பள்ளி மாணவர்கள் உணவு இடைவேளையின்போது வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மரியா டிபன் பாக்ஸை திறந்தாள். அதில் கம்பங்களியும், வேர்க்கடலை துவையலும் இருந்தன. அதைப் பார்த்து கவிதா, ‘‘என்ன இது, பாக்கவே ஒருமாதிரி இருக்கு’’ என்று கேலி செய்தாள். சப்பாத்தி ரோல், சாதம் என்று மற்றவர்கள் கொண்டு வந்திருக்க, மரியா கொண்டு வந்த கம்பங்கூழைப் பார்க்க அவர்களுக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது. மரியா மற்றவர்களின் கிண்டலால் மனம் வருந்தி, சாப்பிடாமல் எழுந்து போய்விட்டாள். அன்று மதியம் அறிவியல் வகுப்பில் […]
உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இல்லாதவர்கள், வாயுத் தொல்லை என்ற பிரச்னையைக் கடந்து வராமல் இருக்க முடியாது! அதிலும் இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை பெரும் சவாலாக இருக்கிறது. காரணம், உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான். உணவை எப்படி உண்ண வேண்டும், எப்போது உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும் என எதுவுமே பலருக்குத் தெரிவதில்லை.நாம் உண்ணும் உணவில் இருக்கும் மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து, நார்ச்சத்து எல்லாம் முழுமையாக உறிஞ்சப்படாமல், உணவு சரியாக […]
வணக்கம். ‘நீங்க ஏன் ஒரு சாமியாரை உங்க விளம்பரங்களில் எல்லாம் போடுறீங்க?’’ என்று ஒருவர் என்னிடம் கேட்டார். நான் குருவாக ஏற்றுக் கொண்ட ‘வேதாத்திரி மகரிஷி’ அவர்களைத்தான், கேள்வி கேட்டவர் ‘ஒரு சாமியார்’ என்று குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய வாழ்வையும், ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சியையும் ‘மகரிஷிக்கு முன்’ - ‘மகரிஷிக்குப் பின்’ என இரண்டு கட்டங்களாகப் பிரிக்க இயலும். அப்பா, அம்மா சொல்படி கேட்டு நடந்துகொள்கிற பிள்ளை நம் சமூகத்தில் சமத்துப் பிள்ளை. […]
சோகம் எனும் பறவை உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
ஒரு நாட்டில் முரட்டுத்தனமான ராஜா ஒருவர் இருந்தார். அவர் கட்டளையிட்டால் அது நடந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். அந்நாட்டின் சிறந்த கட்டடக் கலைஞரை அழைத்து “நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. மூன்று நாட்களில் வானில் பறக்கும் அரண்மனை ஒன்று கட்டித்தர வேண்டும். எவ்வளவு வேலையாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்றார். கட்டிட கலைஞர், ராணி, மந்திரி என்று யார் சொன்னாலும் ராஜா கேட்பதாயில்லை. “மூன்று நாட்களுக்குள் கட்டித்தரவில்லை […]
1.இந்தியாவில் தெருக்களுக்குப் பெயர் வைக்கப்படுவதில் முதலிடம் பிடிப்பவர் மகாத்மா காந்தியே! நாடு முழுக்க எல்லா பெருநகரங்களிலும் ஒரு முக்கியமான வீதிக்கு காந்தி பெயர் இருக்கும். இந்தியாவின் முக்கியமான 53 வீதிகளுக்கு காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகில் 48 நாடுகளில் காந்தி பெயரில் வீதி உள்ளது. 2. காந்தி பிறந்த தினம். 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் சிற்றூரில் பிறந்தார். காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக […]
பலவீனங்களை உணருங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேளுங்கள். உங்கள் பலவீனம் எது, உங்களிடம் நீங்கள் நினைத்து நினைத்து வெட்கப்படும் குணம் எது என்பதை அறியுங்கள். முகப்பரு, எவ்வளவு அழுத்தி வாரினாலும் படியாத தலைமுடி, கூட்டமாக மனிதர்களைப் பார்த்தால் கூச்சப்பட்டு தலைகவிழ்ந்து கொள்வது என ஏதாவது ஒரு விஷயம் உங்களை தன்னம்பிக்கை இல்லாதவராக ஆக்கியிருக்கும். உங்கள் தாழ்வு மனப்பான்மைக்கு எது காரணமோ, அதற்கு ஒரு பெயர் வையுங்கள். அந்தப் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, துண்டு துண்டாக கிழித்துப் […]
வாள் கலை! ஜப்பானிய சாமுராய் வீரர்களைக் கேட்டால், ‘‘போரும் காதலும் ஒன்றுதான்’’ என்பார்கள். போரில் மனிதர்களை வெல்ல வேண்டியிருக்கிறது; காதலில் மனித மனங்களை வெல்ல வேண்டியிருக்கிறது. போர்முனைக்கு ஒரு வீரன் எடுத்துச் செல்லும் வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதே ஒரு மாபெரும் கலை. தன்னிகரற்ற வாள் சண்டை வீரரும், புகழ்பெற்ற ஜென் துறவியுமான தலான், இதுபற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது நிஜத்தில் வாள் சண்டைக்கான கையேடு இல்லை; வாழ்க்கைக் கையேடு! தன்னம்பிக்கையை வளர்க்கும் அந்தக் கையேட்டிலிருந்து […]
1 நம்பிக்கையோடு நிமிர்ந்து அமருங்கள்; நில்லுங்கள்; நடந்து செல்லுங்கள்! 2 அடுத்தவர்களை கண்கள் பார்த்து, புன்சிரிப்போடு எதிர்கொண்டு, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். 3 ‘கச்சிதமான உடலமைப்பு இதுதான்’ என விளம்பரங்களும் டெலிவிஷனும் சொல்வதை நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்கள் கச்சிதம்தான்! 4 குடும்பமும் நண்பர்களும் உங்கள்மீது வைக்கும் எதிர்பார்ப்புகளைத் தூக்கி எறிந்துவிடுங்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். 5 சின்னச்சின்னதாக இலக்குகளை வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை எட்டும்போது பெரும் சந்தோஷத்தை உணர்வீர்கள். 6 உங்கள் நம்பிக்கைகளை கேள்வி […]