கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்; அது என்ன செய்கிறது என்று பாருங்கள். கடந்து போய்க் கொண்டே இருங்கள்!
கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் ஆளுக்கொரு எலுமிச்சை பழம் கொண்டு வருமாறு முதல் நாளில் பேராசிரியர் சொன்னார். ‘ஏன் எலுமிச்சை பழம்?’ என்ற யோசனையுடன் மறுநாள் மாணவர்கள் கொண்டு போனார்கள். ‘‘அவரவர் இனிஷியலை எலுமிச்சை பழத்தில் செதுக்குங்கள்’’ என்றார் பேராசிரியர். மாணவர்கள் செய்தார்கள். கூடை ஒன்றில் அனைத்து எலுமிச்சை பழங்களையும் போடச் சொன்னார். நன்றாகக் கலந்தார். மாணவர்களை அவரவர் பழத்தை எடுக்கச் சொன்னார். இனிஷியல் பார்த்து எல்லோரும் சரியாக எடுத்துவிட்டார்கள். அனைவரையும் எலுமிச்சை பழத்தோலை உரித்து […]
1.இந்தியாவில் தெருக்களுக்குப் பெயர் வைக்கப்படுவதில் முதலிடம் பிடிப்பவர் மகாத்மா காந்தியே! நாடு முழுக்க எல்லா பெருநகரங்களிலும் ஒரு முக்கியமான வீதிக்கு காந்தி பெயர் இருக்கும். இந்தியாவின் முக்கியமான 53 வீதிகளுக்கு காந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகில் 48 நாடுகளில் காந்தி பெயரில் வீதி உள்ளது. 2. காந்தி பிறந்த தினம். 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் சிற்றூரில் பிறந்தார். காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக […]
பலவீனங்களை உணருங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேளுங்கள். உங்கள் பலவீனம் எது, உங்களிடம் நீங்கள் நினைத்து நினைத்து வெட்கப்படும் குணம் எது என்பதை அறியுங்கள். முகப்பரு, எவ்வளவு அழுத்தி வாரினாலும் படியாத தலைமுடி, கூட்டமாக மனிதர்களைப் பார்த்தால் கூச்சப்பட்டு தலைகவிழ்ந்து கொள்வது என ஏதாவது ஒரு விஷயம் உங்களை தன்னம்பிக்கை இல்லாதவராக ஆக்கியிருக்கும். உங்கள் தாழ்வு மனப்பான்மைக்கு எது காரணமோ, அதற்கு ஒரு பெயர் வையுங்கள். அந்தப் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, துண்டு துண்டாக கிழித்துப் […]
வணக்கம். ஒரு ஆப்பிள் பழத்தில் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பதை நம்மால் எண்ணிப் பார்த்து சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு விதையில் எத்தனை ஆயிரம் ஆப்பிள் பழங்கள் இருக்கும் என சொல்லமுடியாது. விதைகளின் வீரியம், ஆராய்ச்சிகளைத் தாண்டி ஆச்சரியம் தரக் கூடியது. மூன்று ஆப்பிள்களுக்கு உலக வரலாற்றில் முக்கியமான இடம் இருக்கிறது. முதல் ஆப்பிள், மத நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உலகத்தில் மனிதர்கள் உருவாக ஆப்பிள் பழமே காரணம் என்பார்கள். கடவுளின் எச்சரிக்கையை மீறி, […]
உலகம் முழுவதும் மனிதர்கள் பல்வேறு மொழிகளில் பேசுகிறார்கள். ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
இத்தாலியின் புகழ்பெற்ற சிற்பியான பெர்டெல் தோர்வால்ட்சென் (Bertel Thorvaldsen) மரவேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். எப்படியாவது பெரிய சிற்பியாக வேண்டும் என்று தீர்மானித்தார். டென்மார்க்கிலிருந்து இத்தாலி வந்து சிற்பக்கலையைக் கற்றுக் கொண்டு அழகான சிற்பங்களை செதுக்கினார். மிகுந்த கவனத்தோடும் கலையழகோடும் செதுக்கப்பட்ட அவை மக்கள் மத்தியில் புகழ்பெற ஆரம்பித்தது. எல்லோரும் பாராட்டினாலும், வாங்குவதற்கு யாரும் வரவில்லை. தோர்வால்ட்சென் சிலரிடம் சென்று தன் சிற்பங்களை விற்க முயற்சி செய்கிறார். அவர்களும் வாங்குவதாக இல்லை. ‘நம் சிற்பங்களை யாரும் காசு […]
புகழ்பெற்ற எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ எழுதிய மிகப் பிரபலமான கட்டுரையின் சுருக்கம் இது. ஏதோ மலை ஏறுகிறவர்களுக்கான ஆலோசனைக் கட்டுரை போல இருக்கும். ஆனால் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்குமான அட்வைஸ் பட்டியல் இது. ‘மலை’ என்ற இடத்தில் வேலை, வாழ்க்கை, லட்சியம், ஆசை என எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பொருத்தி படித்துக் கொள்ளலாம்... மலையைத் தேர்ந்தெடுங்கள் ‘அந்த மலை அழகாக இருக்கும்...’, ‘இந்த மலைதான் ஏறுவதற்கு மிகவும் சுலபமானது’ என அடுத்தவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு […]