தினம் ஒரு கதை - 31

வீட்டில் தனியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, மருந்து பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டு விட்டாள். விழுந்த வேகத்தில் அதன் மூடி திறந்து, பாதி மருந்து வெளியே கொட்டிவிட்டது.  வேலைக்கு சென்ற அம்மா திரும்பி வந்து திட்டுவாரே என்று பயந்தாள். மருந்து பாட்டிலில் நீரை ஊற்றினாள். குலுக்கினாள். பாட்டில் நிறைந்திருப்பது போல ஏற்பாடு செய்து விட்டு அமைதியாக இருந்து கொண்டாள்.  இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளின் குட்டித்தம்பிக்குக் காய்ச்சல் வந்தது. காய்ச்சல் குறைவதற்காக இவள் நீர்விட்டு கலக்கியிருந்த மருந்தில் […]

Read More
தினம் ஒரு கதை - 30

கிராமத்தில் வாழ்ந்த இளைஞன் ஒருவன், நகரத்துக்குப் பிழைப்பு தேடிச் சென்றான். நகரத்துக்குப் போக வேண்டுமானால் ஒரு காட்டைக் கடக்க வேண்டும்.  அங்கே ஓர் ஓநாய் அவனைத் துரத்தியது. ஓநாயிடமிருந்து தப்பிப்பதற்காக வியர்க்க விறுவிறுக்க ஒடினான். ஒரு கரடி அவனைக் காப்பாற்றியது. கரடிக்கு நன்றி சொன்னான். கரடி அவன் எதற்குப் போகிறான் என விசாரிக்கிறது. பிறகு அவனை கிராமத்துக்கே போய் அது சொல்லும் மந்திரத்தின் அர்த்தம் தேடச் சொல்கிறது.  அந்த மந்திரம், ‘எள்ளும் உறியே பனி எடுத்தால் புல்லும் […]

Read More
தினம் ஒரு கதை - 29

பள்ளி மாணவர்கள் உணவு இடைவேளையின்போது வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மரியா டிபன் பாக்ஸை திறந்தாள். அதில் கம்பங்களியும், வேர்க்கடலை துவையலும் இருந்தன. அதைப் பார்த்து கவிதா, ‘‘என்ன இது, பாக்கவே ஒருமாதிரி இருக்கு’’ என்று கேலி செய்தாள். சப்பாத்தி ரோல், சாதம் என்று மற்றவர்கள் கொண்டு வந்திருக்க, மரியா கொண்டு வந்த கம்பங்கூழைப் பார்க்க அவர்களுக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது.  மரியா மற்றவர்களின் கிண்டலால் மனம் வருந்தி, சாப்பிடாமல் எழுந்து போய்விட்டாள். அன்று மதியம் அறிவியல் வகுப்பில் […]

Read More
தினம் ஒரு கதை - 28 

அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனிடம் அவர் நண்பர் ஒருவர் வேதனையுடன் வந்தார். எப்போதும் வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பதாக புலம்பினார். அழுதார். இனிமேல் தன்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்று இயலாமையை வெளிப்படுத்தினார். நண்பர் பேசப் பேச, லிங்கன் கரும்பலகையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ‘‘நான் வேதனையுடன் புலம்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறுதலோ யோசனையோ சொல்லாமல் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்க எப்படி மனம் வந்தது?’’ என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார் நண்பர். ‘‘என் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை […]

Read More
தினம் ஒரு கதை - 27

ஒரு நாட்டில் முரட்டுத்தனமான ராஜா ஒருவர் இருந்தார்.  அவர் கட்டளையிட்டால் அது நடந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்.  அந்நாட்டின் சிறந்த கட்டடக் கலைஞரை அழைத்து “நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. மூன்று நாட்களில் வானில் பறக்கும் அரண்மனை ஒன்று கட்டித்தர வேண்டும். எவ்வளவு வேலையாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்றார்.  கட்டிட கலைஞர், ராணி, மந்திரி என்று யார் சொன்னாலும் ராஜா கேட்பதாயில்லை. “மூன்று நாட்களுக்குள் கட்டித்தரவில்லை […]

Read More
தினம் ஒரு கதை - 26

குரு ஒருவர் சீடர்களோடு நடை பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு நாய் தாகத்தில் மயக்கமாகி, மூச்சிரைத்துக் கிடந்தது. ஒரு சொட்டு நீரை யாராவது அதன் வாயில் ஊற்றி விட மாட்டார்களா என்று காத்துக் கிடந்தது. அதைப் பார்த்த குரு தன் சீடர்களிடம், ‘‘அருகில் ஒரு கிணறு இருக்கிறது. அதிலிருந்து யாராவது நீர் எடுத்துவந்து அதன் தாகம் தணியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டார். கிணற்றில் நீர் எடுக்கப் போன சீடர்கள், அந்த இடத்தில் ஏதோ விவாதித்துவிட்டுத் […]

Read More
தினம் ஒரு கதை - 25

ஒருவர் விடுமுறையன்று வீட்டுத் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அங்கே ஒரு கிளியை கழுகு துரத்துவதைப் பார்த்தார். கிளி அங்கும் இங்கும் பறந்து தப்பிக்க கடும் முயற்சி செய்தது. கழுகு விடவில்லை. வேறு வழியே இல்லாமல் அவர் கையில் வந்து அமர்ந்தது கிளி. அவர் கழுகை விரட்ட, கழுகு பயந்து பறந்தோடிவிட்டது. கிளியை அன்புடன் பார்த்து, ‘‘கிளியே! நான் இருக்கிறேன் உனக்கு’’ என்று சொல்லி, குடிக்க பாலும், சுவைக்க பழங்களும் கொடுத்தார். பிறகு, ‘‘நீ என்னுடன் இருந்து விடு […]

Read More
தினம் ஒரு கதை - 24

அமெரிக்க அரசியல் மேதையும் பல்துறை வல்லுநருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு செய்தி நிறுவனம் நடத்தினார். அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்றைப் புரட்டிய வாடிக்கையாளர், அதன் விலையை அங்கிருந்த ஊழியரிடம் கேட்டார். ‘‘ஒரு டாலர்’’ என்றார் அவர். விலையைக் குறைக்க சொல்லி வாடிக்கையாளர் நெடு நேரம் அர்த்தமில்லாமல் பேரம் பேசினார். ‘‘இது தரமான புத்தகம். ஒரு டாலருக்குக் கீழே விலையைக் குறைக்க முடியாது’’ என்றார் ஊழியர். ‘‘உங்கள் முதலாளியைக் கூப்பிடுங்கள். அவரிடம் பேரம் பேசிக் கொள்கிறேன்’’ என்று […]

Read More
தினம் ஒரு கதை -23

ஆந்தை சூட்கேஸில் எல்லாவற்றையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த கழுகு கேட்டது, ‘‘என்ன கிளம்பிவிட்டாய். எங்கே போகிறாய்?’’ ‘‘நான் பக்கத்துக் காட்டுக்குப் போகிறேன்.’’ ‘‘ஏன், இந்த காடு பிடிக்கவில்லையா?’’ ‘‘ஆம். இங்கே இரவு நேரத்தில் நான் அலறுவது பலருக்கும் பிடிக்கவில்லையாம். கிண்டல் செய்கிறார்கள். அதனால் போகிறேன்.’’ ‘‘சரி, பக்கத்துக் காட்டுக்கு போனால் மட்டும் உன் குரல் மாறி விடுமா என்ன?’’ ஆந்தை வெகுநேரம் யோசித்து, ‘‘மாறாதே... அது எப்படி மாறும்? இதே குரல்தான் இருக்கும்’’ […]

Read More
தினம் ஒரு கதை -22

கடற்கரையை ஒட்டிய காடு அது. அங்கே ஒரு முயல் துள்ளி துள்ளி ஒடும் போது யானையும் திமிங்கலமும் பேசுவதை கேட்டது. “நான் தான் தரையில் வாழும் விலங்குகளில் பெரியவன்” யானை சொன்னது.“நான் தான் கடலில் வாழும் விலங்குகளில் பெரியவன் “திமிங்கலம் சொன்னது. “நாம் இருவரும் சேர்ந்தால் இந்த காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் நமக்கு அடிமையாக்கலாம்” யானை ஆணவத்தால் பேசியது.“ஆம் நாம் இணைந்து காட்டில் உள்ள அனைவரையும் அடி பணிந்து நமக்கு வேலை செய்ய வைப்போம்” திமிங்கலமும் […]

Read More
crossmenu