கோழி ஒன்று ஒரே ஒரு கோதுமையை பார்த்தது. ”யார் இந்த கோதுமையை விதைப்பது” என்றது“நான் விதைக்க மாட்டேன்” என்று வாத்தும், பன்றியும் ஒதுங்கின. கோழி கோதுமையை விதைத்தது. அது வளர்ந்து பெரிதாகும் போது “யார் இதற்கு நீர் ஊற்றுவது” கோழி கேட்டது.“நான் செய்ய மாட்டேன்” பன்றியும் வாத்தும் ஒதுங்கின. கோதுமை வளர்ந்து கோதுமைகளாக அறுவடைக்கு தயாரானது. “யார் இதை அறுவடை செய்து மில்லுக்கு எடுத்து செல்வது” கோழி கேட்டது.“எங்களால் முடியாது” வாத்தும் பன்றியும் ஒதுங்கின. கோதுமையை மாவாக்கி எடுத்து […]
கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் ஆளுக்கொரு எலுமிச்சை பழம் கொண்டு வருமாறு முதல் நாளில் பேராசிரியர் சொன்னார். ‘ஏன் எலுமிச்சை பழம்?’ என்ற யோசனையுடன் மறுநாள் மாணவர்கள் கொண்டு போனார்கள். ‘‘அவரவர் இனிஷியலை எலுமிச்சை பழத்தில் செதுக்குங்கள்’’ என்றார் பேராசிரியர். மாணவர்கள் செய்தார்கள். கூடை ஒன்றில் அனைத்து எலுமிச்சை பழங்களையும் போடச் சொன்னார். நன்றாகக் கலந்தார். மாணவர்களை அவரவர் பழத்தை எடுக்கச் சொன்னார். இனிஷியல் பார்த்து எல்லோரும் சரியாக எடுத்துவிட்டார்கள். அனைவரையும் எலுமிச்சை பழத்தோலை உரித்து […]
இத்தாலியின் புகழ்பெற்ற சிற்பியான பெர்டெல் தோர்வால்ட்சென் (Bertel Thorvaldsen) மரவேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். எப்படியாவது பெரிய சிற்பியாக வேண்டும் என்று தீர்மானித்தார். டென்மார்க்கிலிருந்து இத்தாலி வந்து சிற்பக்கலையைக் கற்றுக் கொண்டு அழகான சிற்பங்களை செதுக்கினார். மிகுந்த கவனத்தோடும் கலையழகோடும் செதுக்கப்பட்ட அவை மக்கள் மத்தியில் புகழ்பெற ஆரம்பித்தது. எல்லோரும் பாராட்டினாலும், வாங்குவதற்கு யாரும் வரவில்லை. தோர்வால்ட்சென் சிலரிடம் சென்று தன் சிற்பங்களை விற்க முயற்சி செய்கிறார். அவர்களும் வாங்குவதாக இல்லை. ‘நம் சிற்பங்களை யாரும் காசு […]
இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கையில் அழகான கூழாங்கற்களை வைத்திருந்தான். இன்னொருவன் விதம்விதமான சாக்லேட்கள் வைத்திருந்தான். ‘‘என்னிடம் இருக்கும் எல்லா கூழாங்கற்களையும் உனக்குக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதிலாக உன்னிடம் இருக்கும் சாக்லேட்கள் அனைத்தையும் கொடுத்து விடுகிறாயா’’ என்று முதல் சிறுவன் கேட்டான். சாக்லேட் வைத்திருந்த சிறுவன் சம்மதித்து, தன்னிடம் இருந்த எல்லா சாக்லேட்களையும் கொடுத்துவிட்டான். அதற்கு பதிலாக கூழாங்கற்களை வாங்கிக் கொண்டான். அன்று இரவு சாக்லேட் கொடுத்த சிறுவன் நிம்மதியாகப் படுத்துத் தூங்கினான். காரணம், […]
மிதிலை நாட்டில் சில துறவிகளுக்கு அந்த சந்தேகம் இருந்ததை நாரதர் கண்டுபிடித்துவிட்டார். என்ன சந்தேகம்? ‘மன்னர் ஜனகர் சுகமாக எல்லாவற்றையும் அனுபவித்து, வேளா வேளைக்கு விருந்து உண்டு, பட்டு மெத்தையில் படுத்துறங்கி ராஜ வாழ்க்கைதானே வாழ்கிறார். ஏன் அவரை பெரும் துறவி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அவர் எப்படி துறவியாவார்?’ அப்படி சந்தேகப்பட்ட துறவிகளை எல்லாம் நாரதர் விருந்துக்கு அழைத்தார். மூன்று நாட்கள் தொடர்ச்சியான விரதத்தால் முனிவர்கள் கடும் பசியில் இருந்தார்கள். விருந்து ஆரம்பமாயிற்று. முனிவர்கள் தத்தம் […]
தாமஸ் ஜெஃபர்சன் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அதற்குமுன் துணை ஜனாதிபதியாக இருக்கும்போது தனியே பயணம் மேற்கொள்கிறார். சூழ்நிலை காரணமாக சிறுநகரம் ஒன்றில் இரவு தங்க வேண்டிய நிலை வருகிறது. அப்போது திடீரென பெய்த மழையில் நனைந்து, அவர் உடையெல்லாம் சேறாகிவிட்டது. அந்த அழுக்கு கோலத்துடன் ஒரு விடுதிக்குச் சென்று, ‘‘அறை இருக்கிறதா?’’ என்றார். விடுதி உரிமையாளர் இவரின் கோலத்தைப் பார்த்து, ‘‘அதெல்லாம் இல்லை’’ என்று அலட்சியமாகச் சொன்னார். தாமஸ் ஜெபர்சன் வேறு விடுதி பார்த்துச் […]
பெரும் மக்கள் கூட்டம் ஒன்று, தங்கள் இடத்திலிருந்து இன்னொரு நிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தது. பயணத்தில் மக்களிடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்து வைக்க தலைவன் தேவை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். தங்கள் தலைவன் வலிமைமிக்கவனாக, தைரியமானவனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தங்கள் கூட்டத்தில் 10 நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த 10 பேரும் உடல் வலிமைமிக்கவர்கள். தைரியமானவர்கள். இந்த 10 பேரில் யார் தலைவனாவது என்பதை விவாதிக்க இரவில் தீ மூட்டி சுற்றி அமர்ந்திருந்தனர். […]
வேட்டைக்குப் போன இளவரசன், திரும்பி வரும்போது ஒரு முதியவரைத் தன் தேரில் கட்டி இழுத்து வந்தான். மக்கள் ‘ஏன்?’ என்று கேட்டார்கள். ‘‘இவர் என்னை ‘மடையன்’ என்று சொல்லிவிட்டார்’’ என்றான் இளவரசன். ‘‘நாட்டின் இளவரசனையே மடையன் என்று சொல்லிவிட்டாரா? இவரை தண்டிக்க வேண்டும்’’ என்று மக்கள் கிளர்ச்சியில் இறங்கி விட்டார்கள். மக்களின் கிளர்ச்சியைப் பார்த்து, முதியவருக்கு மரண தண்டனை விதிப்பதாக மன்னர் அறிவித்தார். அந்த முதியவரை மக்கள் முன்பாக நிறுத்தி தண்டனை கொடுக்க முடிவு செய்கிறார்கள். தண்டனையை […]
ஓர் இளவரசன் வேட்டைக்குச் சென்றான். போன இடத்தில் வழிதவறி அங்கும் இங்கும் அலைந்து, பழைய பாழடைந்த சிறு கட்டிடம் ஒன்றில் ஒதுங்கினான். உள்ளே மூவர் மெல்லிய குரலில் பேசுவது கேட்டது. முதல் குரல் சொன்னது, ‘‘நான்தான் நெருப்பு. ஒருவேளை நான் பிரிந்து போய்விட்டால், தூரத்தில் தெரியும் புகையை வைத்து என்னை அடையாளம் கண்டு வந்து சேருங்கள்.’’ இரண்டாம் குரல், ‘‘நான்தான் நீர். ஒருவேளை வழிதவறி நான் பிரிந்து போய்விட்டால், எந்த இடத்தில் பச்சைப் பசேல் என்று செடி, […]
ஒரு பெரிய நீர்நிலை இருந்தது. அதில் நிறைய வாத்துகள் இருந்தன. அளவுக்கு மீறி வாத்துகள் பெருகியதால் மீன்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. வாத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்காவிட்டால் மீன்கள் அழிந்துவிடும் ஆபத்து இருந்தது. நீரில் அந்த வாத்துகளை வேட்டையாட சிரமமாக இருந்தது. ஊரிலுள்ள வேட்டைக்காரர் ஒருவர், இதற்குத் தீர்வு கண்டுபிடிக்க எண்ணினார். தன் நான்கு நாய்களுக்கும் நீரில் ஓடும் பயிற்சியைக் கொடுத்தார். உலகில் யாராலுமே செய்ய முடியாத செயல் நீரில் நடப்பதும் ஓடுவதும் ஆகும். ஆனால், கடும் பயிற்சிக்குப் […]