குழந்தைகளுக்கு முதன்முதலில் முடிவெடுக்கும் வாய்ப்பைத் தருவது, பணம்தான்! இளம் வயதிலேயே பணத்தைக் கையாளும் வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுத் தந்துவிட்டால், அவர்கள் சம்பாதிக்கும் நாட்களில் தெளிவாக இருப்பார்கள். கடைகளுக்குச் சென்று செலவழிக்கும்போது மட்டும் குழந்தைகளைக் கூட்டிச் செல்வார்கள் சிலர். ஆனால் செலவைவிட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது சேமிப்பைத்தான்! எப்படி அவர்களுக்கு பணக்கல்வி கொடுப்பது? * குழந்தைகள் எண்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததுமே அவர்களுக்கு பணத்தை அறிமுகம் செய்யுங்கள். பார்த்தும், திரும்பத் திரும்ப கவனித்தும் ரூபாய் நோட்டுகளின் வித்தியாசத்தை குழந்தைகள் உணர்ந்து […]
பனி பெய்யும் நாடொன்றில் ஒரு துறவி நடந்து சென்று கொண்டிருந்தார். காலையில் கிளம்பியவர் மாலைக்குள் இன்னொரு விடுதியை அடைய வேண்டும். தவறினால் இரவு குளிர் வந்துவிடும். குளிரில் வெளியில் தங்கினால் உடல் உறைந்து விடும். எனவே அவர் வேகமாக நடந்தார். மதியம் ஆகிவிட்டது. இன்னும் வேகத்தை அதிகப்படுத்தினார். அவருக்குப் பின்னால் ஒரு வழிப்போக்கன் நடந்து வந்து கொண்டிருந்தான். இருவரும் சிரித்துக் கொண்டார்கள். வழியில் மரத்தடியில் ஒருவன் கடும் காய்ச்சலில் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்தான். துறவி அவனைப் பார்த்து, […]
மழையும் பனியும் மாறி மாறிக் கொட்டும் நாட்களில் அழைக்காமலே வீட்டுக்கு வந்துவிடும் இன்னொரு விருந்தாளி, ஜுரம்! குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் ஹோம் ஒர்க்கோடு வருகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக ஜலதோஷம், ஜுரத்தோடு வந்து விடுவார்கள். தண்ணீர் வழியாகப் பரவும் நோய்கள் இந்த நாட்களில்தான் அதிகமாகத் தாக்கும். வைரஸ் போன்ற கிருமிகளும் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும்.நமது உடல் வெப்பநிலை இயல்பான அளவைவிட அதிகமாவதையே நாம் ‘ஜுரம்’ என்கிறோம். ஆனால் எல்லோரும் நினைப்பதைப் போல ஜுரம் என்பது ஒரு நோய் […]
மன்னர் கிருஷ்ணதேவ ராயரின் மகாராணிக்கு தன் தம்பி முகுந்தனை மந்திரியாக்காமல் அப்பாஜியை மந்திரி ஆக்கியது பற்றி வருத்தம். போய் கணவரிடத்தில், ‘‘என் தம்பி அப்பாஜியைவிட திறமை குறைந்தவனா?’’ என்று சண்டை பிடித்தார். மனைவிக்கு உண்மையை உணர்த்த விரும்பினார் ராயர். அப்பாஜியையும் முகுந்தனையும் அழைத்த அவர், இரண்டு பேழைகளை ஒவ்வொருவர் கையிலும் கொடுத்தார். ‘‘இதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியாது. ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டு போய் பக்கத்து நாட்டு மன்னர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள்’’ என்றார். முகுந்தன் கலிங்க […]
தங்களின் ஒரே மகளுக்காக ஓடி ஓடி உழைத்தார்கள் அந்தத் தம்பதி. காலையில் குழந்தை தூங்கி எழும் முன்பாகவே இரண்டு பேரும் வேலைக்குப் போய் விடுவார்கள். இரவில் குழந்தை தூங்கிய பிறகுதான் இருவருமே வீட்டுக்கு வருவார்கள். குழந்தைக்கு எல்லாம் செய்ய வேலைக்கு ஆட்கள் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் தன் அப்பா, அம்மாவை அந்தக் குழந்தை பார்க்க முடியும்.பக்கத்து குடிசைப் பகுதியில் இருக்கிற ஒரு ஏழை சிறுவனும், அந்த சின்னப் பெண்ணும் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் மாலையில் அந்த சிறுவனை […]
ஒன்று நிகழப்போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது, இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது.
‘‘அம்மா எனக்கு வீட்டுக்குள் அடைந்திருக்க பிடிக்கவில்லை’’ என்றாள் நிலா. ‘‘வா, நம் காரில் ஊர் சுற்றி விட்டு வருவோம்’’ என்றார் அம்மா. அம்மாவும் மகளும் நகரத்தைத் தாண்டி கிராமத்தை நோக்கி நகர்ந்தார்கள். ‘‘அம்மா, இன்னும் கொஞ்ச தூரம் போகலாம்’’ என்றாள் நிலா. ‘‘சரி’’ என்று இன்னும் கிராமப்பகுதிக்குள் காரை செலுத்தினார் அம்மா. சரியாக ஒரே ஒரு கார் மட்டுமே செல்ல முடிகிற பாதை. நடுவில் ஒரு கல் இருந்தது. கல்லை அகற்றினால்தான் கார் போக முடியும். ‘‘அம்மா, […]
மகாத்மா காந்தியே ஒரு அதிசயம். அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விஷயங்கள் அபூர்வமானவை; அதிசயமானவை. அவரைப் பற்றிய நூல்களிலும், அவர் எழுதிய நூல்களிலும் காணக் கிடைக்கும் தகவல்களைத் தாண்டி, அவரோடு பழகிய பலர் தந்திருக்கும் அந்த விஷயங்கள் இங்கே…
சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்; அவற்றைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!