வாழ்க்கையில் எல்லாவற்றையும் வேகப்படுத்துவதை விட வாழ்வது மிக முக்கியமானது. மகாத்மாகாந்தி
பெரும் மக்கள் கூட்டம் ஒன்று, தங்கள் இடத்திலிருந்து இன்னொரு நிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தது. பயணத்தில் மக்களிடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்து வைக்க தலைவன் தேவை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். தங்கள் தலைவன் வலிமைமிக்கவனாக, தைரியமானவனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தங்கள் கூட்டத்தில் 10 நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த 10 பேரும் உடல் வலிமைமிக்கவர்கள். தைரியமானவர்கள். இந்த 10 பேரில் யார் தலைவனாவது என்பதை விவாதிக்க இரவில் தீ மூட்டி சுற்றி அமர்ந்திருந்தனர். […]
வேட்டைக்குப் போன இளவரசன், திரும்பி வரும்போது ஒரு முதியவரைத் தன் தேரில் கட்டி இழுத்து வந்தான். மக்கள் ‘ஏன்?’ என்று கேட்டார்கள். ‘‘இவர் என்னை ‘மடையன்’ என்று சொல்லிவிட்டார்’’ என்றான் இளவரசன். ‘‘நாட்டின் இளவரசனையே மடையன் என்று சொல்லிவிட்டாரா? இவரை தண்டிக்க வேண்டும்’’ என்று மக்கள் கிளர்ச்சியில் இறங்கி விட்டார்கள். மக்களின் கிளர்ச்சியைப் பார்த்து, முதியவருக்கு மரண தண்டனை விதிப்பதாக மன்னர் அறிவித்தார். அந்த முதியவரை மக்கள் முன்பாக நிறுத்தி தண்டனை கொடுக்க முடிவு செய்கிறார்கள். தண்டனையை […]
நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்; சாய்வு நாற்காலியாக அல்ல! - ஜான் கென்னடி
ஓர் இளவரசன் வேட்டைக்குச் சென்றான். போன இடத்தில் வழிதவறி அங்கும் இங்கும் அலைந்து, பழைய பாழடைந்த சிறு கட்டிடம் ஒன்றில் ஒதுங்கினான். உள்ளே மூவர் மெல்லிய குரலில் பேசுவது கேட்டது. முதல் குரல் சொன்னது, ‘‘நான்தான் நெருப்பு. ஒருவேளை நான் பிரிந்து போய்விட்டால், தூரத்தில் தெரியும் புகையை வைத்து என்னை அடையாளம் கண்டு வந்து சேருங்கள்.’’ இரண்டாம் குரல், ‘‘நான்தான் நீர். ஒருவேளை வழிதவறி நான் பிரிந்து போய்விட்டால், எந்த இடத்தில் பச்சைப் பசேல் என்று செடி, […]
காலம் மிகச்சிறந்த ஆசிரியன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது எல்லா மாணவர்களையும் கொன்றுவிடுகிறது. - ஹெக்டர் லூயிஸ் பெர்லியோஸ்
ஒரு கெட்ட செய்தி: நேரம் பறக்கிறது.ஒரு நல்ல செய்தி: நீங்கள்தான் அதன் பைலட்! மைக்கேல் அல்ஷுலர்
ஒரு பெரிய நீர்நிலை இருந்தது. அதில் நிறைய வாத்துகள் இருந்தன. அளவுக்கு மீறி வாத்துகள் பெருகியதால் மீன்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. வாத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்காவிட்டால் மீன்கள் அழிந்துவிடும் ஆபத்து இருந்தது. நீரில் அந்த வாத்துகளை வேட்டையாட சிரமமாக இருந்தது. ஊரிலுள்ள வேட்டைக்காரர் ஒருவர், இதற்குத் தீர்வு கண்டுபிடிக்க எண்ணினார். தன் நான்கு நாய்களுக்கும் நீரில் ஓடும் பயிற்சியைக் கொடுத்தார். உலகில் யாராலுமே செய்ய முடியாத செயல் நீரில் நடப்பதும் ஓடுவதும் ஆகும். ஆனால், கடும் பயிற்சிக்குப் […]
1 நம்பிக்கையோடு நிமிர்ந்து அமருங்கள்; நில்லுங்கள்; நடந்து செல்லுங்கள்! 2 அடுத்தவர்களை கண்கள் பார்த்து, புன்சிரிப்போடு எதிர்கொண்டு, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். 3 ‘கச்சிதமான உடலமைப்பு இதுதான்’ என விளம்பரங்களும் டெலிவிஷனும் சொல்வதை நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்கள் கச்சிதம்தான்! 4 குடும்பமும் நண்பர்களும் உங்கள்மீது வைக்கும் எதிர்பார்ப்புகளைத் தூக்கி எறிந்துவிடுங்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். 5 சின்னச்சின்னதாக இலக்குகளை வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை எட்டும்போது பெரும் சந்தோஷத்தை உணர்வீர்கள். 6 உங்கள் நம்பிக்கைகளை கேள்வி […]
நாம் ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடும் போது, நேரம் மிகவேகமாக நம்மைத் தாண்டி நகர்கிறது! செனகா