வணக்கம். இன்றைய காலகட்டத்தின் முக்கியமான தேவை, உதாரண புருஷர்கள். ‘இவரைப் போல வாழ வேண்டும்’ என்று தூண்டுகிற நல்ல மனிதர்கள்தான் இந்த உலகத்தின் சொத்து. யாரை நாம் ரோல் மாடலாக நினைக்கிறோமோ, அதுவே நாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், அறிஞர்கள், ஆன்மிக வாதிகள் என நம் குழந்தைகளுக்கு சிறந்தவர்களை முன்னுதாரணமாக அடையாளம் காட்டினால், அவர்கள் வாழ்க்கை சிறக்கும். உலகம் தழைக்கும். நான் என் வாழ்வில் ‘ரோல் மாடல்’ என நினைக்கும் மாமனிதர், திரையுல மார்க்கண்டேயர் நடிகர் சிவகுமார். […]
வணக்கம். ‘பணக்காரன் ஆக என்ன செய்யவேண்டும்?’ என்ற கேள்விக்கான பதிலாக, ‘தேவையைக் குறைத்துக்கொள். நீ எப்போதும் பணக்காரன்தான்’ என்று எங்கோ படித்த விஷயம் அப்படியே மனதில் கல்வெட்டாக பதிந்துவிட்டது. ‘ஈஸ்வரன்’ என்ற சொல், அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய சிவனின் பெயர். ஆக்கமும், அழிவும் தரக்கூடிய இரண்டு நிலைகளுக்கு ‘ஈஸ்வரன்’ என்ற அடைமொழி நம் மரபில் உண்டு. தொட்டதெல்லாம் துலங்கி, கோடி ரூபாய் வைத்திருப்பவனை ‘கோடீஸ்வரன்’ என்று சொல்வார்கள். அனைத்து சக்திகளையும் உள்ளடக்கியது பணம் என்று குறிப்பிடுவதுபோல, பணம் […]
உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் நமது தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளன. உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. உலக நாடுகளில் காந்திஜிக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் எண்ணிக்கை சுமார் 300. இந்தியாவில் காந்திஜிக்கு முதல் அஞ்சல் தலை அவரது 80வது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு 4 தபால் தலைகளுக்கான வடிவமைப்புப் பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக தனது […]