தினம் ஒரு கதை - 42

மன்னர் கிருஷ்ணதேவ ராயரின் மகாராணிக்கு தன் தம்பி முகுந்தனை மந்திரியாக்காமல் அப்பாஜியை மந்திரி ஆக்கியது பற்றி வருத்தம். போய் கணவரிடத்தில், ‘‘என் தம்பி அப்பாஜியைவிட திறமை குறைந்தவனா?’’ என்று சண்டை பிடித்தார். மனைவிக்கு உண்மையை உணர்த்த விரும்பினார் ராயர். அப்பாஜியையும் முகுந்தனையும் அழைத்த அவர், இரண்டு பேழைகளை ஒவ்வொருவர் கையிலும் கொடுத்தார். ‘‘இதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியாது. ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டு போய் பக்கத்து நாட்டு மன்னர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள்’’ என்றார். முகுந்தன் கலிங்க […]

Read More
நேரம் முக்கியம்!

தங்களின் ஒரே மகளுக்காக ஓடி ஓடி உழைத்தார்கள் அந்தத் தம்பதி. காலையில் குழந்தை தூங்கி எழும் முன்பாகவே இரண்டு பேரும் வேலைக்குப் போய் விடுவார்கள். இரவில் குழந்தை தூங்கிய பிறகுதான் இருவருமே வீட்டுக்கு வருவார்கள். குழந்தைக்கு எல்லாம் செய்ய வேலைக்கு ஆட்கள் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் தன் அப்பா, அம்மாவை அந்தக் குழந்தை பார்க்க முடியும்.பக்கத்து குடிசைப் பகுதியில் இருக்கிற ஒரு ஏழை சிறுவனும், அந்த சின்னப் பெண்ணும் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் மாலையில் அந்த சிறுவனை […]

Read More
இன்று ஒன்று நன்று!

ஒன்று நிகழப்போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது, இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது.

Read More
தினம் ஒரு கதை - 41

‘‘அம்மா எனக்கு வீட்டுக்குள் அடைந்திருக்க பிடிக்கவில்லை’’ என்றாள் நிலா. ‘‘வா, நம் காரில் ஊர் சுற்றி விட்டு வருவோம்’’ என்றார் அம்மா. அம்மாவும் மகளும் நகரத்தைத் தாண்டி கிராமத்தை நோக்கி நகர்ந்தார்கள். ‘‘அம்மா, இன்னும் கொஞ்ச தூரம் போகலாம்’’ என்றாள் நிலா. ‘‘சரி’’ என்று இன்னும் கிராமப்பகுதிக்குள் காரை செலுத்தினார் அம்மா. சரியாக ஒரே ஒரு கார் மட்டுமே செல்ல முடிகிற பாதை. நடுவில் ஒரு கல் இருந்தது. கல்லை அகற்றினால்தான் கார் போக முடியும். ‘‘அம்மா, […]

Read More
காந்தி எனும் அதிசயம்!

மகாத்மா காந்தியே ஒரு அதிசயம். அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விஷயங்கள் அபூர்வமானவை; அதிசயமானவை. அவரைப் பற்றிய நூல்களிலும், அவர் எழுதிய நூல்களிலும் காணக் கிடைக்கும் தகவல்களைத் தாண்டி, அவரோடு பழகிய பலர் தந்திருக்கும் அந்த விஷயங்கள் இங்கே…

Read More
இன்று ஒன்று நன்று!

சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்; அவற்றைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!

Read More
தினம் ஒரு கதை - 40

அரசன் ஒருவன் பக்கத்து நாட்டைத் தாக்கி மக்களை சிறைபிடித்து அடிமையாக்கி வைத்திருந்தான். அவர்களை சித்திரவதை செய்து கடுமையாக வேலை வாங்கினான். அந்த நாட்டுக்கு ஒரு ஞானி வந்தார். ஞானியை மதிப்புடன் வரவேற்று அரசன் உபசரித்தான். ஞானியோ, ‘அடிமையாக மக்களைப் பிடித்து வைத்திருப்பது தவறு’ என்று புத்திமதி சொல்லி அரசனைத் திருத்தப் பார்த்தார். ஆனால் அரசன் திருந்தவே இல்லை. ‘யாரையும் விடுதலை செய்ய முடியாது’ என்று பிடிவாதமாக சொல்லிவிட்டான். இதைக் கேட்ட ஞானி, அரசன் சிறைப் பிடித்து வைத்திருக்கும் […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு - 7

வணக்கம். ‘பிள்ளைகளுக்காகத்தானே இந்த வாழ்க்கை’ என்று மெழுகாக தங்களை உருக்கிக்கொள்ளும் பெற்றோர்களை ஏழை முதல் பணக்காரர்கள் வரை எந்த நிலையிலும் பார்க்கலாம். கல்யாணப் பந்தியில் பரிமாறப்பட்ட இனிப்பு தன் மகனுக்கு மிகவும் பிடிக்கும் என்று சாப்பிடாமல் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட தாயைப் பார்த்தபோது ஆச்சர்யப்பட்டேன். குழந்தை நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக மனைவியையும் குழந்தையையும் சென்னையில் விட்டுவிட்டு, வெளியூரில் வீடு வாடகை எடுத்து தனியாக வாழும் தகப்பன்களைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். குழந்தைகள் விரும்புகின்றவற்றை தேடித் தேடித் […]

Read More
1 3 4 5
crossmenu