அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனிடம் அவர் நண்பர் ஒருவர் வேதனையுடன் வந்தார். எப்போதும் வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பதாக புலம்பினார். அழுதார். இனிமேல் தன்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்று இயலாமையை வெளிப்படுத்தினார். நண்பர் பேசப் பேச, லிங்கன் கரும்பலகையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ‘‘நான் வேதனையுடன் புலம்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறுதலோ யோசனையோ சொல்லாமல் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்க எப்படி மனம் வந்தது?’’ என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார் நண்பர். ‘‘என் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை […]
நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர, நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை.
வணக்கம். ‘நீங்க ஏன் ஒரு சாமியாரை உங்க விளம்பரங்களில் எல்லாம் போடுறீங்க?’’ என்று ஒருவர் என்னிடம் கேட்டார். நான் குருவாக ஏற்றுக் கொண்ட ‘வேதாத்திரி மகரிஷி’ அவர்களைத்தான், கேள்வி கேட்டவர் ‘ஒரு சாமியார்’ என்று குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய வாழ்வையும், ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சியையும் ‘மகரிஷிக்கு முன்’ - ‘மகரிஷிக்குப் பின்’ என இரண்டு கட்டங்களாகப் பிரிக்க இயலும். அப்பா, அம்மா சொல்படி கேட்டு நடந்துகொள்கிற பிள்ளை நம் சமூகத்தில் சமத்துப் பிள்ளை. […]
சோகம் எனும் பறவை உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
ஒரு நாட்டில் முரட்டுத்தனமான ராஜா ஒருவர் இருந்தார். அவர் கட்டளையிட்டால் அது நடந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். அந்நாட்டின் சிறந்த கட்டடக் கலைஞரை அழைத்து “நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. மூன்று நாட்களில் வானில் பறக்கும் அரண்மனை ஒன்று கட்டித்தர வேண்டும். எவ்வளவு வேலையாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்றார். கட்டிட கலைஞர், ராணி, மந்திரி என்று யார் சொன்னாலும் ராஜா கேட்பதாயில்லை. “மூன்று நாட்களுக்குள் கட்டித்தரவில்லை […]
குரு ஒருவர் சீடர்களோடு நடை பயணம் மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு நாய் தாகத்தில் மயக்கமாகி, மூச்சிரைத்துக் கிடந்தது. ஒரு சொட்டு நீரை யாராவது அதன் வாயில் ஊற்றி விட மாட்டார்களா என்று காத்துக் கிடந்தது. அதைப் பார்த்த குரு தன் சீடர்களிடம், ‘‘அருகில் ஒரு கிணறு இருக்கிறது. அதிலிருந்து யாராவது நீர் எடுத்துவந்து அதன் தாகம் தணியுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டார். கிணற்றில் நீர் எடுக்கப் போன சீடர்கள், அந்த இடத்தில் ஏதோ விவாதித்துவிட்டுத் […]
மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக்கூடாதென்று நினைக்கிறாயோ, அதை நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே.
ஒருவர் விடுமுறையன்று வீட்டுத் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அங்கே ஒரு கிளியை கழுகு துரத்துவதைப் பார்த்தார். கிளி அங்கும் இங்கும் பறந்து தப்பிக்க கடும் முயற்சி செய்தது. கழுகு விடவில்லை. வேறு வழியே இல்லாமல் அவர் கையில் வந்து அமர்ந்தது கிளி. அவர் கழுகை விரட்ட, கழுகு பயந்து பறந்தோடிவிட்டது. கிளியை அன்புடன் பார்த்து, ‘‘கிளியே! நான் இருக்கிறேன் உனக்கு’’ என்று சொல்லி, குடிக்க பாலும், சுவைக்க பழங்களும் கொடுத்தார். பிறகு, ‘‘நீ என்னுடன் இருந்து விடு […]