு பரிமாற ஓர் இளம்பெண் வந்து வணங்கி நின்றாள். மெனு கார்டைப் பார்த்துவிட்டு, சூப், சாப்பாடு, ஐஸ்கிரீம் என அவன் வரிசையாக ஆர்டர் செய்தான். ‘‘ஆமாம்... ஆமாம்... எனக்கும் அதுவே வேண்டும்’’ என்றது நெருப்புக்கோழி. இருவரும் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். பில் வந்தது. 1640 ரூபாய். அவன் ஏதாவது […]
சி.முருகேஷ் பாபு ‘கையிலே வாங்கினேன்... பையிலே போடலை... காசு போன இடம் தெரியலை’ என்கிற ரேஞ்சில்தான் வருமானமும் செலவுகளும் இருக்கின்றன என்று சலித்துக் கொள்கிறீர்களா? வரவையும் செலவையும் எழுதிப் பார்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். எழுதிப் பார்த்துச் செலவழிக்க நாம் என்ன நிதியமைச்சர் ப.சிதம்பரமா என்று கேட்கிறீர்களா... அவர் நாட்டுக்கு நிதியமைச்சராய் இருந்தவர் என்றால் நீங்கள் வீட்டுக்கு நிதியமைச்சர்தான்! அதனால் நீங்கள் பட்ஜெட் போடுவதில் தவறில்லை! நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது அவருக்கு ஆலோசனை சொல்லப் பெரிய […]
தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒருநாள் தனிமையில் இருந்தபோது அவரை நெருங்கி வந்தார் ஒரு பெரிய மனிதர். சாக்ரடீஸுக்கு நன்கு அறிமுகமானவர்தான் அவர். பதற்றத்தோடு சுற்றும்முற்றும் பார்த்த அவர், ‘‘நீங்க ரொம்ப நம்பிக்கிட்டு இருக்கீங்களே... உங்க நண்பர், அவர் என்ன செய்தார் தெரியுமா?’’ என்று ஆரம்பித்தார். “இருங்க... இருங்க...” என அவர் பேச்சை இடைமறித்தார் சாக்ரடீஸ். ‘‘சம்பந்தமில்லாத இன்னொருத்தர் பத்திப் பேசும்போது, எப்பவுமே மூன்று சோதனைகளைச் செய்து பார்த்துக்கிட்டு அப்புறமா பேசறது நல்லது’’ என்றவர், ‘‘இப்போ முதல் சோதனைக்கு […]
அது நல்ல நேரமோ, கெட்ட நேரமோ... இந்த நேரம் நம்முடைய நேரம் என நினைத்து எதையும் செய்யுங்கள். ஆர்ட் புச்வால்ட்
பணத்தை உழைத்து மீட்கலாம்; இழந்த அறிவைப் படித்துமீட்கலாம்; இழந்த உடல்நலனை மருந்துகளால் மீட்கலாம். இழந்த நேரம் இழக்கப்பட்டதுதான்! - சாமுவேல் ஸ்மைல்ஸ்
இந்தக் கணத்தில், இந்த நிமிடத்தில் நீங்கள் படைக்கிறீர்கள்... உங்கள் வாழ்வின் அடுத்த கணத்தை நீங்கள் படைக்கிறீர்கள். இதுதான் உண்மை! -சாரா பேட்டிஸன்
பல ஆண்டு காலம் தங்கள் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு முதிய தம்பதியைப் பார்க்க அவர்கள் ஒரு வார இறுதியில் குடும்பத்தோடு கிளம்பினர். தொலைதூர கிராமத்தில், பண்ணை வீடு ஒன்றில் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர் அந்தத் தம்பதி. இவர்களைப் பார்த்ததும் அந்தத் தம்பதிக்குத் தாள முடியாத சந்தோஷம். தங்கள் சொந்த மகனும் மருமகளும் பேரன், பேத்தியோடு வந்தது போலவே கருதி உபசரித்தனர். தோட்டத்தில் இளநீர் பறிக்கச் சொல்லிக் குழந்தைகளுக்குக் கொடுத்து, அவர்களோடு விளையாடினார் தாத்தா. […]
பிஸியான கடைவீதியில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோது யதேச்சையாக அந்த நகைக்கடை ஷோகேஸில் ஒரு நெக்லஸைப் பார்த்தாள் அந்தப் பெண். கழுத்தை ஒட்டி அணியும்விதத்தில் அவ்வளவு கச்சிதமாக இருந்தது அது. ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்த சிவப்பு கற்கள் அதன் அழகுக்கு இன்னும் மெருகூட்டின. நடைப்பாதையில் போகும் எல்லாப் பெண்களுமே அந்த நெக்லஸை ஒருவித ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போவது போல அவளுக்குத் தோன்றியது. ஒரு முடிவோடு கடைக்குள் நுழைந்தாள். அதன் விலையை விசாரித்தாள். இப்போதைக்கு அவள் வாங்கும் அளவுக்கான விலையில் அது இல்லை […]