நாட்டில் திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவில் ஒரு பயில்வான் வித்தை காட்டுகிறார். இரும்புக் கம்பியை கையால் வளைத்துக் காட்டுகிறார். கருங்கல்லைக் கையால் உடைக்கிறார். முடிவில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சக்கையை மட்டும் மிச்சம் வைக்கிறார். ‘‘இந்த எலுமிச்சை பழ சக்கையிலிருந்து மேலும் ஒரு துளி எலுமிச்சை சாறை யாராவது பிழிந்து விட்டால் அவருக்கு 100 பொற்காசுகள் தருகிறேன்’’ என்று சவால் விடுகிறார் பயில்வான். ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வந்து பிழிகிறார்கள். சாறு வரவில்லை. பலசாலிகள் […]
ஒரு பறவை காலை முதல் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. எங்குமே கிடைக்கவில்லை. நெடு நேரம் தேடிய பிறகு மரத்தின் அடியில் சில பெர்ரி பழங்கள் விழுந்து கிடந்ததைப் பார்த்தது. ஆசையுடன் அவற்றைக் கொத்த கீழே இறங்கும்போது, எங்கிருந்தோ பெரிய பூனை ஒன்று பறவை மீது பாய்ந்தது. பூனையிடமிருந்து தப்பித்து இரை தேடப் போகும்போது பாம்பொன்று துரத்தியது. பசியில் இருந்த பறவைக்கு உயிர் பயமும் வர, மேலே மேலே பறந்தது. மிருகங்கள் இல்லாத இடமாக, பாம்புகள் இல்லாத […]
நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் முன்பு தயக்கத்துடன் நின்றார்கள். ‘‘சார், உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும். நீங்க முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பை கவனித்து, குறிப்பு எடுத்ததைப் பார்த்தோம்...’’ அந்தக் கல்லூரியில் வகுப்புகள் உரைகளாகத்தான் நடக்கும். யார் வேண்டுமானாலும் எந்த வகுப்பிலும் போய் உரைகளைக் கேட்டுக் கொள்ளலாம். ‘‘ஆம், எனக்கொரு சந்தேகம் அதனால் போய் கற்றுக்கொண்டேன்’’ என்றார் கல்லூரி முதல்வர். ‘‘நாங்களே முதலாம் ஆண்டு வகுப்புகள் எதையும் கவனிக்க மாட்டோம். ஏன், மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்குக்கூட […]
‘‘இவ்வளவு குறைவான படைகளை வைத்திருக்கும் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். அதிக படைபலத்தை வைத்திருக்கும் நான் ஏன் தோற்கிறேன்?’’ என்று மன்னரிடம் பக்கத்து நாட்டு மன்னர் நட்பாகக் கேட்கிறார். ‘‘அடுத்தமுறை போர் நடக்கும்போது நீங்களும் ஒரு படைவீரனாக வேடமிட்டு வந்தால் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்’’ என்கிறார் மன்னர். சில நாட்களில் கிழக்கு திசை நாட்டிலிருந்து ஒருவர் போர் தொடுத்து வருகிறார். விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பக்கத்து நாட்டு அரசரும் ஒரு படைவீரனாக வேடமிட்டு சிறிய படை கொண்ட […]
ஒரு கிராமத்தில் பலூன் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் விதவிதமான பறக்கும் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். வண்டியைத் தள்ளியபடி,, ‘‘பறக்கும் பலூன்... பறக்கும் பலூன்...’’ என்று கூவிக் கூவி விற்றுக்கொண்டே வந்தார். அப்போது மரத்தடியில் ஒரு சிறுவன் தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான். பலூன் வியாபாரி அவன் மேல் இரக்கப்பட்டு, ‘‘ஏன் தம்பி அழுகிறாய்?’’ என்று பரிவுடன் விசாரித்தார். ‘‘கருப்பாக இருப்பதால் என் நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்’’ என்று சொல்லிச் சிறுவன் அழுதான். பலூன் வியாபாரி யோசித்தார். […]
ஒருவன் விலையுயர்ந்த காரில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கார் மீது ஒரு செங்கல் விழுந்தது. கோபத்துடன் சட்டென்று காரை நிறுத்திவிட்டு, செங்கல் வந்த திசையை நோக்கிச் சென்றான். அங்கே ஒரு சிறுவன் தயங்கியபடி இவனைப் பார்த்தான். ‘‘சார்! தப்பா நினைச்சிக்காதீங்க. இவன் என் அண்ணன். நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இந்த நடைப்பாதை சறுக்கில் சக்கர நாற்காலி இறங்கும்போது அவன் நிலைதடுமாறி விழுந்துவிட்டான். என்னால் அவனைத் தூக்க முடியவில்லை. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் யாரும் […]
ஒரு வழிப்போக்கன் அந்தக் கிராமத்துக்கு வந்தான். அங்கே அருமையான விவசாய நிலம் இருந்தது. நிலத்தின் சொந்தக்காரன் வீடும் அருகிலேயே இருந்தது. வழிப்போக்கன் போய், தண்ணீர் கேட்டபடி பேச்சு கொடுத்தான். ‘‘அருமையான நிலம் வைத்திருக்கிறீர்களே, நெல் பயிரிடுவீர்களோ?’’ ‘‘இல்லை, மழை பெய்யாவிட்டால் நெல் வாடி விடும். அதனால் நெல் பயிரிடுவதாக இல்லை!’’ ‘‘அப்படியானால் பருத்தி பயிரிடுவீர்களா?’’ ‘‘பருத்தியைப் பூச்சிகள் தாக்கி அழித்துவிட்டால் என்ன செய்வது? அதனால் அதையும் செய்வதாக இல்லை.’’ ‘‘காய்கறிகளாவது பயிரிடலாமே?’’ ‘‘அவை சீக்கிரம் அழுகிவிடும். நல்ல விலையும் கிடைக்காது. அதனால் அந்த எண்ணம் இல்லை.’’ ‘‘உங்கள் வாழ்க்கையில் தினம் தினம் பசியை அனுபவித்து வருகிறீர்களா?’’ வழிபோக்கன் கேட்டான். ‘‘எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?’’ - விவசாயி ஆச்சரியப்பட்டான். ‘‘பாதுகாப்பாக கப்பல் ஓட்டவே முடியாது; கரையில் நின்றால் சம்பாதிக்கவும் முடியாது. பாதுகாப்பாக பயிரிடவும் முடியாது; பயிரிடப் பயந்தால் சோறு உண்ணமுடியாது’’ என்று சொல்லி விடைபெற்றான் வழிப்போக்கன்.
அரசர் ஓவியப் போட்டி நடத்தினார். போட்டியின் தலைப்பு, ‘அமைதி’. எந்த ஓவியம் பார்ப்பவர் மனதில் அமைதியை ஏற்படுத்துகிறதோ அதுவே முதல் பரிசு பெறும் என்று அறிவித்தார். நாட்டின் பல ஓவியர்கள் கலந்துகொண்டு தங்கள் அறிவையும் திறமையையும் கலந்து வரைந்தார்கள். அமைதியான நதி, இயற்கை எழில் கொஞ்சும் காட்சி, நிம்மதியாகத் தூங்கும் குழந்தை... இப்படிப் பலரும் வரைந்த பலவிதமான ஓவியங்களை அரசர் பார்த்தார். முடிவில் ஓர் ஓவியத்துக்குப் பரிசை அறிவித்தார். பலருக்கும் அதைப் பார்த்து ஆச்சரியம். […]
ஒரு வர்மக்கலை வல்லுநரிடம் வர்மம் கற்றுக்கொள்ள ஒருவன் விரும்பினான். மிக வேகமாக அக்கலையைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான். ‘‘ஐயா, இக்கலையைக் கற்றுக்கொள்ள முழுமையாக எத்தனை வருடங்கள் ஆகும்?” “பத்து வருடங்கள் ஆகும்” ‘‘நான் வார இறுதியில் ஓய்வு எதுவும் எடுக்காமல் பயிற்சி செய்து கற்றுக்கொண்டால் எவ்வளவு காலம் ஆகும்?” “இருபது வருடங்கள்.” ‘‘உணவு உண்ணும் நேரத்தைத் தவிர அனைத்து நேரத்திலும் உழைத்துக் கற்றால்?” ‘‘அப்போது முப்பது வருடங்கள் ஆகும்” […]
அவர், மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர். உறவினர் கல்யாணத்துக்கு வந்திருந்தார். கண்டக்டராக வேலைபார்த்து ரிட்டயர் ஆன, தன் வயதான அப்பாவிடம், அந்தக் கல்யாண வீட்டில், ‘‘அப்பா! 500 ரூபா இருந்தா கொடுங்க. என்கிட்ட இப்ப இல்ல’’ என்று கேட்கிறார். அப்பா உடனே, ‘‘இந்தாப்பா’’ என்று தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுக்கிறார். ‘‘ஏன்பா தாத்தா கிட்ட பணம் கேக்கறீங்க? உங்ககிட்ட இருக்குதானே’’ என்கிறாள் மகள். ‘‘இருக்கலாம். ஆனா, இப்படி அப்பாகிட்ட […]