மகாத்மா காந்தியே ஒரு அதிசயம். அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விஷயங்கள் அபூர்வமானவை; அதிசயமானவை. அவரைப் பற்றிய நூல்களிலும், அவர் எழுதிய நூல்களிலும் காணக் கிடைக்கும் தகவல்களைத் தாண்டி, அவரோடு பழகிய பலர் தந்திருக்கும் அந்த விஷயங்கள் இங்கே…
1.இந்தியாவில் தெருக்களுக்குப் பெயர் வைக்கப்படுவதில் முதலிடம் பிடிப்பவர் மகாத்மா காந்தியே! நாடு முழுக்க எல்லா பெருநகரங்களிலும் ஒரு முக்கியமான வீதிக்கு காந்தி பெயர் இருக்கும். இந்தியாவின் முக்கியமான 53 வீதிகளுக்கு காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகில் 48 நாடுகளில் காந்தி பெயரில் வீதி உள்ளது. 2. காந்தி பிறந்த தினம். 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் சிற்றூரில் பிறந்தார். காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக […]
தன் வாழ்நாள் முழுக்க சினிமாவை வெறுத்த காந்தியின் வாழ்வைப் பற்றி மூன்று முக்கியமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பற்றிய முதல் படத்தை எடுத்தவர் ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர், ஏ.கே.செட்டியார். 1937ம் ஆண்டு தொடங்கி பல நாடுகளைச் சுற்றி, ஏராளமான தகவல்களையும் துண்டு துண்டு சலனப்படங்களையும் சேர்த்து ‘காந்தி’ படத்தை உருவாக்கிய இவருக்கு அதனாலேயே ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்ற பெயர் கிடைத்தது. ஏ.கே.செட்டியார் ஒருமுறைகூட காந்தியிடம் நேரடியாக பேசியதில்லை. […]
எந்த சூழலிலும் உண்மை பேசுவதும், பெரியோரையும் பெற்றோரையும் மதித்து அன்பு செலுத்துவதும் மகாத்மா கற்றுத் தந்த அடிப்படைப் பாடங்கள். பள்ளி வயதிலேயே இதையெல்லாம் அவர் கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். தன் வாழ்க்கை வரலாறான ‘சத்திய சோதனை’ நூலில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் தங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்கள் எதையேனும் படித்தால் பல பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்படிப் படிக்க விடாமல் தடுக்கின்றனர். நல்ல கருத்துகளைச் சொல்லும் காட்சிகளையும் குழந்தைகள் பார்க்க […]
மகாத்மா காந்தி லண்டன் சென்று சட்டம் படித்தபோதும், தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராகத் தொழில் செய்தபோதும், அங்கு வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியபோதும் ஆங்கிலேயர்களைப் போலவே கோட்-சூட் அணிந்திருந்தார். இந்தியா வந்த பிறகு கத்தியவார் பிரதேச குஜராத்திகள் போல உடை உடுத்தினார். அவரை வேட்டிக்கு மாற்றியது தென்னிந்தியா. லட்சக்கணக்கான நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வேட்டியை வெறும் ஆடையாக மட்டும் பார்க்க முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘கதர் ஆடை’ ஓர் ஆயுதம். ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ […]
பிறக்கும்போது எல்லோருமே நல்லவர்கள்தான். இளம் வயதில் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தான் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து ஒருவரைச் செதுக்குகின்றன. அந்தச் சம்பவங்களில் கற்றுக்கொள்ளும் பாடங்கள்தான் வாழ்வின் போக்கை நிர்ணயிக்கின்றன. ஒருவர் சாதனையாளர் ஆவதும், சோர்ந்து ஒதுங்குவதும், அரிதாகச் சிலர் மகத்தான மனிதர்கள் ஆவதும் இந்தச் சம்பவங்களின் தாக்கத்தால் நிகழ்வதே! எல்லோரையும் போல மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகப் பிறந்தவரை, நம் தேசமே தந்தையாகக் கருதும் ‘மகாத்மா’ ஆக்கிய சம்பவங்கள் பல. அவற்றில் ஒன்று பற்றி அவரே விவரிக்கிறார்... […]
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த பிரிட்டிஷ்காரர்களை அச்சமின்றி எதிர்த்தவர் மகாத்மா. ஆனால், சிறுவனாக இருந்தபோது காந்திக்குப் பயம் அதிகம். பாம்பு பயமும் திருடர் பயமும் நிறைய. இருட்டைக் கண்டாலே நடுங்குவார். இருட்டில் கண்களை மூடினால் பிசாசுகள் வந்து சூழ்ந்து கொள்வதாகவும் நினைத்து நடுங்குவார். காந்திக்கு தாய் புட்லி பாயின் பக்தியும் தெய்வ நம்பிக்கையும் கண்டு வியப்பு ஏற்பட்டது. தாயோடு அவர் கோயில்களுக்குச் செல்வதுண்டு. ஆனால் அவரின் இளம் உள்ளத்தில் பக்திப் பயிரை விளைவித்தவர், அவரது […]