1.சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். 2.ஒருவருக்கொருவர் மரியாதை கொடுங்கள். 3.தவறு செய்யும் பட்சத்தில் ஒப்புக்கொள்ளுங்கள். 4.ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். 5.வித்தியாசங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் 6.அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். 7.தோல்வியின்போது தைரியம் சொல்லுங்கள். 8.உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். 9.நல்ல நண்பர்களைப் போற்றுங்கள். 10.விவாதம் வேண்டாம். உரையாடுங்கள். 11.சிரித்த முகம், பாதி சிக்கலைத் தீர்க்கும். 12.ஒருவரின் விருப்பங்களை இன்னொருவர் நிறைவேற்றுங்கள். 13.உறவுகளைப் போற்றுங்கள். 14.குடும்பத்தினரோடு பேச போதுமான நேரம் ஒதுக்குங்கள். 15.விட்டுக்கொடுங்கள். வெற்றி பெறுங்கள்… 16.ஆசைகளைவிட, தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். […]
ஒரு பள்ளி மாணவி தன் வீட்டு மொட்டை மாடியில் டீ குடித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. பணிகளை கவனிக்க, வாட்ச்மேன் குடும்பம் அருகில் குடிசை போட்டுத் தங்கியிருந்தது. காலையில் வாட்ச்மேன் ஒரு பாத்திரத்தில் கடையிலிருந்து டீ வாங்கி வந்தார். அதை அவர், அவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளாக நான்கு பேர் கப்பில் ஊற்றிக் குடித்தார்கள். இதைப் பார்த்த பள்ளி மாணவிக்கு சந்தேகம் வந்தது. கீழே ஓடிப்போய் தன் […]
மார்க்கெட்டிங் பயிற்சி கொடுக்க அவர் வந்திருந்தார். அவர் பேசினார். ‘‘இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வாடிக்கையாளர் சேவை பற்றி ஒரு கதை கூறப் போகிறேன். அது வேடிக்கையான கதைதான். ஆனால், அதில் சிந்திக்கவும் பல விஷயங்கள் இருக்கின்றன. நகரத்தில் புகழ்பெற்ற கேக் கடை ஒன்று இருந்தது. என்னமாதிரியான கேக் கேட்டாலும் அவர்கள் செய்து தருவார்கள். அது சுவையாகவும் தரமாகவும் இருக்கும். ஒருநாள் ஏழ்மையான உடையில் ஓர் இளைஞன் வந்து, ‘எனக்கெல்லாம் கேக் செய்து கொடுப்பீர்களா?’ என்று கேட்டான். ‘இங்கே யாருக்கு […]
முடிந்ததை சிறப்பாகச் செய்தால் அது திறமை; முடியாததை சிறப்பாகச் செய்ய முயற்சி செய்தால் அது தன்னம்பிக்கை!
ஒரு கிராமத்தில் பெரிய நகை வியாபாரி இருந்தார். அவரிடம் ஏராளமான தங்கம் இருந்தது. அதே ஊரில் ஒரு திருடனும் இருந்தான். அவன் இவர் கடையில் திருட திட்டமிட்டான். கடையின் மேலே இடித்து உள்ளே போக முடியுமா என்று பார்த்தான். அது வலிமையான சுவராக இருந்தது. முன்வாசல் பூட்டை உடைக்க நினைத்தான். பூட்டை அசைக்கக்கூட முடியவில்லை. கத்தியைக் காட்டி மிரட்ட நினைத்தான். ஆனால் கடையில் ஏராளமான வேலையாட்கள் இருந்தார்கள். எதுவும் முடியவில்லை. நகை வியாபாரியின் பாதுகாப்பு அவ்வளவு உறுதியாக […]
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஒரு மாணவி பேருந்தில் சென்று கொண்டிருந்தாள். பயண நேரத்தை வீணாக்காமல் தன் இருக்கையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று புத்தகத்தில் இருந்து கண்களை எடுத்துப் பார்த்தவள், அடுத்த நிறுத்தம் அழகிய பாண்டியபுரம் என்று தெரிந்து கொண்டாள். பின்னால் ஒரு பாட்டி கண்டக்டரிடம், ‘‘அழகிய பாண்டியபுரம் வந்தா சொல்லுப்பா’’ என்று கேட்டது போல் இருந்தது. பஸ் நிறுத்தம் வந்தது. எல்லோரும் இறங்கியபின் கண்டக்டர் மறுபடி விசில் ஊதப் போகும்போது மாணவி எழுந்து, ‘‘இருங்க... […]
நம்முடன் வாழ்பவர்களைப் புரிந்துகொள்வதற்கு, முதலில் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கல்லூரி மாணவன் காலையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது படுக்கையின் ஓரத்தில் அவன் காலடியில் அன்றைய தினசரி செய்தித்தாளை யாரோ வைத்து விட்டுப் போயிருந்தார்கள். சிறிது நேரத்தில் அவன் எழுந்து, காலருகே இருந்த செய்தித்தாளை எடுத்து தரையில் தூரமாக வைத்து விட்டு மறுபடியும் தூங்கிப்போனான். மறுநாளும் அப்படியே செய்தித்தாள் வந்து அவன் தூக்கத்தைக் கெடுத்தது. யாரோ தற்செயலாக வைத்திருக்கிறார்கள் என்று விட்டு விட்டான். ஆனால் மூன்றாவது நாளும் அப்படியே செய்தித்தாள் கிடந்தது. ஒரு வாரம் இது […]
எழுபது வயதை நெருங்கும் அப்பாவும், அவரது 35 வயது மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். தென்னையில் தொங்கும் இளநீர், காய்த்துக் குலுங்கும் மாமரம் என்று அப்பா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க… செல்போனில் பேசியபடியே, தனது லேப்டாப்பில் பிஸியாக ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார் மகன்.அப்போது ஒரு புறா பறந்து வந்து மாமரத்தில் உட்கார்ந்தது. மகன் செல்போனில் பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த அப்பா, ‘‘அது என்னதுப்பா?’’ என்று கேட்டார். தன் வேலையில் மும்முரமாக இருந்த பையன், நிமிர்ந்து பார்த்து […]