பாலைவனம் என்றால் மணலாகக் கொட்டிக் கிடக்கும் இடம் மட்டும் அல்ல. செடி, கொடிகள் எதுவும் வளரமுடியாத பனிப்பிரதேசங்களும் பாலைவனம்தான். அப்படி ஒரு பாலைவனத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அப்பாவும் மகனும் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் நடக்க நடக்க பனிப்பாறைகள்தான் இருந்தனவே தவிர வேறு எதுவுமில்லை. பிடித்து சாப்பிட மீன் இருக்கும் குளம், குட்டை என்று எதுவுமில்லை. எல்லாமே உறைந்திருந்தன. பசியால் உயிர் போய்விடுமோ என்ற பயம் மகனுக்கு ஏற்பட்டது. அப்பாவைப் பார்த்தான். ‘‘ஏதாவது வழி இருக்கும், தளர்ந்து […]
மேடையில் மட்டுமில்லை... மனிதர்களோடு பேசுவதற்கும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டில், அலுவலகத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், உறவுகள் மத்தியில், நண்பர்கள் கூட்டத்தில், தொலைபேசியில், ஏன்... அறிமுகம் இல்லாத புது இடத்திலும் புது மனிதர்களிடமும் பேச்சுதான் நாம் விரும்பும் விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது. நாம் விரும்புவது எதுவானாலும், அதைப் பேச்சின் மூலமே வெளிப்படுத்த முடியும்; அதன் விளைவான செயல்களால் அடைய முடியும். அதற்கு எப்படிப் பேச வேண்டும்? * பேச்சு என்பது வெறுமனே தகவல் பரிமாற்றம் அல்ல. ‘இதை […]
பெற்றோரை பட்டினி போட்டு தவிக்க விடும் பிள்ளைகள்... சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு வீதியில் விரட்டிவிடும் மகன்கள்... இப்படித் தொடரும் கொடுமைகள் தொடர்பாக பெற்றோர்கள் புகார் செய்தால், பிள்ளைகளைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் வந்தபோது, பெற்றோர் மீதான பாசத்தை சட்டம் போட்டு நிலைநிறுத்த வேண்டியிருக்கிறதே என எல்லோரும் வேதனைப்பட்டார்கள். ஆனால், ‘பொதுவாகவே முதியோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மனநிலை இந்தியர்களுக்கு இருக்கிறது’ என்கிறது ஒரு சர்வே. ‘ஏஜ்வெல் […]
ஒருமுறை நாரதர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு வாலிப யோகி தியானத்தில் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்திருந்தது. நாரதரின் ‘‘நாராயண...’’ நாமத்தைக் கேட்டதும் அந்த யோகி கண்விழித்துப் பார்த்தார். ‘‘நாரத பகவானே, எங்கு சென்று கொண்டிருக்கிறீர்?’’ என்றார். ‘‘நான் கைலாயம் சென்று கொண்டிருக்கிறேன்’’ என்றார் நாரதர். ‘‘அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நான் நீண்ட காலமாக சிவபெருமானை தரிசிப்பதற்காக தவம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை காலம் தவம் […]
டென்ஷனைத் துரத்துங்கள்! ‘முகம் என்பது மனதின் கண்ணாடி’ என்பார்கள். காலை நேரத்தில் பரபரப்பாக அலுவலகத்துக்கு ஓடும் பலரது மனக் கண்ணாடிகளை சற்றே நெருங்கி உற்றுக் கவனியுங்கள். அந்த முகங்களில் முழுக்கவே டென்ஷன் மண்டிக் கிடப்பதைத் தெரிந்து கொள்வீர்கள். சில முகங்கள் எண்ணெய் சட்டி போல தகிக்கும். கடுகு போட்டால் பொரிந்து தூரத்தில் போய் விழும். சில முகங்களில் அயர்ன் பாக்ஸ் போல ஆவி பறக்கும். தடிமனான படுக்கை விரிப்பைக்கூட நேர்த்தியாக அயர்ன் செய்து விடலாம். வேறு சில […]
பாதி மூடியிருக்கும் கதவை ‘பாதிக் கதவு திறந்திருக்கிறது’ என்பவனே தன்னம்பிக்கையாளன்!
கடவுள் நம்பிக்கை இல்லாதவனைக்கூட தன்னம்பிக்கை காப்பாற்றி விடலாம்; தன்னம்பிக்கை இல்லாதவனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!
அப்பா, அம்மா, மகன், மகள் நால்வரும் காரில் வெளியூர் சென்றார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்தபடி போகும்போது கார் திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது. நல்லவேளையாக அப்பாவுக்கு பஞ்சர் ஒட்டத்தெரியும். அவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். குழந்தைகளான மகனும் மகளும் அக்கறையுடன் அப்பாவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் அப்பா தங்களுக்காக அப்படி சிரமப்படுவதில் உள்ள கவலை தெரிந்தது. ஆனால் அம்மாவோ அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து, பென்சிலும் கையுமாக குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த […]