பலவீனங்களை உணருங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேளுங்கள். உங்கள் பலவீனம் எது, உங்களிடம் நீங்கள் நினைத்து நினைத்து வெட்கப்படும் குணம் எது என்பதை அறியுங்கள். முகப்பரு, எவ்வளவு அழுத்தி வாரினாலும் படியாத தலைமுடி, கூட்டமாக மனிதர்களைப் பார்த்தால் கூச்சப்பட்டு தலைகவிழ்ந்து கொள்வது என ஏதாவது ஒரு விஷயம் உங்களை தன்னம்பிக்கை இல்லாதவராக ஆக்கியிருக்கும். உங்கள் தாழ்வு மனப்பான்மைக்கு எது காரணமோ, அதற்கு ஒரு பெயர் வையுங்கள். அந்தப் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, துண்டு துண்டாக கிழித்துப் […]
வணக்கம். ஒரு ஆப்பிள் பழத்தில் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பதை நம்மால் எண்ணிப் பார்த்து சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு விதையில் எத்தனை ஆயிரம் ஆப்பிள் பழங்கள் இருக்கும் என சொல்லமுடியாது. விதைகளின் வீரியம், ஆராய்ச்சிகளைத் தாண்டி ஆச்சரியம் தரக் கூடியது. மூன்று ஆப்பிள்களுக்கு உலக வரலாற்றில் முக்கியமான இடம் இருக்கிறது. முதல் ஆப்பிள், மத நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உலகத்தில் மனிதர்கள் உருவாக ஆப்பிள் பழமே காரணம் என்பார்கள். கடவுளின் எச்சரிக்கையை மீறி, […]
உலகம் முழுவதும் மனிதர்கள் பல்வேறு மொழிகளில் பேசுகிறார்கள். ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
புகழ்பெற்ற எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ எழுதிய மிகப் பிரபலமான கட்டுரையின் சுருக்கம் இது. ஏதோ மலை ஏறுகிறவர்களுக்கான ஆலோசனைக் கட்டுரை போல இருக்கும். ஆனால் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்குமான அட்வைஸ் பட்டியல் இது. ‘மலை’ என்ற இடத்தில் வேலை, வாழ்க்கை, லட்சியம், ஆசை என எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பொருத்தி படித்துக் கொள்ளலாம்... மலையைத் தேர்ந்தெடுங்கள் ‘அந்த மலை அழகாக இருக்கும்...’, ‘இந்த மலைதான் ஏறுவதற்கு மிகவும் சுலபமானது’ என அடுத்தவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு […]
எந்த வேலையைச் செய்யவும் உங்களால் நேரத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது; நீங்கள்தான் நேரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சார்லஸ் பிரக்ஸ்டன்
ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வது, கிட்டத்தட்ட எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது போன்றதுதான்!
வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள். 1. நம்பிக்கை2. சத்தியம்3. உறவு4. இதயம்இவை உடைந்தால் சத்தம் கேட்காது. ஆனால், வாழ்க்கை முழுக்க அந்த வலி இருக்கும்.
தாமஸ் ஜெஃபர்சன் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அதற்குமுன் துணை ஜனாதிபதியாக இருக்கும்போது தனியே பயணம் மேற்கொள்கிறார். சூழ்நிலை காரணமாக சிறுநகரம் ஒன்றில் இரவு தங்க வேண்டிய நிலை வருகிறது. அப்போது திடீரென பெய்த மழையில் நனைந்து, அவர் உடையெல்லாம் சேறாகிவிட்டது. அந்த அழுக்கு கோலத்துடன் ஒரு விடுதிக்குச் சென்று, ‘‘அறை இருக்கிறதா?’’ என்றார். விடுதி உரிமையாளர் இவரின் கோலத்தைப் பார்த்து, ‘‘அதெல்லாம் இல்லை’’ என்று அலட்சியமாகச் சொன்னார். தாமஸ் ஜெபர்சன் வேறு விடுதி பார்த்துச் […]
1 நம்பிக்கையோடு நிமிர்ந்து அமருங்கள்; நில்லுங்கள்; நடந்து செல்லுங்கள்! 2 அடுத்தவர்களை கண்கள் பார்த்து, புன்சிரிப்போடு எதிர்கொண்டு, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். 3 ‘கச்சிதமான உடலமைப்பு இதுதான்’ என விளம்பரங்களும் டெலிவிஷனும் சொல்வதை நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்கள் கச்சிதம்தான்! 4 குடும்பமும் நண்பர்களும் உங்கள்மீது வைக்கும் எதிர்பார்ப்புகளைத் தூக்கி எறிந்துவிடுங்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். 5 சின்னச்சின்னதாக இலக்குகளை வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை எட்டும்போது பெரும் சந்தோஷத்தை உணர்வீர்கள். 6 உங்கள் நம்பிக்கைகளை கேள்வி […]