முன்நோக்கிச் செல்லும்போது கனிவாயிருங்கள். ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால், யாராவது உதவுவார்கள்.
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் செய்யப்பட்டவை!
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
முடிந்ததை சிறப்பாகச் செய்தால் அது திறமை; முடியாததை சிறப்பாகச் செய்ய முயற்சி செய்தால் அது தன்னம்பிக்கை!
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
நம்முடன் வாழ்பவர்களைப் புரிந்துகொள்வதற்கு, முதலில் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது; அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது; அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.