காலம் மிகச்சிறந்த ஆசிரியன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது எல்லா மாணவர்களையும் கொன்றுவிடுகிறது. - ஹெக்டர் லூயிஸ் பெர்லியோஸ்
ஒரு கெட்ட செய்தி: நேரம் பறக்கிறது.ஒரு நல்ல செய்தி: நீங்கள்தான் அதன் பைலட்! மைக்கேல் அல்ஷுலர்
நாம் ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடும் போது, நேரம் மிகவேகமாக நம்மைத் தாண்டி நகர்கிறது! செனகா
வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசத்தை மூன்றே வார்த்தைகளில் பிரித்துவிடலாம்... ‘‘எனக்கு நேரம் இல்லை!’’ - ஃபிராங்க்ளின் ஃபீல்ட்
உங்கள் மதிப்பை நீங்கள் உணராதவரை, உங்கள் நேரத்தின் மதிப்பை உணரமுடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணராதவரை, உங்களால் அதைவைத்து எதுவும் செய்ய முடியாது. - ஸ்காட் பேக்
உலகத்தில் எல்லோருக்கும் சொந்தமானது நேரம்தான். ‘என்னிடம் எதுவுமே இல்லை’எனப் புலம்புகிறவனிடம் கூட ஏராளமான நேரம் இருக்கிறது. -பல்தசார் கிரேஸியன்
அது நல்ல நேரமோ, கெட்ட நேரமோ... இந்த நேரம் நம்முடைய நேரம் என நினைத்து எதையும் செய்யுங்கள். ஆர்ட் புச்வால்ட்
பணத்தை உழைத்து மீட்கலாம்; இழந்த அறிவைப் படித்துமீட்கலாம்; இழந்த உடல்நலனை மருந்துகளால் மீட்கலாம். இழந்த நேரம் இழக்கப்பட்டதுதான்! - சாமுவேல் ஸ்மைல்ஸ்