குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. ‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் […]
மன்னர்கள் காலத்தில் நடந்தது இது. ஒரு தெருவில் முதியவர் ஒருவர் பசியால் வாடி நின்று கொண்டிருந்தார். அவருக்கு எதுவுமே நினைவில்லை. பசி அவ்வளவு வருத்தியது. அப்போது அவ்வழியே ஒரு இளைஞன் நடந்து சென்றான். இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து விரித்தால் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிதான நெய்யில் சுட்ட அப்பங்கள் சிலவற்றை விற்பதற்காக எடுத்துச் சென்றான். முதியவர் அவனிடம் ஒரு அப்பம் சாப்பிடக் கொடுக்கும்படி கெஞ்சினார். ‘‘காசில்லாமல் கொடுக்க மாட்டேன்’’ என்று அவன் மறுத்தான். ‘‘என்னிடம் காசில்லை […]
விநோதமான திருமணப் பழக்கம் அந்தப் பழங்குடியினருக்கு இருந்தது. யார் திருமணப் பெண்ணோ, அவள் சிறிய ஓலைக் குடிசையில் மூன்று நாட்கள் குலதெய்வ பூஜை செய்து காத்திருக்க வேண்டும். அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள், அந்த வீட்டைச் சுற்றி நின்று நடனம் ஆடுவார்கள். ஆடும்போது அவர்கள் கையில் நீளமான மரக்குச்சிகள் இருக்கும். நடனம் முடிந்ததும் அக்குச்சிகளை குடிசை ஓலையில் சொருகுவார்கள். உள்ளே இருக்கும் மணப்பெண்ணுக்கு அந்தக் குச்சிகளின் முனை மட்டும் தெரியும். அவள் அதில் ஏதாவது ஒரு […]
1894ம் ஆண்டு. இங்கிலாந்தின் ஆல்டர்ஷாட் நகரத்தில் ஓர் உணவகத்தில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஹன்னா என்னும் 29 வயது பெண், நடித்து பாடிக் கொண்டிருந்தார். அன்று அவருக்கு உடல்நலம் சரியில்லை. இருந்தாலும் குடும்பத்தின் வறுமை காரணமாக நடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஓர் அம்மாவாக குழந்தைகளையும் வீட்டில் விட்டு விட்டு வரமுடியாமல், தான் நடிக்கும் உணவகத்துக்கே அழைத்து வந்திருந்தார். உடல் நலமில்லாமலும் மனக்குழப்பத்துடனும் நடித்துக் கொண்டிருந்த ஹன்னாவால், திடீரென்று சரியாகப் பாட முடியவில்லை. அவர் […]
முழு ஆண்டு விடுமுறையில் அந்த சிறுமி ஒரு காரியம் செய்தாள். அவள் தெருவில் இருக்கும் 15 வீடுகளுக்கும் தினமும் ஒரு பேப்பர் கவர் கொடுத்தாள். அது அவளே செய்தித்தாளை மடித்து மாவு பசையில் ஒட்டிய கவர்கள். கவரை கொடுத்து ஒவ்வொரு வீட்டிலும் இதைச் சொன்னாள். ‘‘நீங்கள் வெட்டும் காய்கறி மற்றும் பழங்கள், பழத்தோல்கள் குப்பையை மட்டும் இதில் போட்டு வையுங்கள். தினமும் காலையில் வந்து நான் எடுத்துக் கொள்கிறேன்’’ என்றாள். அவள் அதைச் சொன்ன பணிவிலும் கனிவிலும் […]
முக்காலமும் அறிந்த ஞானி ஒருவர் தன் சீடர்களோடு சென்று கொண்டிருந்தார். அங்கே தெருநாய் ஒன்றைப் பார்த்தார். அது அழுக்காக இருந்திருந்தது. உடல்நலமின்றி சோர்ந்து படுத்திருந்தது. மக்கள் அதைப் பார்த்து ஒதுங்கிப் போனார்கள். அதைப் பார்த்த ஞானி, தன் தீர்க்க தரிசன அறிவால் சொன்னார். ‘‘சீடர்களே, இப்போது நாம் ஓர் ஆற்றைக் கடக்கப் போகிறோம். கடக்கும்போது ஆறு என்னை மூழ்கடித்து விடும். அது என் விதி. அதை மாற்ற முடியாது. அப்படி உயிரை விடும் நான், மறுபடியும் இந்த […]
ஆசிரியர் கேபச்சியர் அந்த நான்காம் வகுப்பு மாணவனைப் பார்த்தார். அவன் பயந்த சுபாவமாக இருந்தான். அவர் கண்களை நேருக்கு நேர் சந்திக்காமல் நாசூக்காக தாழ்த்திக் கொண்டான். சக மாணவர்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொண்டு, யாரும் சட்டென்று கண்டுபிடித்துவிட முடியாதபடி இருந்தான். ஆனால் கேபச்சியர் இப்படி எத்தனை மாணவர்களை பார்த்திருப்பார்! அவர்தான் அந்தப் பள்ளியில் நூலகரும் கூட. மாணவனை அழைத்து அன்பாகக் கேட்டார். ‘‘நீ ஸ்கூலுக்கு போற நேரம் தவிர மத்த நேரம் என்ன செய்வாய்?’’ ‘‘நான்… […]
வீட்டில் ஒரு பிள்ளை சரியாக சாப்பிடாமல் இருந்தால், அம்மாவுக்கு கவலையாகத்தானே இருக்கும். அப்படி அந்த அம்மாவுக்கு தன் ஒரு மகனைப் பார்த்து கவலை வந்தது. வீட்டில் அம்மா, அப்பா மற்றும் வேலைக்குச் செல்லும் மூன்று பிள்ளைகள் இருந்தனர். பெரிய மகனும், அதற்கடுத்த மகளும் வேலை முடிந்து மாலையில் வீடு வந்து விடுவார்கள். ஆனால், இளையவன் நள்ளிரவுதான் வருவான். அவன் வேலை அப்படி. நள்ளிரவு வரும் மகனுக்கு அம்மா சாதமும், குழம்பும், கூட்டும், பொரியலும் வைத்தால் ஏனோ தானோ […]
அம்மாவிடம் கோபமாக ஓடிவந்தாள் சிறுமி. அவள் சைக்கிள் ஓட்டி வரும்போது ஒரு பைக் அவள் மீது மோதி விட்டதாம். பெரிய காயம் இல்லாவிட்டாலும் மோதியதால் கீழே விழுந்த அதிர்ச்சி அச்சிறுமிக்கு இருந்தது. வீட்டுக்கு வந்ததும் பையைத் தூக்கி எறிந்தாள். அம்மாவிடன் தன் கோபம் அனைத்தையும் காட்டி கத்தினாள். ‘‘அம்மா பச்சை சிக்னல் போட்ட பிறகுதான் நான் போனேன். ஆனாலும் ஒரு பைக் ஆசாமி என் மீது மோதிவிட்டார்.’’ ‘‘இருந்தாலும் நீ ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்து […]
கல்லூரியில் படிக்கும் அந்த இளைஞன் வேக வேகமாக வந்து தன் அறைக் கதவைப் பூட்டினான். மூச்சு வாங்கியது. நடந்ததை நினைத்து வெட்கமாக இருந்தது. தனியே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருக்கும் அவன், அன்று காலை தோசை மாவு வாங்க சைக்கிளில் போனான். மாவு கடையில் ஒரு கிலோ மாவை கவரில் கொடுத்தார்கள். அதை சைக்கிள் பின் கேரியரில் வைத்து இடது கையால் மாவைப் பிடித்துக் கொண்டு, வலது கையால் சைக்கிள் ஹேண்டில் பாரைப் பிடித்து ஓட்டிக்கொண்டு வந்தான். […]