வணக்கம். ‘பிறை நிலாவைப் பார்த்து, இரண்டு பக்கமும் குறுகி இருக்கிறது என்கிறார்கள். இல்லை, அது இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கிறது’ என்று இக்பால் என்கிற கவிஞர் எழுதி இருந்தார். ரொம்ப நேரம் மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்த சிந்தனை இது. எல்லாமே நாம் பார்க்கிற பார்வையில்தான் இருக்கு. ‘கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் அங்கு இல்லை.. கடவுள் மட்டும் தெரிந்தால் அது கல்லாய் இருக்க வாய்ப்பில்லை’னு நம் முன்னோர்கள் தெளிவாச் சொல்லிட்டுப் போன விஷயம்தான். எந்த விஷயத்திலேயும் நல்லதும் […]
கனவுகளைத் துரத்துங்கள் ஒரு கனவு, ஒரு இலக்கு, ஒரு லட்சியம், ஒரு பார்வை, ஒரு வேட்கை... வெற்றியை விரும்பி உழைக்கும் எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. பிளஸ் 2-வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண், ஐ.ஏ.எஸ் தேர்வில் டாப் இடம், வேலை செய்யும் அலுவலகத்தில் இருப்பதிலேயே உயர்ந்த பதவி, செய்யும் தொழிலில் அந்த ஊரிலேயே முதன்மையான அந்தஸ்தைப் பெறுவது... இப்படி கனவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானவை. ஆனால், உழைப்பில் உத்வேகம் காட்டும் பலரும் வழியில் எங்கேயோ இந்த […]
'வைகறை துயிலெழு’ என ஔவையார் சொன்னார். வைகறை என்பது அதிகாலை 2 முதல் 6 மணி வரை. சூரிய உதயத்துக்கு முன்பாக வைகறையின் மையத்தில் - அதாவது காலை நான்கு மணிக்கு எழுவது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். உடல் ஆரோக்கியம், செல்வம், அறிவு எல்லாம் தரும் இந்த இயற்கை சார்ந்த தூக்க முறையால் நமக்குப் பத்து நன்மைகள் கிடைக்கின்றன...