நூற்றுக்கணக்கான மேடைகளில், ஆயிரக்கணக்கான மக்களையும் மாணவர்களையும் சந்தித்து, லட்சக்கணக்கான இளைய தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருந்து, கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு உரையும் தன்னம்பிக்கை உரம் தரும். அவரது தாய்மண்ணில் அமைந்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ‘நீ நீயாக இரு’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையின் சில பகுதிகள்: ‘‘தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். […]
சேமிக்க வேண்டிய நேரத்தில் செலவு செய்யாதீர்கள். செலவு செய்ய வேண்டிய நேரத்தில் சிக்கனம் செய்யாதீர்கள்.
சில நேரங்களில், நாம் பொழுது போக்க முடியாமல் விளையாட்டாகச் செய்கின்ற விஷயங்களுக்கு அடிமையாகி விடுகிறோம். உதாரணமாக, பேருந்துகளில் செல்லும்போது, ஓய்வாக அமர்ந்திருக்கும்போது, நம்முடைய அலைபேசியில் விளையாடுவோம். நாளாக நாளாக அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். தொடர்ந்து அலைபேசியில் விளையாடிக் கொண்டே இருப்பது, வேலைக்கு இடை இடையே விளையாடுவது, யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முகம் பார்த்துப் பேசாமல் அலைபேசியில் விளையாடிக் கொண்டே பேசுவது, இன்னும் ஒரு படி மேலே போய் காலை எழுந்தது தொடங்கி இரவு தூங்கும் […]
எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதில் மட்டுமின்றி, அவர்களை அறிவாளியாக செதுக்குவதிலும் உணவுக்கு பெரும் பங்கு உண்டு. வளரும் குழந்தைக்கும் சரிவிகித ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவு தருவது அவசியம். அப்படிப்பட்ட சூப்பர் உணவுகள் சில: ஓட்ஸ்: காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் குழந்தைகள், பள்ளியில் பாடங்களை ஊன்றி கவனிக்க முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நார்ச்சத்து நிரம்பிய முழு தானியமான ஓட்ஸ், சிறிது சிறிதாகவே ஜீரணமாகிறது. எனவே சீரான சக்தியை நீண்ட நேரம் குழந்தைக்கு வழங்குகிறது. லவங்கப்பட்டை தூள்: காலையில் குழந்தைக்குத் […]
வணக்கம். இன்றைய காலகட்டத்தின் முக்கியமான தேவை, உதாரண புருஷர்கள். ‘இவரைப் போல வாழ வேண்டும்’ என்று தூண்டுகிற நல்ல மனிதர்கள்தான் இந்த உலகத்தின் சொத்து. யாரை நாம் ரோல் மாடலாக நினைக்கிறோமோ, அதுவே நாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், அறிஞர்கள், ஆன்மிக வாதிகள் என நம் குழந்தைகளுக்கு சிறந்தவர்களை முன்னுதாரணமாக அடையாளம் காட்டினால், அவர்கள் வாழ்க்கை சிறக்கும். உலகம் தழைக்கும். நான் என் வாழ்வில் ‘ரோல் மாடல்’ என நினைக்கும் மாமனிதர், திரையுல மார்க்கண்டேயர் நடிகர் சிவகுமார். […]
வணக்கம். ‘பணக்காரன் ஆக என்ன செய்யவேண்டும்?’ என்ற கேள்விக்கான பதிலாக, ‘தேவையைக் குறைத்துக்கொள். நீ எப்போதும் பணக்காரன்தான்’ என்று எங்கோ படித்த விஷயம் அப்படியே மனதில் கல்வெட்டாக பதிந்துவிட்டது. ‘ஈஸ்வரன்’ என்ற சொல், அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய சிவனின் பெயர். ஆக்கமும், அழிவும் தரக்கூடிய இரண்டு நிலைகளுக்கு ‘ஈஸ்வரன்’ என்ற அடைமொழி நம் மரபில் உண்டு. தொட்டதெல்லாம் துலங்கி, கோடி ரூபாய் வைத்திருப்பவனை ‘கோடீஸ்வரன்’ என்று சொல்வார்கள். அனைத்து சக்திகளையும் உள்ளடக்கியது பணம் என்று குறிப்பிடுவதுபோல, பணம் […]
உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் நமது தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளன. உலகில் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. உலக நாடுகளில் காந்திஜிக்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் எண்ணிக்கை சுமார் 300. இந்தியாவில் காந்திஜிக்கு முதல் அஞ்சல் தலை அவரது 80வது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு 4 தபால் தலைகளுக்கான வடிவமைப்புப் பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக தனது […]