அந்த வீட்டில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். வீட்டு வேலை செய்யும் 60 வயது பெண்மணி, அந்த வீட்டுக்காக உற்சாகமாக உழைத்தார். விருந்துக்கு வருபவர்களுக்காக ஒற்றை ஆளாய் நின்று ஏராளமான சப்பாத்திகளை தேய்த்து சுட்டுக் கொடுத்தார். அந்தக் குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி. வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு நல்ல சேலை அணிந்து வருவதாகக் கூறிச் சென்றார். வீடு சென்று குளித்து தன்னிடம் இருப்பதில் நல்ல சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டார். பூ வைத்துக் கொண்டார். மகன் வைத்திருந்த […]
அந்த இளைஞர் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார். அவர் மடியில் நான்கு வயது மகன் தூங்கிக் கொண்டிருந்தான். அங்கே வந்த அம்மா பரிவுடன், ‘‘நாளைக்குக் கல்யாணம். நீ இன்னும் தூங்கலையாப்பா?’’ எனக் கேட்டார். ‘‘இல்லைம்மா… அதை நினைச்சுதான் பயமா இருக்கு!’’ ‘‘என்ன பயம்?’’ ‘‘முதல் கல்யாணத்துல இவன் பிறந்தான். இவனுக்கு இரண்டு வயசு இருக்கும்போது அவ உலகத்துல இல்லாம போயிட்டா!’’ ‘‘ஆமா, இப்ப இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போற. இது ஒண்ணும் புதுசு இல்லையேப்பா. இந்தப் பொண்ணையும் நீ […]
‘‘அம்மா! ஏன் எப்பவும் மெகா சீரியலே பார்த்துட்டு இருக்கீங்க?’’ என்று தன் முதிய அம்மாவிடம் ஒரு மத்திம வயது நபர் சலித்துக் கொண்டார். இதைப் பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த அவர் மகள் கேட்டாள். அப்பா பாட்டியிடம் சலித்துக் கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘‘அம்மா, இந்த உலகத்துல நாம தெரிஞ்சுக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சிக்காம, ரசிக்காம இப்படி மெகா சீரியலே பாக்குறீங்களேம்மா. என்னால எல்லாம் இதை ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாதும்மா.’’ அங்கே ஹாலில் […]
புதிதாய் திருமணம் ஆன மகளைப் பார்க்க திடீரென்று அப்பா வந்திருந்தார். அதுவும் மதியம் 12 மணிக்கு வந்திருந்தார். அவர் ஊரிலிருந்து மகளின் ஊருக்கு வர 8 மணி நேரம் ஆகும். அதிகாலையில் கிளம்பி இருப்பார் போல! விடுமுறை நாள் என்பதால் மகளும் மருமகனும் மாமனாரை வரவேற்று உபசரித்தார்கள். உணவு வேளை வந்தது. அப்பா முந்திக் கொண்டு, ‘‘நானும் மருமகனும் சாப்பிடுறோம். நீ பரிமாறும்மா’’ என்று மகளிடம் சொல்லிவிட்டார். மருமகனும் இதை ஆச்சரியமாகப் பார்த்தார். மூவரும் சேர்ந்தே பரிமாறி […]
ஒருவன் காட்டு வழியே நடந்து செல்லும்போது பாம்பு ஒன்று நகரமுடியாமல் சுருண்டு படுத்திருந்ததைப் பார்த்தான். அங்கிருந்த பச்சிலைகளை வைத்து பாம்பைக் காப்பாற்றினான். பிழைத்த பாம்பு அவனைப் பிடித்துக் கொண்டது. ‘‘உன்னைக் கொத்தப் போகிறேன்’’ என்றது. அவனுக்கு அதிர்ச்சி. ‘‘நான் உன்னை உயிர் பிழைக்க வைத்தேன். என்னையா கொத்தப் போகிறாய். நல்லது செய்தவருக்கு பதிலுக்கு நல்லது செய்வதுதானே முறை’’ என்றான். அதற்கு பாம்பு, ‘‘இல்லை, இந்தக் காட்டில் நல்லது செய்தால் அவர்களுக்குத் தீமை செய்வதுதான் முறை’’ என்றது. இந்த […]
‘‘இரவு உணவாக எனக்கு மசாலா தோசை வாங்கிட்டு வர்றீங்களா’’ என்று கர்ப்பிணி மனைவியிடமிருந்து போன் வந்தது. அவன் ஆச்சர்யமாக, ‘‘சரிம்மா, ஆனா மதியம்தானே ஆகுது. இப்பவே எதுக்கு கேக்குற?’’ என்றான். அவர் சிரித்தபடி போனை வைத்து விட்டார். அவர்கள் புதிதாக திருமணம் ஆன தம்பதியினர். இருவருக்கும் உறவினர்கள் யாரும் கிடையாது. ஏழ்மையான வாழ்க்கைதான். அவன் அரசுத் தேர்வுகளை எழுதிக் கொண்டே ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் குறைவான வருமானத்துக்கு வேலை பார்க்கிறான். மாதக்கடைசி என்பதால் அவனிடம் காசு சுத்தமாக […]
பணக்காரர் ஒருவர் சூழ்நிலை காரணமாக தன் காரைத் தவிர்த்து ஆட்டோ ஒன்றில் வேகமாக ஏறினார். அவர் கையில் நான்கைந்து பைகளை வைத்திருந்தார். அவை அனைத்துமே பெரிதாக இருந்தன. 15 நிமிட பயண தூரத்தில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அவர் இறங்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பி விட்டார். அந்த ஆட்டோ டிரைவர் திரும்பி தன் வீட்டுக்கு வரும்போது பக்கத்து வீட்டு பையன் கையில் அடிபட்டு விடவே, அவன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அப்போதுதான் அந்த […]
‘‘அப்பா, நான் அயர்ன் பண்ணிக் கொடுக்கிறேன்’’ என்றான் மகன். அப்பாவும் மகனிடம் அயர்ன் பாக்ஸைக் கொடுத்துவிட்டு அருகில் இருந்த போஸ்ட் ஆபீஸுக்கு போய்விட்டார். அவர் கடந்த ஐந்து வருடங்களாக 80 வீடுகள் இருக்கும் அந்த அபார்ட்மென்டில் வண்டி போட்டு அயர்ன் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மகன் கல்லூரி படிக்கிறான். விடுமுறை தினங்களில் அப்பாவுக்கு உதவி செய்வான். போஸ்ட் ஆபீஸ் போய்விட்டு அப்பா திரும்பியபோது மகன் வேலையை முடித்திருந்தான். ‘‘நானே துணியைக் கொண்டு போய் கொடுத்துட்டேன்பா’’ என்றான். […]
தியேட்டரில் பகல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. வெளியே சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உள்ளே ஏ.சியை அதிகமாக வைத்திருந்தனர். அது ஜில்லென்ற குளிரைக் கொடுத்து, படம் பார்க்க வந்தவர்களை உற்சாகப்படுத்தியது. பகல் நேரமாதலால் குடும்பத்தோடு வருபவர்களை விட தனித் தனியான ஆண்கள் கூட்டம் அதிகமாய் இருந்தது. அவர்கள் ஏ.சியை அனுபவித்தபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இடைவேளை வந்தது. பாப்கார்ன், காபி குடித்து விட்டு வந்தார்கள். படம் மீண்டும் ஆரம்பமானது. ஏ.சியை அணைத்து வைத்திருக்கிறார்கள் என்பது ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே தெரிந்தது. அவர்கள் […]
காலையில் கண்விழித்த அந்த 10 வயது குட்டிப்பெண்ணுக்கு மனம் நிறைந்த சந்தோஷம். அவள் கண்முன்னே அழகான பொம்மை ஒன்று இருந்தது. அது ஒரு ‘ஹம்டி டம்டி’ பொம்மை. முட்டை மாதிரி தலை பெரிதாக இருந்தது. அழகான மஞ்சள் நிறத்தில் இருந்தது. இரண்டு கைகள், கால்கள் என்று நீளமாக கார்ட்டூன் சித்திரம் போலான பொம்மை அது. படுக்கையில் படுத்தபடியே அதை உருட்டி உருட்டிப் பார்த்தாள். அங்கே வந்த அப்பா, ‘‘ஹலோ மேடம். என்ன பொம்மையை பாத்துட்டே இருக்கீங்க?’’ என்றார். […]