இரண்டு பிள்ளைகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, தங்கள் அம்மாவிடம், ‘‘நீங்களே நியாயத்தை சொல்லுங்க’’ என்று கேட்டால்... ‘இந்தப் பிள்ளை செய்தது சரி’, ‘அந்தப் பிள்ளை செய்தது தவறு’ என்ற நியாய தர்மம் எல்லாம் அந்த அம்மாவுக்குச் சொல்ல வராது. ‘இரண்டு பிள்ளைகளும் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டுமே’ என்ற பதற்றம்தான் இருக்கும். ஆழமான நேசிப்பில் விளையும் உணர்வு அது.