‘‘அம்மா எனக்கு வீட்டுக்குள் அடைந்திருக்க பிடிக்கவில்லை’’ என்றாள் நிலா. ‘‘வா, நம் காரில் ஊர் சுற்றி விட்டு வருவோம்’’ என்றார் அம்மா. அம்மாவும் மகளும் நகரத்தைத் தாண்டி கிராமத்தை நோக்கி நகர்ந்தார்கள். ‘‘அம்மா, இன்னும் கொஞ்ச தூரம் போகலாம்’’ என்றாள் நிலா. ‘‘சரி’’ என்று இன்னும் கிராமப்பகுதிக்குள் காரை செலுத்தினார் அம்மா. சரியாக ஒரே ஒரு கார் மட்டுமே செல்ல முடிகிற பாதை. நடுவில் ஒரு கல் இருந்தது. கல்லை அகற்றினால்தான் கார் போக முடியும். ‘‘அம்மா, […]
அரசன் ஒருவன் பக்கத்து நாட்டைத் தாக்கி மக்களை சிறைபிடித்து அடிமையாக்கி வைத்திருந்தான். அவர்களை சித்திரவதை செய்து கடுமையாக வேலை வாங்கினான். அந்த நாட்டுக்கு ஒரு ஞானி வந்தார். ஞானியை மதிப்புடன் வரவேற்று அரசன் உபசரித்தான். ஞானியோ, ‘அடிமையாக மக்களைப் பிடித்து வைத்திருப்பது தவறு’ என்று புத்திமதி சொல்லி அரசனைத் திருத்தப் பார்த்தார். ஆனால் அரசன் திருந்தவே இல்லை. ‘யாரையும் விடுதலை செய்ய முடியாது’ என்று பிடிவாதமாக சொல்லிவிட்டான். இதைக் கேட்ட ஞானி, அரசன் சிறைப் பிடித்து வைத்திருக்கும் […]
வெளிநாட்டில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் அழகான தேவாலயம் இருந்தது. அதன் பொறுப்பைக் கவனிக்க கறுப்பர் இனத்தவர் ஒருவர் வந்தார். இனப் பாகுபாடு காட்டும் குறுகிய மனம் படைத்த சிலர், அவரை நிறம் காரணமாக வெளியே போகச் சொன்னார்கள். அவரோ அதைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையை செம்மையாகச் செய்து கொண்டிருந்தார். இவரை எப்படியாவது தேவாலயப் பொறுப்பிலிருந்து துரத்த வேண்டும் என்று நினைத்த அடிப்படைவாதிகள், ஆயுதங்களோடு அவரைத் தாக்க வந்தார்கள். அவர் அதற்கும் கலங்காமல் தாக்க வந்தவர்களின் கண்களைக் […]
மலைப்பகுதியில் ஒருவன் நிறைய கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் பயிரிட்டான். கீழே சமதளத்தில் இருக்கும் மக்கள் அதை நல்ல விலைக்கு வாங்குவார்கள் என்று நினைத்து, ஒரு மாட்டு வண்டியில் அனைத்து காய்கறிகளையும் ஏற்றிக்கொண்டு கீழே வந்தான். வரும்போது சமதள நிலப்பரப்பு முதலில் கொஞ்ச தூரம் செழிப்பாக இருந்தது. போகப் போக பசுமை குறைவாக இருந்தது. பசுமையே இல்லாத இடத்துக்கு காய்கறியைக் கொண்டு போனால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று கணக்கிட்டு, வண்டியை ஓட்டிக்கொண்டே இருந்தான். வழியில் சிறுவர்கள் சாப்பிட […]
ஒரு மனிதன் சிறிய குதிரை உருவத்தில் ஒரு கேக்கை செய்து வைத்துவிட்டுத் தூங்கிவிட்டான். அவன் தூங்கும்போது, ஒரு புனித நட்சத்திரத்தின் ஒளியால் அந்த கேக் குதிரை உயிர்பெற்றது. இங்கும் அங்கும் தாவித் தாவி ஓடியது. தன்னை செய்த மனிதனிடம், ‘‘வா, என் மேல் ஏறிக்கொள். நான் உன்னை சுமக்கிறேன்’’ என்றது. அதைப் பார்த்து அவன் சிரித்து, ‘‘உன்னால் முடியாது. நீ குதிரை அல்ல, கேக். உனக்கு சேனமும் லாடமும் இருந்தால் மட்டுமே ஓட முடியும்’’ என்றான். அந்தக் […]
காட்டில் நரி ஒன்று இருந்தது. அதுதான் அந்தக் காட்டில் பெரிய பணக்காரன். பல விலங்குகளுக்கு கடன் கொடுத்து உதவும் நல்ல குணமும் அதற்கு உண்டு. அந்த நரியும், ஒரு கோழியும் பேருந்து நிலையத்தில் ஒருநாள் காத்திருந்தன. பொழுது போகவில்லை என்பதால், ஆப்பிள் காட்டு குரங்கைப் பற்றி நரியிடம் பேசியது கோழி. ‘‘நான் அந்தக் குரங்கு வீட்டருகே போனேன். அப்போது அது தன் குடும்பத்தினருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டது’’ என்றது. ‘‘நீ கண்ணால் பார்த்தாயா’’ என்று நரி கேட்டது. […]
முல்லாவின் நண்பர் ஒருவர் சண்டைக்கார பேர்வழி. ஊர் முழுக்க இதனாலேயே அவர் பிரபலம். சின்ன பிரச்னை என்றாலும், ‘‘அடித்து விடுவேன், நொறுக்கி விடுவேன்’’ என்று ஊரில் அனைவரையும் மிரட்டிக்கொண்டே இருப்பார். இதையே தன் தொழிலாக ஆக்கியிருந்தார். ஒருநாள் இந்த சண்டைக்கார நண்பர் நடந்து வரும்போது அந்தக் காட்சியைப் பார்த்தார். முல்லா தன் நாயுடன் பாதையோரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் நாயோ, பாதையில் போன வண்டிகளையும் குதிரையில் பயணம் செய்வோரையும் துரத்தித் துரத்திப் பிடிப்பது போல போகிறது. […]
ஒரு கிராமத்தில் அண்ணனும் தம்பியும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். திடீரென இருவருக்கும் மன வருத்தம் ஏற்படவே, தனித் தனியே பிரிந்தனர். தம்பி மீது தனக்கு இருக்கும் வெறுப்பை தன் தாய்மாமாவிடம் சொல்லி புலம்பினார் அண்ணன். ‘‘துளி கூட அவன் மீது அன்போ, நம்பிக்கையோ எனக்கு இல்லை’’ என்றார் அண்ணன். ‘‘அப்படிச் சொல்லாதே. ரத்த உறவில் இப்படி இருக்க முடியாது. பிடிக்கவில்லை என்று விலகி இருக்க முடியுமே தவிர, உன் தம்பியை உன்னால் வெறுக்க முடியாது. வெளியே […]
மந்திர வித்தை தெரிந்த பெரியவர் ஒருவர், ஊரை விட்டு விலகி காட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடில் அமைத்து மனைவியுடன் தங்கினார். காலை எழுந்து தோட்ட வேலை செய்து கொண்டிருந்தபோது வழிப்போக்கன் ஒருவன் பதற்றமாக எதையோ தேடிக் கொண்டு வந்தான். பெரியவர் அவனிடம், ‘‘என்ன தேடுகிறாய்?’’ என்று கேட்டார். ‘‘காட்டைக் கடந்து வேறு ஊருக்குப் போகிறேன். போகும் வழியில் பசித்ததே என்று அவித்த கடலையை சாப்பிட்டுக் கொண்டு வந்தேன். எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று கடலை ஒன்றைக் கொத்திக்கொண்டு […]
பெரிய பாம்பு ஒன்று காட்டில் கம்பீரமாக ஊர்ந்து வந்தது. அதைப் பார்த்ததும் சிங்கம் பயந்து ஓடியது. காட்டுக்கு ராஜாவான சிங்கமே தன்னைக் கண்டு பயந்தது பற்றி பாம்புக்கு பெருமையாக இருந்தது. மற்ற விலங்குகள் எல்லாம் பாம்புக்கு பயந்து ஓடின. பறவைகள் அலறியடித்துக் கொண்டு உயரமான மரத்தில் அமர்ந்து கொண்டன. அதைப் பார்க்க பாம்புக்கு பெருமை தாளவில்லை. ஒரு மரத்தடியில் நின்றது. அங்கே ஒரு பொந்து இருந்தது. பொந்தில் எட்டிப் பார்த்தது. உள்ளே சிறிய பாம்புகள் இருந்தன. பெரிய […]