உனக்குத் தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக்கொண்டு, தெரியாததை தெரியாது என்று உணர்தலே தன்னம்பிக்கை ஆகும்.
நம்மிடம் இருப்பதிலேயே விலை மதிப்புமிக்க சொத்து நேரம்தான்; எளிதில் அழியக்கூடியக் சொத்தும் நேரம்தான்!
நான் தான் என் நேரத்தைத் தீர்மானிக்க வேண்டும்; என் நேரம் என்னைத் தீர்மானிப்பதை அனுமதிக்க முடியாது.
ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு, சிதறவிட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத்தான் தெரியும்.
இன்னல்களும் பிரச்னைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காகக் கடவுள் வழங்கும் வாய்ப்புகள். உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் லட்சியங்களும் தகர்க்கப்படும் போது, அந்தச் சிதைவுகளுக்கிடையே தேடிப்பாருங்கள்... இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
சற்றே ஓய்வுக்கும் கேளிக்கைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியாதவர்கள், உடல்நலக் கேட்டுக்காக நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டிவரும்.
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டால் போதும்!
ஒன்று நிகழப்போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது, இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது.