தினம் ஒரு கதை - 107

ஒருவன் காட்டு வழியே நடந்து செல்லும்போது பாம்பு ஒன்று நகரமுடியாமல் சுருண்டு படுத்திருந்ததைப் பார்த்தான். அங்கிருந்த பச்சிலைகளை வைத்து பாம்பைக் காப்பாற்றினான். பிழைத்த பாம்பு அவனைப் பிடித்துக் கொண்டது. ‘‘உன்னைக் கொத்தப் போகிறேன்’’ என்றது. அவனுக்கு அதிர்ச்சி. ‘‘நான் உன்னை உயிர் பிழைக்க வைத்தேன். என்னையா கொத்தப் போகிறாய். நல்லது செய்தவருக்கு பதிலுக்கு நல்லது செய்வதுதானே முறை’’ என்றான். அதற்கு பாம்பு, ‘‘இல்லை, இந்தக் காட்டில் நல்லது செய்தால் அவர்களுக்குத் தீமை செய்வதுதான் முறை’’ என்றது. இந்த […]

Read More
தினம் ஒரு கதை - 106

‘‘இரவு உணவாக எனக்கு மசாலா தோசை வாங்கிட்டு வர்றீங்களா’’ என்று கர்ப்பிணி மனைவியிடமிருந்து போன் வந்தது. அவன் ஆச்சர்யமாக, ‘‘சரிம்மா, ஆனா மதியம்தானே ஆகுது. இப்பவே எதுக்கு கேக்குற?’’ என்றான். அவர் சிரித்தபடி போனை வைத்து விட்டார். அவர்கள் புதிதாக திருமணம் ஆன தம்பதியினர். இருவருக்கும் உறவினர்கள் யாரும் கிடையாது. ஏழ்மையான வாழ்க்கைதான். அவன் அரசுத் தேர்வுகளை எழுதிக் கொண்டே ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் குறைவான வருமானத்துக்கு வேலை பார்க்கிறான். மாதக்கடைசி என்பதால் அவனிடம் காசு சுத்தமாக […]

Read More
தினம் ஒரு கதை - 105

பணக்காரர் ஒருவர் சூழ்நிலை காரணமாக தன் காரைத் தவிர்த்து ஆட்டோ ஒன்றில் வேகமாக ஏறினார். அவர் கையில் நான்கைந்து பைகளை வைத்திருந்தார். அவை அனைத்துமே பெரிதாக இருந்தன. 15 நிமிட பயண தூரத்தில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அவர் இறங்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பி விட்டார். அந்த ஆட்டோ டிரைவர் திரும்பி தன் வீட்டுக்கு வரும்போது பக்கத்து வீட்டு பையன் கையில் அடிபட்டு விடவே, அவன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அப்போதுதான் அந்த […]

Read More
தினம் ஒரு கதை - 104

‘‘அப்பா, நான் அயர்ன் பண்ணிக் கொடுக்கிறேன்’’ என்றான் மகன். அப்பாவும் மகனிடம் அயர்ன் பாக்ஸைக் கொடுத்துவிட்டு அருகில் இருந்த போஸ்ட் ஆபீஸுக்கு போய்விட்டார். அவர் கடந்த ஐந்து வருடங்களாக 80 வீடுகள் இருக்கும் அந்த அபார்ட்மென்டில் வண்டி போட்டு அயர்ன் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மகன் கல்லூரி படிக்கிறான். விடுமுறை தினங்களில் அப்பாவுக்கு உதவி செய்வான். போஸ்ட் ஆபீஸ் போய்விட்டு அப்பா திரும்பியபோது மகன் வேலையை முடித்திருந்தான். ‘‘நானே துணியைக் கொண்டு போய் கொடுத்துட்டேன்பா’’ என்றான். […]

Read More
தினம் ஒரு கதை - 103

தியேட்டரில் பகல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. வெளியே சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உள்ளே ஏ.சியை அதிகமாக வைத்திருந்தனர். அது ஜில்லென்ற குளிரைக் கொடுத்து, படம் பார்க்க வந்தவர்களை உற்சாகப்படுத்தியது. பகல் நேரமாதலால் குடும்பத்தோடு வருபவர்களை விட தனித் தனியான ஆண்கள் கூட்டம் அதிகமாய் இருந்தது. அவர்கள் ஏ.சியை அனுபவித்தபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இடைவேளை வந்தது. பாப்கார்ன், காபி குடித்து விட்டு வந்தார்கள். படம் மீண்டும் ஆரம்பமானது. ஏ.சியை அணைத்து வைத்திருக்கிறார்கள் என்பது ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே தெரிந்தது. அவர்கள் […]

Read More
தினம் ஒரு கதை - 102

காலையில் கண்விழித்த அந்த 10 வயது குட்டிப்பெண்ணுக்கு மனம் நிறைந்த சந்தோஷம். அவள் கண்முன்னே அழகான பொம்மை ஒன்று இருந்தது. அது ஒரு ‘ஹம்டி டம்டி’ பொம்மை. முட்டை மாதிரி தலை பெரிதாக இருந்தது. அழகான மஞ்சள் நிறத்தில் இருந்தது. இரண்டு கைகள், கால்கள் என்று நீளமாக கார்ட்டூன் சித்திரம் போலான பொம்மை அது. படுக்கையில் படுத்தபடியே அதை உருட்டி உருட்டிப் பார்த்தாள். அங்கே வந்த அப்பா, ‘‘ஹலோ மேடம். என்ன பொம்மையை பாத்துட்டே இருக்கீங்க?’’ என்றார். […]

Read More
தினம் ஒரு கதை - 101

பணக்காரர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். வெயில் அதிகமான அந்த மதிய வேளையில் கார் ரிப்பேர் ஆகி வழியிலேயே நின்றது. கார் மெக்கானிக்கிற்கு போன் செய்தார். ‘‘வர ஒரு மணி நேரம் ஆகும்’’ என்றார் அவர். அந்த இடத்தில் ஆட்டோவும் கிடைக்கவில்லை. வேறு காரில் லிஃப்ட் கேட்கவும் வெட்கம். புதிதாய் ஒரு கார் வாடகைக்கு அமர்த்தினாலும், வர முக்கால் மணி நேரமாவது ஆகக்கூடிய ஒதுக்குப்புறமான இடம் அது. ‘வேறு வழியில்லை. மெக்கானிக் வந்து ரிப்பேர் செய்யும்வரை காத்திருப்போம்’ […]

Read More
தினம் ஒரு கதை - 100

பழுப்பு நிற முயலும் கறுப்பு நிற முயலும் மான் வைத்த விருந்துக்கு சென்று கொண்டிருந்தன. இதில் பழுப்பு முயல் தந்திரசாலி. கறுப்பு முயல் அப்பாவி. பல கதைகள் பேசி இரு முயல்களும் சென்றபோது, கறுப்பு முயலுக்கு அங்கொரு செடியைக் காட்டியது பழுப்பு முயல். ‘‘அதோ பார். அது ஒரு மூலிகைச் செடி. எப்பேர்ப்பட்ட வயிற்று வலி என்றாலும் அதை சாப்பிட்டால் சரியாகிவிடும். நாம் மான் அண்ணா வீட்டில் நல்ல விருந்து சாப்பிட்டு அதனால் வயிற்று வலி ஏற்பட்டால் […]

Read More
தினம் ஒரு கதை - 99

கோடை விடுமுறையைக் கொண்டாட அந்த சிறுமி தன் நண்பர்களுடன் கடற்கரைக்குச் செல்லத் திட்டமிட்டாள். பேருந்தில் சென்று இறங்கிய அந்த சிறார் கூட்டம், கடற்கரையை அடைவதற்காக சாலையில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது சர்ரென்று மூன்று பைக்குகள் மிக வேகமாக அவர்களைக் கடந்து சென்றன. அவை ரேஸ் பைக். அந்த சாலையில் சென்ற மொத்த மக்களையும் அச்சுறுத்துவது போல பைக்கை ஓட்டிச் சென்றார்கள். கடற்கரை சாலையில் இங்கும் அங்கும் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர் ஒருவர் அவர்களை விசாரித்தார். ஆனால், […]

Read More
தினம் ஒரு கதை - 98

ஒரு தீவின் கரையில் காலை வேளையில் ஓர் அழகான பெண் கிளிஞ்சல்கள் சேகரித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே ஓர் இளைஞன் மயங்கிக் கிடப்பதை பார்த்தாள். அவனைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்து, குடிக்க நீரும் உண்ண உணவும் கொடுத்தாள். அங்கேயே ஒரு குடிசை கட்டி அவனைத் தங்க வைத்து, தினமும் அவள் வீட்டிலிருந்து உணவு கொடுத்து உபசரித்தாள். நாளடைவில் இருவரும் காதலித்தார்கள். அவளுடைய பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெண்கள் திருமணம் செய்துகொண்டு அந்த தீவைப் […]

Read More
crossmenu