தோல்வி தவிர்க்க முடியாதது என்ற விஷயத்தை அறியாதவர்களே அதிகம் வெற்றியை ருசிக்கிறார்கள்.
எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம்; இன்னொன்று மௌனம்.
வணக்கம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆசையாக இருந்த அனைத்தும் அத்தியாவசியத் தேவையாகி விட்ட காலம் இது. நம்பரைச் சுழற்றி தொலைபேசியில் பேசுகிற அனுபவம், பிறவி பணக்காரருக்கு மட்டுமே வாய்ப்பு. அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் தொலைபேசி இருந்த காலத்தில், ‘இந்தா போன் பண்ணிக்கோ’ என்று யாராவது வாய்ப்பு தந்தாலும், மறுமுனையில் அழைத்துப் பேச பெரும்பாலானவர்களுக்கு ஆள் இருக்காது. ஒரு பணக்காரர் இன்னொரு பணக்காரரை மட்டுமே அழைக்க முடியும். இன்று வீட்டிற்கு குறைந்தது நான்கு செல்போன்களாவது இருப்பது நிதர்சனம். தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை […]
முன்நோக்கிச் செல்லும்போது கனிவாயிருங்கள். ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால், யாராவது உதவுவார்கள்.
இந்திய சுதந்திரம் குறித்து பேசும் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, நடுக்கும் குளிரில் பிரிட்டன் தலைநகரம் லண்டனுக்கு ஒற்றை வேட்டியை கம்பீரமாக அணிந்தபடி சென்றார் மகாத்மா காந்தி. பிரிட்டிஷ் மகாராணியையும் மன்னரையும் சந்தித்துப் பேசிவிட்டு பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியில் வந்த காந்தியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்… ‘‘மன்னர் அணிந்திருந்த ஆடம்பரமான உடைகளைப் பார்த்ததும், குறைவாக உடுத்தியிருக்கிறோம் என உங்களுக்குத் தோன்றியதா?’’காந்தி சிரித்தபடியே சொன்னார்… ‘‘எங்கள் இரண்டு பேருக்கும் போதுமான அளவு உடையை அவர் அணிந்திருந்தார்!’’ அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் […]
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் செய்யப்பட்டவை!
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.