தினம் ஒரு கதை - 71

ஆசிரியர் கேபச்சியர் அந்த நான்காம் வகுப்பு மாணவனைப் பார்த்தார். அவன் பயந்த சுபாவமாக இருந்தான். அவர் கண்களை நேருக்கு நேர் சந்திக்காமல் நாசூக்காக தாழ்த்திக் கொண்டான். சக மாணவர்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொண்டு, யாரும் சட்டென்று கண்டுபிடித்துவிட முடியாதபடி இருந்தான். ஆனால் கேபச்சியர் இப்படி எத்தனை மாணவர்களை பார்த்திருப்பார்! அவர்தான் அந்தப் பள்ளியில் நூலகரும் கூட. மாணவனை அழைத்து அன்பாகக் கேட்டார். ‘‘நீ ஸ்கூலுக்கு போற நேரம் தவிர மத்த நேரம் என்ன செய்வாய்?’’ ‘‘நான்… […]

Read More
தினம் ஒரு கதை - 70

வீட்டில் ஒரு பிள்ளை சரியாக சாப்பிடாமல் இருந்தால், அம்மாவுக்கு கவலையாகத்தானே இருக்கும். அப்படி அந்த அம்மாவுக்கு தன் ஒரு மகனைப் பார்த்து கவலை வந்தது. வீட்டில் அம்மா, அப்பா மற்றும் வேலைக்குச் செல்லும் மூன்று பிள்ளைகள் இருந்தனர். பெரிய மகனும், அதற்கடுத்த மகளும் வேலை முடிந்து மாலையில் வீடு வந்து விடுவார்கள். ஆனால், இளையவன் நள்ளிரவுதான் வருவான். அவன் வேலை அப்படி. நள்ளிரவு வரும் மகனுக்கு அம்மா சாதமும், குழம்பும், கூட்டும், பொரியலும் வைத்தால் ஏனோ தானோ […]

Read More
தினம் ஒரு கதை - 69

அம்மாவிடம் கோபமாக ஓடிவந்தாள் சிறுமி. அவள் சைக்கிள் ஓட்டி வரும்போது ஒரு பைக் அவள் மீது மோதி விட்டதாம். பெரிய காயம் இல்லாவிட்டாலும் மோதியதால் கீழே விழுந்த அதிர்ச்சி அச்சிறுமிக்கு இருந்தது. வீட்டுக்கு வந்ததும் பையைத் தூக்கி எறிந்தாள். அம்மாவிடன் தன் கோபம் அனைத்தையும் காட்டி கத்தினாள். ‘‘அம்மா பச்சை சிக்னல் போட்ட பிறகுதான் நான் போனேன். ஆனாலும் ஒரு பைக் ஆசாமி என் மீது மோதிவிட்டார்.’’ ‘‘இருந்தாலும் நீ ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்து […]

Read More
தினம் ஒரு கதை - 68

கல்லூரியில் படிக்கும் அந்த இளைஞன் வேக வேகமாக வந்து தன் அறைக் கதவைப் பூட்டினான். மூச்சு வாங்கியது. நடந்ததை நினைத்து வெட்கமாக இருந்தது. தனியே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருக்கும் அவன், அன்று காலை தோசை மாவு வாங்க சைக்கிளில் போனான். மாவு கடையில் ஒரு கிலோ மாவை கவரில் கொடுத்தார்கள். அதை சைக்கிள் பின் கேரியரில் வைத்து இடது கையால் மாவைப் பிடித்துக் கொண்டு, வலது கையால் சைக்கிள் ஹேண்டில் பாரைப் பிடித்து ஓட்டிக்கொண்டு வந்தான். […]

Read More
தினம் ஒரு கதை - 67

பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவள் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆண்டு விடுமுறைக்கு கிராமத்தில் வந்து குடும்பத்தோடு தங்கியிருக்கிறாள் அவள். தூக்கத்தில் ஒரே பறவைகள் கனவாக வந்து அவளைத் தொந்தரவு செய்தன. அதிலும் வாத்துகளாக வந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தன. அவற்றின் மொழி அவளுக்குப் புரியவில்லை. ஒரு வாத்து அவள் முகத்திலேயே வந்து விழுந்தது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். கனவு என்று புரிந்ததும், தண்ணீர் பருகிவிட்டு மறுபடியும் தூங்கினாள். மறுபடியும் வாத்து கனவே வந்தது. காலையில் எழுந்ததும் அப்பாவிடம் அதைச் […]

Read More
தினம் ஒரு கதை - 66

உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான நியூட்டனுக்கு இளம்பருவத்தில் ஒரு சிக்கல் வருகிறது. 1665ம் ஆண்டு, அதாவது அவருக்கு 22 வயதாக இருக்கும்போது லண்டன் நகரில் பிளேக் நோய் பரவுகிறது. அப்போதைய லண்டன் அசுத்தமான நகரமாக இருந்ததால், அங்கே காசநோயும் மலேரியாவும் சாதாரணமாக தொற்றும். ஆனால், பிளேக் வந்து கொத்து கொத்தாய் மக்களைக் கொன்று போட்டதும், நியூட்டனின் சொந்த பந்தங்கள் எல்லாம் கவலையடைந்தார்கள்.  தங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று, இளைஞரான நியூட்டனை மட்டுமாவது காப்பாற்ற நினைக்கிறார்கள். அவரை லண்டனிலிருந்து […]

Read More
தினம் ஒரு கதை - 65

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மேரி கியூரி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அவரின் உதவியாளர் வந்தார். ‘‘உங்களுக்குத் தெரியுமா மேடம்? நம் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் எல்லையில் நடக்கும் போரில் அதிகம் காயம் அடைகிறார்களாம்!’’ ‘‘அவர்களுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் யுத்த களத்திலேயே இருக்கிறார்களே?’’ ‘‘இருக்கிறார்கள் மேடம். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்வதில் ஒரு சிக்கல் வருகிறதாம்!’’ ‘‘என்ன சிக்கல்?’’ ‘‘காயம்பட்ட வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க யுத்த களத்திலிருந்து அவர்களை நகரத்துக்கு அழைத்து வர வேண்டியுள்ளது. சிறு […]

Read More
தினம் ஒரு கதை - 64

அம்மா இட்லி ஊற்றிக் கொண்டிருக்கும்போது ஏழு வயது மகள் வந்தாள். அம்மா மாவு ஊற்றுவதையே வேடிக்கை பார்த்துவிட்டுக் கேட்டாள். ‘‘அம்மா, என்ன பண்றீங்க?’’ ‘‘பார்த்தா தெரியலையா. இட்லி தட்டுல மாவு ஊத்துறேன்!’’ ‘‘இட்லி எப்படி வேகும்?’’ ‘‘இட்லியை இப்படி ஊத்தி, இந்த சட்டியில அல்லது குக்கர்ல நீரை ஊற்றி சூடாக்கினா இந்த நீராவி வந்து இட்லி மாவை வேக வைத்து இட்லி ஆக்கிடும்.’’ ‘‘அம்மா, நான் ஊத்தவா?’’ ‘‘சரி, சிந்தாம ஊத்து!’’ அவள் ஊற்றும்போது தட்டைப் பார்த்துவிட்டுக் […]

Read More
தினம் ஒரு கதை - 63

அம்மா தன் மகளை அழைத்து வர பள்ளிக்குச் சென்றிருந்தார். அங்கே ஓர் அறையின் முன்னால் நிறைய கூட்டம் இருந்தது. அம்மா மகளிடம், ‘‘அங்க என்னம்மா ஒரே கூட்டமா இருக்கு?’’ என்று கேட்டார். ‘‘அதுவா? அங்க வேற வேலையே இல்லாம ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் வாங்க நிக்கறாங்கம்மா!’’ ‘‘அது என்ன ஸ்காலர்ஷிப்?’’ ‘‘நல்லா விளையாடுபவர்களை அடையாளப்படுத்தி அரசாங்கம் மாசா மாசம் பணம் கொடுக்கிறார்கள் அம்மா.’’ ‘‘அப்படியா, நல்லது!’’ ‘‘அது ஒண்ணும் பெரிய தொகை இல்லைம்மா. நாம வீட்ல எல்லாரும் ஹோட்டல்ல […]

Read More
தினம் ஒரு கதை - 62

‘‘அப்பா... சேமிப்புன்னா என்னப்பா?’’ ஒரு பள்ளி மாணவன் அப்பாவிடம் கேட்டான். அவர் சேமிப்பு பற்றி விளக்கிச் சொல்ல சொல்ல ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான். ‘‘சேமிக்க நினைத்தால் அதை ஒத்திப் போடக் கூடாது. உடனே ஆரம்பிக்க வேண்டும். அதுதான் சேமிப்பின் முக்கியமான விதி’’ என்று முடித்தார் அப்பா. ‘‘நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன் அப்பா’’ என்றான் மகன். ‘இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று சொல்லாமல், ‘நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று மகன் சொன்ன பதிலில் இருந்தே அவனுடைய சோம்பல் மனநிலையை அப்பா புரிந்து கொண்டார். […]

Read More
1 5 6 7 8 9 14
crossmenu