வணக்கம் ’ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் தொழிலாளர்கள், உறுதுணையான டீலர்கள் மற்றும் ஏஜென்டுகள், நம்பிக்கை மிகுந்த வாடிக்கையாளர்கள் என எங்கள் நிறுவன வளர்ச்சி ஒரு உறுதியான சங்கிலியைப் போல, ஒருவர் கையை ஒருவர் கோர்த்து நிற்கும் வலுவான பிணைப்பு. நல்ல பாதையில் தொடர்ந்து நடக்க இந்தப் பிணைப்பே எனக்குத் தூண்டுகோலாக அமைகிறது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், எதிர்படும் ஒவ்வொருவரையும் பார்த்ததும் ‘வாழ்க வளமுடன்’ என்று மனதார வாழ்த்தி, நேர்மறை எண்ணங்களுடனே எதிர்கொள்கிறோம். ‘நெகட்டிவ் எண்ணங்கள்’ மனதில் தங்காமல் […]
வெறும் நூலால் மட்டும் ஒரு நாட்டின் உடைகள் நெய்யப்படுவதில்லை. அந்த நிலப்பரப்பின் பொருளாதாரம், தட்பவெப்பநிலை, அந்தச் சமூகத்தின் பண்பாடு என பல விஷயங்களை ஆதரமாகக் கொண்டு ஆடைகள் உருவாகின்றன. எலும்பை உறைய வைக்கும் குளிர் இருக்கிற அன்டார்க்டிகா கண்டத்தில் மெல்லிய உடை உடுத்துவது பொருத்தமற்றது. அங்கு உடலுக்கு கதகதப்பைத் தருகிற ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அடிக்கிற நம் நாட்டில், கோட் சூட் போட்டுக் கொள்வதுதான் பொருத்தமற்றது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டுக்கு […]
உனக்குள் உன்னைத் தேடுமௌனமாய்ச் சொல்லியதுபாறைக்குள்ளிருக்கும் சிலை - கன்னிக்கோவில் இராஜா
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்குமுத்தமிட்டுச் சொன்னது பூமி,‘ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?’ - ஈரோடு தமிழன்பன்
உங்களால் முடியும் என நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கையே பாதி தூரம் உங்களைக் கூட்டிச் சென்றுவிடும்.
நீங்கள் செய்வதற்கு அஞ்சும் ஒரு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடியுங்கள். இப்படிப்பட்ட அனுபவங்களே உங்களுக்கு தன்னம்பிக்கை உரமேற்றும்.
உங்கள் உதடுகளிலிருந்து வெளியேறும் வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; உங்களுக்கு நீங்களே மௌனமாகப் பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகளே அந்த சக்தி படைத்தவை.