காட்டில் ஒரு வேடன் தன் மகனோடு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மகன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டு வந்தான். ‘‘அப்பா, மனிதர்களிடமிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதேபோல வன விலங்குகளிடம் இருந்தும் நாம் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா?’’ ‘‘ஆமாம் மகனே! இயற்கையில் இருக்கும் எல்லாமே நமக்கு ஆசான்கள். எல்லாவற்றிடம் இருந்தும் நாம் ஏராளமான பண்புகளைக் கற்றுக்கொள்ள முடியும்!’’ ‘‘அப்பா, புலியிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா?’’ ‘‘ஆம். புலியிடம் இருந்து வேகத்தைக் கற்றுக் கொள்ளலாம்.’’ […]
இன்னல்களும் பிரச்னைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காகக் கடவுள் வழங்கும் வாய்ப்புகள். உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் லட்சியங்களும் தகர்க்கப்படும் போது, அந்தச் சிதைவுகளுக்கிடையே தேடிப்பாருங்கள்... இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனிடம் அவர் நண்பர் ஒருவர் வேதனையுடன் வந்தார். எப்போதும் வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பதாக புலம்பினார். அழுதார். இனிமேல் தன்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்று இயலாமையை வெளிப்படுத்தினார். நண்பர் பேசப் பேச, லிங்கன் கரும்பலகையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ‘‘நான் வேதனையுடன் புலம்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறுதலோ யோசனையோ சொல்லாமல் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்க எப்படி மனம் வந்தது?’’ என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார் நண்பர். ‘‘என் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை […]
குரு ஒருவர் சீடர்களோடு நடை பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு நாய் தாகத்தில் மயக்கமாகி, மூச்சிரைத்துக் கிடந்தது. ஒரு சொட்டு நீரை யாராவது அதன் வாயில் ஊற்றி விட மாட்டார்களா என்று காத்துக் கிடந்தது. அதைப் பார்த்த குரு தன் சீடர்களிடம், ‘‘அருகில் ஒரு கிணறு இருக்கிறது. அதிலிருந்து யாராவது நீர் எடுத்துவந்து அதன் தாகம் தணியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டார். கிணற்றில் நீர் எடுக்கப் போன சீடர்கள், அந்த இடத்தில் ஏதோ விவாதித்துவிட்டுத் […]
மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக்கூடாதென்று நினைக்கிறாயோ, அதை நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே.
ஒருவர் விடுமுறையன்று வீட்டுத் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அங்கே ஒரு கிளியை கழுகு துரத்துவதைப் பார்த்தார். கிளி அங்கும் இங்கும் பறந்து தப்பிக்க கடும் முயற்சி செய்தது. கழுகு விடவில்லை. வேறு வழியே இல்லாமல் அவர் கையில் வந்து அமர்ந்தது கிளி. அவர் கழுகை விரட்ட, கழுகு பயந்து பறந்தோடிவிட்டது. கிளியை அன்புடன் பார்த்து, ‘‘கிளியே! நான் இருக்கிறேன் உனக்கு’’ என்று சொல்லி, குடிக்க பாலும், சுவைக்க பழங்களும் கொடுத்தார். பிறகு, ‘‘நீ என்னுடன் இருந்து விடு […]
அமெரிக்க அரசியல் மேதையும் பல்துறை வல்லுநருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு செய்தி நிறுவனம் நடத்தினார். அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்றைப் புரட்டிய வாடிக்கையாளர், அதன் விலையை அங்கிருந்த ஊழியரிடம் கேட்டார். ‘‘ஒரு டாலர்’’ என்றார் அவர். விலையைக் குறைக்க சொல்லி வாடிக்கையாளர் நெடு நேரம் அர்த்தமில்லாமல் பேரம் பேசினார். ‘‘இது தரமான புத்தகம். ஒரு டாலருக்குக் கீழே விலையைக் குறைக்க முடியாது’’ என்றார் ஊழியர். ‘‘உங்கள் முதலாளியைக் கூப்பிடுங்கள். அவரிடம் பேரம் பேசிக் கொள்கிறேன்’’ என்று […]