சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்; அவற்றைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!
யாராவது உங்களை மரியாதைக் குறைவாகப் பேசினால், ஈரத்தை உறிஞ்சும் பஞ்சு போல ஆகிவிடாதீர்கள். அதன் சுமை உங்களை மூழ்கடித்துவிடும். அவர்களின் வார்த்தைகளைக் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓட விட்டுவிடுங்கள். உங்களுக்கு எதிரான எந்தவார்த்தையும் உங்களைப் பாதிக்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர, நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை.
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து போங்கள். மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப்போக விரும்பாதீர்கள்!
வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான்.
மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை.
அனுபவம் என்பது புதுவிதமான ஓர் ஆசிரியர். அது பாடங்களைக் கற்றுத்தந்த பின் தேர்வு வைப்பதில்லை. தேர்வின் மூலம்தான் பாடங்களைக் கற்றுத்தருகிறது.