வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் ஒரு குட்டிப்பெண் சோகத்துடன் அமர்ந்திருந்தாள். அதைக் கண்ட அம்மா, ‘‘ஏன் சோகமாய் அமர்ந்திருக்கிறாய்?’’ என்று கேட்டார். ‘‘வெளியே விளையாடப் போக முடியவில்லை. நண்பர்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் பிளே ஸ்டேஷன் வைத்து வீடியோ கேம் ஆடிக் கொண்டிருக்கிறார்களாம். எனக்கு அப்படி எதுவுமில்லையே, நான் என்ன செய்வேன்? எனக்கு என்ன அக்கா, அண்ணன், தம்பியா இருக்காங்க? நான் சிங்கிள் சைல்ட்தானே’’ என்றாள் மகள். ‘‘இவ்வளவுதானா விஷயம்?’’ என்று அம்மா அந்த வீட்டின் […]
அந்தக் காலத்தில் ஒரு பண்ணையார் வீட்டில் எலித்தொல்லை இருந்தது. அவர் அந்த எலியை ஒழிக்க எவ்வளவோ பாடுபட்டார். முடியவில்லை. நகரத்துக்குச் சென்றபோது வாழ்க்கையில் முதல்முறையாக எலிப்பொறியைப் பார்க்கிறார். ‘சரி, நம் வீட்டில் எலியைப் பிடிக்கப் பயன்படும்’ என்று வாங்கிவருகிறார். வீட்டில் எலியைப் பிடிக்க அதைத் தயார் செய்து வைக்கிறார். குடும்பத்தாரிடம் அதை விளக்குகிறார். இதைக் கேட்ட எலி அஞ்சி நடுங்கி தன் தோட்டத்துக்கு வந்து அங்கிருந்த கோழியக்காவிடம் புலம்புகிறது. ‘‘அக்கா... அக்கா... பண்ணையார் எலிப்பொறி வைத்திருக்கிறார். நீ […]
ஓர் இளைஞன் திருமணம் செய்து கொண்டான். அவன் குடும்பம் மிகப்பெரியது. சித்திகள், சித்தப்பாக்கள், மாமாக்கள், அத்தைகள் என்று பல சொந்த பந்தங்கள் இருந்தார்கள். திருமணம் ஆன புதிதில் எப்போதும் அவர்களைப் பற்றியே மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பான். சில சமயம் மனைவி கொட்டாவியை அடக்கிக் கொண்டு கேட்பதைக்கூட அவன் கவனிக்கவில்லை. இதில்லாமல் புதிதாய் வந்த மருமகளுக்கு மாமனார் பல போதனைகளைச் செய்வார். அவர் ஒரு சுற்றுச்சூழல் விரும்பி என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருமகளுக்கு சுற்றுச்சூழல் பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவார். […]
ஒரு நகரத்தில் இருந்த இளைஞனும் ஓர் இளம்பெண்ணும் காதலித்தார்கள். அந்த நகரத்தின் வெளியே ஓர் ஏரி இருந்தது. அங்கே படகு சவாரி பொழுதுபோக்கும் இருந்தது. ஒருநாள் படகு சவாரிக்குப் போகலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர். அவன் தன் நண்பனின் பைக்கைக் கேட்டு வாங்கி வந்தான். பெண்ணும் ஏதோ காரணத்தை வீட்டில் சொல்லிவிட்டு வந்தாள். இருவரும் பொது இடத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அவள் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டாள். அவன் பைக்கை ஓட்டினான். நகரத்துக்குள் சாதாரணமாக ஓட்டியவன், நகரத்தைத் […]
மகளின் கைகளில் லேசான சூட்டுத் தழும்பைப் பார்த்த அப்பா பதறிவிட்டார்.‘‘என்னம்மா இது?’’‘‘அது ஒண்ணுமில்லப்பா. அடுப்புல லேசா கை பட்டுடுச்சி.’’ ‘‘நீ சமைச்சியா? ஏன், அதைத்தான் அம்மா பாத்துப்பாங்களே!’’‘‘ஆமாப்பா, நான் தோசை சுட்டேன்பா!’’‘‘நீ ஏன் அதையெல்லாம் செய்யறே?’’ ‘‘நான் செய்யலேன்னா அம்மாவுக்கு யாரு தோசை சுட்டுக் கொடுப்பாங்க?’’ ‘‘அதை அவங்களே சுட்டு சாப்பிட்டுக்கலாம்தானே!’’‘‘அப்பா, நீங்க சின்ன வயசுல இருக்கும்போது உங்களுக்கு யார் தோசை சுட்டுத் தருவாங்க?’’‘‘உன் பாட்டிதான் சுட்டுத் தருவாங்க!’’ ‘‘நல்லா சாப்பிடுவீங்களா?’’‘‘நல்லா சாப்பிடுவேன்மா!’’‘‘நீங்க சாப்பிட்டுட்டு பாட்டிக்கு பதிலுக்கு […]
அமைதியை விரும்பும் நாட்டின் மீது கொடுங்கோல் மன்னன் ஒருவன் படை எடுத்து வந்தான். அவனிடம் முரட்டு காளைப் படை ஒன்று இருந்தது. அதிலுள்ள காளைகள் எல்லாம் வீரமிக்கவை, முரடானவை. நாட்டுக்குள் புகுந்து மோசமாக நாசம் செய்பவை. அமைதி விரும்பும் நாட்டின் அரசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கொடுங்கோலன் நாட்டிற்குள் வந்தால் தன் குடிமக்கள் அனைவரையும் சிதைத்து விடுவான் என்று அஞ்சினான். கொடுங்கோலனை நேருக்கு நேராக போரில் சந்திக்கும் படை பலம் அவனிடம் இல்லை. என்ன செய்வதென்று யோசித்தான். […]
‘கொக்கி குமாரி’ என்று அந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை வகுப்பில் அனைவரும் கிண்டல் செய்தார்கள். பெண்கள் மட்டுமே படிக்கும் அப்பள்ளியில் யாருக்காவது உடையின் கொக்கி எனப்படும் ஹூக் கழன்றிருந்தால், இவள் ஆர்வமுடன் அதைச் சரி செய்வாள். தானே முன்வந்து, ‘‘ஏய், உனக்குப் பின்னாடி சரியா மாட்டவில்லை பாரு’’ என்று சரி செய்வாள். பல மாணவிகள் இவளுடைய இந்த ஆர்வத்தால் பயனடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் கொடுப்பது பள்ளிச் சிறார்களின் வழக்கம்தானே. அதன் அடிப்படையில் இவளை அனைவரும் […]
அந்த நாட்டின் மன்னர் பெரிய விழா ஒன்றை நடத்தினார். விழாவைப் பார்க்க நாடே திரண்டு இருக்க, ஒரே ஒருவரால் மட்டும் போக முடியவில்லை. அவர், மன்னரின் தோட்டக்காரர். அவரும் ஒரு வாரம் விழாவைப் பார்க்கச் சென்றுவிட்டால் யார் பூந்தோட்டத்தைப் பார்த்துக் கொள்வது? அவர் அதை நினைத்து சோகமாக இருக்க, அங்கு வந்த குரங்குகள் கூட்டத்தலைவன் ‘என்ன’ என்று விசாரித்தது. முதலில் காரணத்தைச் சொல்லாமல் தவிர்த்த தோட்டக்காரர், குரங்குத் தலைவனின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் விஷயத்தைச் சொன்னார். ‘‘நான் […]
விசா எடுக்கும் விஷயமாக அந்தக் கல்லூரி மாணவன் தன் சித்தி வீட்டுக்குச் சென்றிருந்தான். அவனை வரவேற்ற சித்தியும் சித்தப்பாவும், ‘‘எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டில் தங்கிக் கொள்ளலாம்’’ என்றார்கள். மூன்று நாட்கள் மட்டுமே அங்கே தங்க நேரிடும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டான். காலை உணவாக சித்தி பூரியும் கிழங்கும் செய்து கொடுத்தார். வீட்டில் அனைவரும் சாப்பிட்டனர். மதிய உணவாக நான்கு வகை சாதங்கள் செய்திருந்தார். சித்தப்பா, அவரின் அப்பா, சித்தப்பாவின் தம்பி என்று அனைவரும் அரட்டையடித்துக் கொண்டு […]
கல்லூரி மாணவி ஒருவர் தன் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார். அப்பா, ‘‘எவ்வளவு வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘ஐந்து பேர் போகிறோம். 4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்’’ என்றார் மகள். ‘வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?’ என்று வியந்த அப்பா, ‘‘என்னிடம் இப்போது இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன்’’ என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘எனக்கு இப்போதே பணம் வேண்டும்’’ என்று கேட்டார். ‘‘அவ்வளவு தொகையை ஒருநாள் […]