ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்று, பாதுகாப்பற்ற சூழலில் பணத்தைப் பறிகொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. ‘பாதுகாவலர்கள் இல்லாமல் ஏ.டி.எம் மையங்கள் செயல்படக் கூடாது’ என காவல் துறை அறிவுறுத்தியதால், பல வங்கிகளின் ஏ.டி.எம்கள் இரவு நேரத்தில் மூடப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஏ.டி.எம் பயன்பாட்டுக்கு கட்டணமும் விதிக்கின்றன வங்கிகள். ஏ.டி.எம் மையங்களை எச்சரிக்கையோடு பயன்படுத்துவது எப்படி? * வங்கிக் கிளையோடு இணைந்துள்ள ஏ.டி.எம்மையோ, பெரிய வணிக மற்றும் அலுவலக வளாகங்களில் இருக்கும் ஏ.டி.எம்களையோ பயன்படுத்துங்கள். எப்போதும் மக்கள் நடமாட்டமும் […]
வெளிநாட்டில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் அழகான தேவாலயம் இருந்தது. அதன் பொறுப்பைக் கவனிக்க கறுப்பர் இனத்தவர் ஒருவர் வந்தார். இனப் பாகுபாடு காட்டும் குறுகிய மனம் படைத்த சிலர், அவரை நிறம் காரணமாக வெளியே போகச் சொன்னார்கள். அவரோ அதைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையை செம்மையாகச் செய்து கொண்டிருந்தார். இவரை எப்படியாவது தேவாலயப் பொறுப்பிலிருந்து துரத்த வேண்டும் என்று நினைத்த அடிப்படைவாதிகள், ஆயுதங்களோடு அவரைத் தாக்க வந்தார்கள். அவர் அதற்கும் கலங்காமல் தாக்க வந்தவர்களின் கண்களைக் […]
‘வைகறை துயிலெழு’ என ஔவையார் சொன்னார். வைகறை என்பது அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை. சூரிய உதயத்துக்கு முன்பாக வைகறையின் மையத்தில் & அதாவது காலை நான்கு மணிக்கு எழுவது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். சூரிய மறைவிற்குப் பின் தூங்கி, சூரிய உதயத்திற்கு முன்பு எழும் வழக்கமே ‘பின் தூங்கி முன் எழுவது’ எனப்படுகிறது. உடல் ஆரோக்கியம், செல்வம், அறிவு எல்லாம் தரும் இந்த இயற்கை சார்ந்த தூக்க முறையால் நமக்கு பத்து […]
மலைப்பகுதியில் ஒருவன் நிறைய கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் பயிரிட்டான். கீழே சமதளத்தில் இருக்கும் மக்கள் அதை நல்ல விலைக்கு வாங்குவார்கள் என்று நினைத்து, ஒரு மாட்டு வண்டியில் அனைத்து காய்கறிகளையும் ஏற்றிக்கொண்டு கீழே வந்தான். வரும்போது சமதள நிலப்பரப்பு முதலில் கொஞ்ச தூரம் செழிப்பாக இருந்தது. போகப் போக பசுமை குறைவாக இருந்தது. பசுமையே இல்லாத இடத்துக்கு காய்கறியைக் கொண்டு போனால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று கணக்கிட்டு, வண்டியை ஓட்டிக்கொண்டே இருந்தான். வழியில் சிறுவர்கள் சாப்பிட […]
யாராவது உங்களை மரியாதைக் குறைவாகப் பேசினால், ஈரத்தை உறிஞ்சும் பஞ்சு போல ஆகிவிடாதீர்கள். அதன் சுமை உங்களை மூழ்கடித்துவிடும். அவர்களின் வார்த்தைகளைக் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓட விட்டுவிடுங்கள். உங்களுக்கு எதிரான எந்தவார்த்தையும் உங்களைப் பாதிக்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு மனிதன் சிறிய குதிரை உருவத்தில் ஒரு கேக்கை செய்து வைத்துவிட்டுத் தூங்கிவிட்டான். அவன் தூங்கும்போது, ஒரு புனித நட்சத்திரத்தின் ஒளியால் அந்த கேக் குதிரை உயிர்பெற்றது. இங்கும் அங்கும் தாவித் தாவி ஓடியது. தன்னை செய்த மனிதனிடம், ‘‘வா, என் மேல் ஏறிக்கொள். நான் உன்னை சுமக்கிறேன்’’ என்றது. அதைப் பார்த்து அவன் சிரித்து, ‘‘உன்னால் முடியாது. நீ குதிரை அல்ல, கேக். உனக்கு சேனமும் லாடமும் இருந்தால் மட்டுமே ஓட முடியும்’’ என்றான். அந்தக் […]
காட்டில் நரி ஒன்று இருந்தது. அதுதான் அந்தக் காட்டில் பெரிய பணக்காரன். பல விலங்குகளுக்கு கடன் கொடுத்து உதவும் நல்ல குணமும் அதற்கு உண்டு. அந்த நரியும், ஒரு கோழியும் பேருந்து நிலையத்தில் ஒருநாள் காத்திருந்தன. பொழுது போகவில்லை என்பதால், ஆப்பிள் காட்டு குரங்கைப் பற்றி நரியிடம் பேசியது கோழி. ‘‘நான் அந்தக் குரங்கு வீட்டருகே போனேன். அப்போது அது தன் குடும்பத்தினருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டது’’ என்றது. ‘‘நீ கண்ணால் பார்த்தாயா’’ என்று நரி கேட்டது. […]