நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்; சாய்வு நாற்காலியாக அல்ல! - ஜான் கென்னடி
ஓர் இளவரசன் வேட்டைக்குச் சென்றான். போன இடத்தில் வழிதவறி அங்கும் இங்கும் அலைந்து, பழைய பாழடைந்த சிறு கட்டிடம் ஒன்றில் ஒதுங்கினான். உள்ளே மூவர் மெல்லிய குரலில் பேசுவது கேட்டது. முதல் குரல் சொன்னது, ‘‘நான்தான் நெருப்பு. ஒருவேளை நான் பிரிந்து போய்விட்டால், தூரத்தில் தெரியும் புகையை வைத்து என்னை அடையாளம் கண்டு வந்து சேருங்கள்.’’ இரண்டாம் குரல், ‘‘நான்தான் நீர். ஒருவேளை வழிதவறி நான் பிரிந்து போய்விட்டால், எந்த இடத்தில் பச்சைப் பசேல் என்று செடி, […]
காலம் மிகச்சிறந்த ஆசிரியன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது எல்லா மாணவர்களையும் கொன்றுவிடுகிறது. - ஹெக்டர் லூயிஸ் பெர்லியோஸ்
ஒரு கெட்ட செய்தி: நேரம் பறக்கிறது.ஒரு நல்ல செய்தி: நீங்கள்தான் அதன் பைலட்! மைக்கேல் அல்ஷுலர்
ஒரு பெரிய நீர்நிலை இருந்தது. அதில் நிறைய வாத்துகள் இருந்தன. அளவுக்கு மீறி வாத்துகள் பெருகியதால் மீன்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. வாத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்காவிட்டால் மீன்கள் அழிந்துவிடும் ஆபத்து இருந்தது. நீரில் அந்த வாத்துகளை வேட்டையாட சிரமமாக இருந்தது. ஊரிலுள்ள வேட்டைக்காரர் ஒருவர், இதற்குத் தீர்வு கண்டுபிடிக்க எண்ணினார். தன் நான்கு நாய்களுக்கும் நீரில் ஓடும் பயிற்சியைக் கொடுத்தார். உலகில் யாராலுமே செய்ய முடியாத செயல் நீரில் நடப்பதும் ஓடுவதும் ஆகும். ஆனால், கடும் பயிற்சிக்குப் […]
1 நம்பிக்கையோடு நிமிர்ந்து அமருங்கள்; நில்லுங்கள்; நடந்து செல்லுங்கள்! 2 அடுத்தவர்களை கண்கள் பார்த்து, புன்சிரிப்போடு எதிர்கொண்டு, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். 3 ‘கச்சிதமான உடலமைப்பு இதுதான்’ என விளம்பரங்களும் டெலிவிஷனும் சொல்வதை நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்கள் கச்சிதம்தான்! 4 குடும்பமும் நண்பர்களும் உங்கள்மீது வைக்கும் எதிர்பார்ப்புகளைத் தூக்கி எறிந்துவிடுங்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். 5 சின்னச்சின்னதாக இலக்குகளை வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை எட்டும்போது பெரும் சந்தோஷத்தை உணர்வீர்கள். 6 உங்கள் நம்பிக்கைகளை கேள்வி […]
நாம் ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடும் போது, நேரம் மிகவேகமாக நம்மைத் தாண்டி நகர்கிறது! செனகா
நாட்டில் திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவில் ஒரு பயில்வான் வித்தை காட்டுகிறார். இரும்புக் கம்பியை கையால் வளைத்துக் காட்டுகிறார். கருங்கல்லைக் கையால் உடைக்கிறார். முடிவில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சக்கையை மட்டும் மிச்சம் வைக்கிறார். ‘‘இந்த எலுமிச்சை பழ சக்கையிலிருந்து மேலும் ஒரு துளி எலுமிச்சை சாறை யாராவது பிழிந்து விட்டால் அவருக்கு 100 பொற்காசுகள் தருகிறேன்’’ என்று சவால் விடுகிறார் பயில்வான். ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வந்து பிழிகிறார்கள். சாறு வரவில்லை. பலசாலிகள் […]
தன் வாழ்நாள் முழுக்க சினிமாவை வெறுத்த காந்தியின் வாழ்வைப் பற்றி மூன்று முக்கியமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பற்றிய முதல் படத்தை எடுத்தவர் ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவர், ஏ.கே.செட்டியார். 1937ம் ஆண்டு தொடங்கி பல நாடுகளைச் சுற்றி, ஏராளமான தகவல்களையும் துண்டு துண்டு சலனப்படங்களையும் சேர்த்து ‘காந்தி’ படத்தை உருவாக்கிய இவருக்கு அதனாலேயே ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்ற பெயர் கிடைத்தது. ஏ.கே.செட்டியார் ஒருமுறைகூட காந்தியிடம் நேரடியாக பேசியதில்லை. […]
வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசத்தை மூன்றே வார்த்தைகளில் பிரித்துவிடலாம்... ‘‘எனக்கு நேரம் இல்லை!’’ - ஃபிராங்க்ளின் ஃபீல்ட்