யார் காரணம்?

ஒரு கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுகூடி, ஒரு படகுப் போட்டி அணியை உருவாக்கினர். அவர்களுக்கு பயிற்சியாளர்கள் என்று யாருமில்லை. டி.வியில் எப்போதாவது காட்டப்படும் படகுப்போட்டிகளை பார்த்ததோடு சரி! இயல்பாகவே அவர்களது தொழிலாக படகு ஓட்டுதல் இருந்தது. கடலிலிருந்து அவர்களது கிராமத்தின் வழியே நிலங்களை ஊடுருவிச் செல்லும் ஒரு உப்பங்கழியில் படகில் சென்று மீன் பிடிப்பது அவர்களது தினசரிக் கடமை. மாலை வரை மீன் பிடித்துவிட்டு, அதன்பிறகு அதே உப்பங்கழியில் வேகமாக படகு ஓட்டிப் பயிற்சி எடுப்பார்கள்.இப்படி […]

Read More
தினம் ஒரு கதை - 50

தொழிலதிபர் ஒருவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.  அவர் அலுவலகத்தில் வேலைக்குச் சேரும் இளைஞர்கள், மிகப்பெரிய லட்சிய ஆசைகள் எதுவுமில்லாமல் ஏனோதானோ என்று வேலை பார்த்தார்கள். வேலையை முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் அன்று அன்று கொடுப்பட்ட வேலைகளை மட்டும் செய்தார்கள். இவர்களை எப்படித் திருத்தலாம் என்று தொழிலதிபர் யோசித்து திணறிக் கொண்டிருக்கும்போது ரோட்டில் ஓர் இளைஞன் தஞ்சாவூர் பொம்மை விற்றுக் கொண்டிருந்து ஜன்னல் வழியே தெரிந்தது. இவருக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றால் இஷ்டம். ஒரு நபரை […]

Read More
இன்று ஒன்று நன்று!

நம்மிடம் இருப்பதிலேயே விலை மதிப்புமிக்க சொத்து நேரம்தான்; எளிதில் அழியக்கூடியக் சொத்தும் நேரம்தான்!

Read More
பாரம்பரியத்தின் பெருமை!

மனிதர்களின் அடிப்படைத் தேவைகளாக உணவும், உடையும் வரையறை செய்யப்பட்டுள்ளன. உணவு இல்லாமல் கூட ஓரிரு வேளைகள் இருந்து விடலாம். ஆனால் மானம் காக்கும் உடை அத்தியாவசியம். தென்னையிலும், பனையிலும் நார் எடுத்து பெட்டிகளையும் வலைகளையும் செய்யக் கற்றுக் கொண்ட நம் நாட்டினர், அதன் தொடர்ச்சியாக பருத்தியிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக்கவும், அந்தப் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் கற்றார்கள். ஆடை நாகரிகத்தில் மாபெரும் புரட்சியான இது, இந்தியாவில்தான் நிகழ்ந்தது என்பது நமக்கெல்லாம் பெருமை. வெகு விரைவிலேயே நுண்மையும் மென்மையும் மிக்க […]

Read More
பண உறுதிமொழிகள் பத்து!

1. அதிகம் சேமிப்பேன் சேமிப்பின் அவசியம் நம்மில் பலருக்கும் தெரியும். ஆனாலும், ‘வரவுக்கும் செலவுக்கும் இழுபறியாக இருக்கும்போது எங்கே சேமிப்பது’ என்ற நினைப்பே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதனாலேயே நமது பட்ஜெட்டில் கடைசி இடம்தான் சேமிப்புக்கு ஒதுக்கப்படுகிறது. ‘சேமிப்பு என்பது மாசக்கடைசியில் மிச்சம் இருக்கும் பணத்தை எதிர்காலத் தேவைக்காக எடுத்து வைப்பது’ என்ற நினைப்பு உங்களுக்கு இருந்தால், இந்த ஆண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி நினைத்தால் எந்த மாதத்திலும் சேமிக்க உங்களிடம் ஒரு ரூபாய்கூட மிச்சம் இருக்காது. […]

Read More
தினம் ஒரு கதை - 49

பள்ளி மாணவன் ஒருவன் தினமும் மதிய உணவு இடைவேளையில் அம்மா கொடுத்த உணவில் பாதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதி உணவைக் குப்பையில் கொட்டிவிடுவான். சக நண்பர்கள், ‘‘ஏன் இப்படி உணவை வீணாக்குகிறாய்? உன் அப்பா டிரைவராக வேலை பார்த்து சம்பாதிக்கும் காசு அல்லவா அது’’ என்று கேட்டார்கள். ‘‘என் உணவுக்கான விலை அதை விளைவித்த விவசாயிக்குக் கிடைத்து விட்டது. அதன்பின் அதை நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? எனக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு பசிக்கும் என்று […]

Read More
இன்று ஒன்று நன்று!

நான் தான் என் நேரத்தைத் தீர்மானிக்க வேண்டும்; என் நேரம் என்னைத் தீர்மானிப்பதை அனுமதிக்க முடியாது.

Read More
தினம் ஒரு கதை - 48

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்த நியூ மெக்சிகோ மாகாணத்தில் சில கிராமங்களை நோக்கி வெள்ளம் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் ஒரு டெலிபோன் எக்சேஞ்ச் இருந்தது. அங்கிருந்துதான் அந்த கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு கொடுப்பார்கள். வெள்ளம் முதலில் டெலிபோன் அலுவலகத்தைத்தான் தாக்கும் என்பதால் அனைத்து ஊழியர்களும் எச்சரிக்கையாக எழுந்து ஓடிப்போய்விட்டனர். ஆனால் புரூக்ஸ் என்ற பெண் மட்டும் அப்படி எழுந்து போகவில்லை. ‘வெள்ளம் வந்தால் வரட்டும், மக்களைக் […]

Read More
இன்று ஒன்று நன்று!

ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு, சிதறவிட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத்தான் தெரியும்.

Read More
தினம் ஒரு கதை - 47

காட்டில் ஒரு வேடன் தன் மகனோடு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மகன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டு வந்தான். ‘‘அப்பா, மனிதர்களிடமிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதேபோல வன விலங்குகளிடம் இருந்தும் நாம் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா?’’ ‘‘ஆமாம் மகனே! இயற்கையில் இருக்கும் எல்லாமே நமக்கு ஆசான்கள். எல்லாவற்றிடம் இருந்தும் நாம் ஏராளமான பண்புகளைக் கற்றுக்கொள்ள முடியும்!’’ ‘‘அப்பா, புலியிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா?’’ ‘‘ஆம். புலியிடம் இருந்து வேகத்தைக் கற்றுக் கொள்ளலாம்.’’ […]

Read More
1 18 19 20 21 22 37
crossmenu