இன்னல்களும் பிரச்னைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காகக் கடவுள் வழங்கும் வாய்ப்புகள். உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் லட்சியங்களும் தகர்க்கப்படும் போது, அந்தச் சிதைவுகளுக்கிடையே தேடிப்பாருங்கள்... இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
எந்த விஷயத்திலாவது கருத்து வேறுபாடு வரும்போது, யார் விட்டுக் கொடுப்பது என்று போட்டி போட்டு, கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுப்பதுதான் சிறந்த வாழ்க்கை என நிறைய பேர் நினைக்கிறார்கள்.வெறுமனே விட்டுக் கொடுத்து வாழ்கிறவர்கள் சிறந்த கணவன் & மனைவி இல்லை. புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால்தான் சிறந்த வாழ்க்கை வாழ முடியும். இல்லாவிட்டால் எஜமான்-அடிமை வாழ்க்கைதான் கிடைக்கும். யார் எஜமான், யார் அடிமை என்பது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி மாறும்!‘ஏன்’ என்று கேட்க முடியாதபடி ஒருவருக்கு வாழ்க்கை […]
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. எலெக்ட்ரானைக் கண்டுபிடித்த இயற்பியல் விஞ்ஞானி நீல் போர் யோசனையில் இருந்தார். அவரது உதவியாளர்கள் பதற்றமாக இருந்தனர். நாஜி படைகள் டென்மார்க் தலைநகரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் நாட்டையே ஆக்கிரமித்து விடுவார்கள். நீல் போருக்கு கிடைத்திருந்த நோபல் பரிசு தங்கத்தால் உருவாக்கப்பட்டது. நாஜி படையினர் தங்கத்தைப் பார்த்தால் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். எப்படி இந்த தங்க விருதை மறைத்து எடுத்துச் செல்வது? நீல் போர் ஆய்வகத்தில் அவர் உதவியாளர்கள் குழம்புகிறார்கள். […]
சற்றே ஓய்வுக்கும் கேளிக்கைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியாதவர்கள், உடல்நலக் கேட்டுக்காக நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டிவரும்.
ஓர் ஆப்பிள் தோட்டத்தின் மூலையில் இருந்த ஒரே ஒரு மரம் சரியாய் காய்க்காமல் இருந்தது. தினமும் தோட்டத்தின் சொந்தக்காரர் வந்து ‘ஆப்பிள் காய்த்திருக்கிறதா’ என்று பார்த்துப் பார்த்து சலித்துப் போனார். ‘இந்த மரம் தேவையில்லாமல் நிலத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மரம் தேவையில்லாமல் மற்ற மரங்களுக்கான நீரை உறிஞ்சி வீணாக்கிக் கொண்டிருக்கிறது’ என்று நினைத்து அந்த காய்க்காத ஆப்பிள் மரத்தை வெட்டப்போனார். அம்மரத்தில் இருந்த பறவைகளும் பூச்சிகளும் அவரிடம் வந்து கெஞ்சின. ‘‘இதை வெட்டாதீர்கள். இது எங்கள் […]
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டால் போதும்!
தத்துவப் பேராசிரியர் வகுப்பெடுத்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்தார்கள். ‘‘ஒருநாள் ஹாஸ்டலை விட்டு வெளியே போய் சுற்றி வாருங்கள். உலகத்தைப் பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது நல்லவர்களாக மாறுங்கள். நல்ல விஷயங்களைச் செய்யுங்கள். மாலை ஏழு மணிக்கு மறுபடியும் ஹாஸ்டலுக்கு வந்துவிடுங்கள்’’ என்றார். மாணவர்கள் கல்லூரி ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தார்கள். ‘நல்லது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்’ என்று யோசித்தார்கள். அவர்கள் கையில் உள்ள பணத்தையெல்லாம் சில்லறைகளாக மாற்றி பிச்சைக்காரர்களுக்கு கொஞ்சம் கொடுத்தார்கள். ‘உங்களுக்குப் பசிக்கிறதா’ என்று கேட்டு […]
குழந்தைகளுக்கு முதன்முதலில் முடிவெடுக்கும் வாய்ப்பைத் தருவது, பணம்தான்! இளம் வயதிலேயே பணத்தைக் கையாளும் வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுத் தந்துவிட்டால், அவர்கள் சம்பாதிக்கும் நாட்களில் தெளிவாக இருப்பார்கள். கடைகளுக்குச் சென்று செலவழிக்கும்போது மட்டும் குழந்தைகளைக் கூட்டிச் செல்வார்கள் சிலர். ஆனால் செலவைவிட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது சேமிப்பைத்தான்! எப்படி அவர்களுக்கு பணக்கல்வி கொடுப்பது? * குழந்தைகள் எண்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததுமே அவர்களுக்கு பணத்தை அறிமுகம் செய்யுங்கள். பார்த்தும், திரும்பத் திரும்ப கவனித்தும் ரூபாய் நோட்டுகளின் வித்தியாசத்தை குழந்தைகள் உணர்ந்து […]