நேரம்தான் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த நாணயம். அந்த ஒற்றை நாணயத்தை எப்படிச் செலவழிக்கலாம் என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதை மற்றவர்கள் செலவிட அனுமதிக்காதீர்கள்.
கண்களைத் திறந்து பாருங்கள்..அனைவரும் தெரிவார்கள். கண்களை மூடிப்பாருங்கள்... உங்களுக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்; அது என்ன செய்கிறது என்று பாருங்கள். கடந்து போய்க் கொண்டே இருங்கள்!
உலகம் முழுவதும் மனிதர்கள் பல்வேறு மொழிகளில் பேசுகிறார்கள். ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
எந்த வேலையைச் செய்யவும் உங்களால் நேரத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது; நீங்கள்தான் நேரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சார்லஸ் பிரக்ஸ்டன்
ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வது, கிட்டத்தட்ட எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது போன்றதுதான்!
வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள். 1. நம்பிக்கை2. சத்தியம்3. உறவு4. இதயம்இவை உடைந்தால் சத்தம் கேட்காது. ஆனால், வாழ்க்கை முழுக்க அந்த வலி இருக்கும்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் வேகப்படுத்துவதை விட வாழ்வது மிக முக்கியமானது. மகாத்மாகாந்தி
நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்; சாய்வு நாற்காலியாக அல்ல! - ஜான் கென்னடி