வணக்கம். ஒரு ஆப்பிள் பழத்தில் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பதை நம்மால் எண்ணிப் பார்த்து சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு விதையில் எத்தனை ஆயிரம் ஆப்பிள் பழங்கள் இருக்கும் என சொல்லமுடியாது. விதைகளின் வீரியம், ஆராய்ச்சிகளைத் தாண்டி ஆச்சரியம் தரக் கூடியது. மூன்று ஆப்பிள்களுக்கு உலக வரலாற்றில் முக்கியமான இடம் இருக்கிறது. முதல் ஆப்பிள், மத நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உலகத்தில் மனிதர்கள் உருவாக ஆப்பிள் பழமே காரணம் என்பார்கள். கடவுளின் எச்சரிக்கையை மீறி, […]
‘நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்?’ - இந்தக் கேள்விக்கு ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என்று பள்ளி மாணவர்கள்கூட பதில் சொல்லிவிடுவார்கள். ‘நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா’ என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன்பு, தன் காலடி தடத்தைப் பதித்து வரலாற்றில் இடம் பெற்றிருக்க வேண்டியவர் எட்வின் சி.ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்கை சுமந்து சென்ற அப்பல்லோ விண்கலத்தின் […]
வணக்கம். ‘திட்டமிடத் தவறுகிறவன், தவறு செய்யத் திட்டமிடுகிறான்’ என ஒரு பொன்மொழி இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வாசகம் இது. குடும்பத்தைச் சரியாகத் திட்டமிட்டு நிர்வாகம் செய்யாது போனால், அச்சாணி கழன்ற வண்டி போலக் குடும்பம் ஒரு சூழலில் திடீரெனக் குடை சாய்ந்துவிடும். இருப்பதை வைத்துப் போடுவதற்குப் பெயர்தான் பட்ஜெட். பறப்பதற்கெல்லாம் ஆசைப்பட ஆரம்பித்தால், மாயமானுக்கு ஆசைப்பட்டு சீதை சந்தித்தது போன்ற துயரங்களே கிடைக்கும். கிராமத்துப் பக்கம் இப்போதும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது, ‘மாப்பிள்ளைக்கு […]
வணக்கம். போக வேண்டிய இடத்திற்கு அவசர அவசரமாக ஓடுவதைவிட, நேரத்தில் கிளம்புவதே சரியானது. ஒரு காரியத்தைப் பதறாமல் செய்ய வேண்டுமானால், சரியான நேரத்தில் அந்தக் காரியம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வளவு விலைகொடுத்தாலும் கடந்துபோன ஒரு நொடியைக்கூட வாங்க முடியாது என்பதுதான் காலத்தின் தனித்தன்மை. அது யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை! ஓர் ஆண்டின் நிறைவுப் பகுதியில் நிற்கும்போது, ‘இந்த வருடம் நாம் என்ன செய்தோம்’ என யோசித்துப் பார்ப்போம். ‘இன்னும் உருப்படியாக நிறைய விஷயங்களைச் செய்திருக்கலாமே’ […]
வணக்கம். வேட்டிக்கு ஒரு பிராண்ட் பெயர் வைத்து, நம் பாரம்பரிய உடையான வேட்டியை மதிப்பிற்குரியவர்களின் ஆடையாக மாற்றிய பெருமை கொண்டது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். நற்சிந்தனைகளை நம் மக்களிடம் கொண்டு செல்வதற்காக ‘வெண்மை எண்ணங்கள்’ என்ற மாத இதழை 2012 நவம்பரில் ராம்ராஜ் காட்டன் தொடங்கியது. லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘வெண்மை எண்ணங்கள்’. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சந்தா செலுத்தி இந்த இதழைப் படிக்கின்றன. ராம்ராஜ் ஷோரூம்களில் ஆடைகள் வாங்க வருவோருக்கு அன்புப்பரிசாகவும் இந்த […]