உனக்குள் உன்னைத் தேடுமௌனமாய்ச் சொல்லியதுபாறைக்குள்ளிருக்கும் சிலை - கன்னிக்கோவில் இராஜா
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்குமுத்தமிட்டுச் சொன்னது பூமி,‘ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?’ - ஈரோடு தமிழன்பன்
உங்களால் முடியும் என நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கையே பாதி தூரம் உங்களைக் கூட்டிச் சென்றுவிடும்.
நீங்கள் செய்வதற்கு அஞ்சும் ஒரு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடியுங்கள். இப்படிப்பட்ட அனுபவங்களே உங்களுக்கு தன்னம்பிக்கை உரமேற்றும்.
உங்கள் உதடுகளிலிருந்து வெளியேறும் வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; உங்களுக்கு நீங்களே மௌனமாகப் பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகளே அந்த சக்தி படைத்தவை.
தோல்வி தவிர்க்க முடியாதது என்ற விஷயத்தை அறியாதவர்களே அதிகம் வெற்றியை ருசிக்கிறார்கள்.
எல்லா துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம்; இன்னொன்று மௌனம்.
வணக்கம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆசையாக இருந்த அனைத்தும் அத்தியாவசியத் தேவையாகி விட்ட காலம் இது. நம்பரைச் சுழற்றி தொலைபேசியில் பேசுகிற அனுபவம், பிறவி பணக்காரருக்கு மட்டுமே வாய்ப்பு. அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் தொலைபேசி இருந்த காலத்தில், ‘இந்தா போன் பண்ணிக்கோ’ என்று யாராவது வாய்ப்பு தந்தாலும், மறுமுனையில் அழைத்துப் பேச பெரும்பாலானவர்களுக்கு ஆள் இருக்காது. ஒரு பணக்காரர் இன்னொரு பணக்காரரை மட்டுமே அழைக்க முடியும். இன்று வீட்டிற்கு குறைந்தது நான்கு செல்போன்களாவது இருப்பது நிதர்சனம். தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை […]
முன்நோக்கிச் செல்லும்போது கனிவாயிருங்கள். ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால், யாராவது உதவுவார்கள்.