பெரும்பாலான பெண்கள் கையில் ஹேண்ட்பேக் எடுக்காமல் வாசலைத் தாண்டுவதில்லை. உங்கள் ஹேண்ட்பேக்கில் என்ன இருக்கிறது? செல்போன், குட்டி பர்ஸ், கர்ச்சீப், ஃபேஷியல் க்ரீம், மஸ்காரா, லிப்ஸ்டிக், ஸ்டிக்கர் பொட்டு, ஐ லைனர், மேக்கப் பெட்டி என ஏகப்பட்ட அயிட்டங்கள் அதில் அடைந்து கிடக்கும். இதையெல்லாம் தாண்டி இன்னொரு ஆபத்தையும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், ‘ஒரு டாய்லெட்டில் இருப்பதைவிட அதிக அளவு கிருமிகள் பெண்களின் ஹேண்ட்பேக்கில் இருக்கின்றன’ என நிரூபித்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி. […]
சலித்துக் கொள்பவர்கள், ஒவ்வொரு வாய்ப்பிலும் இருக்கிற ஆபத்துகள் என்னவென்று பார்க்கிறார்கள். சாதிக்க நினைப்பவர்கள், ஒவ்வொரு ஆபத்திலும் வெற்றிக்கான வாய்ப்பைத் தேடுகிறார்கள்.
நம்பிக்கைவாதி ரோஜாவைப் பார்க்கிறான்; முட்களை அல்ல. அவநம்பிக்கையாளன் முட்களைப் பார்க்கிறான்; ரோஜாவை அல்ல!
காந்தியின் இளம் வயது நண்பர் ஒருவர், சுருட்டு பிடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. பிரிட்டிஷ்காரர்களைப் பார்த்து, ‘சுருட்டு பிடிப்பதே நாகரிகம்’ என்ற நினைப்பு அப்போது இந்தியாவில் வசித்த மேல்தட்டு மக்களுக்கு இருந்தது. காந்தியும் தன்னை நாகரிக இளைஞனாக காட்டிக் கொள்ள முயன்றார். கூடவே அசைவ உணவும் பழகினார்.இதனால் காந்தியின் செலவுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. கடைகளிலும் நண்பர்களிடமும் கடன் வாங்கினார். கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று […]
வணக்கம். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்றாவது கை, நம்பிக்கை’ என்பார்கள். இரண்டு கைகள் இல்லாமல்கூட நம்மால் வாழ்ந்து விடமுடியும். நம்பிக்கையில்லாமல் வாழ்க்கை இல்லை. ‘‘நாளை சந்திக்கிறேன்’’ என்ற வார்த்தைகளே நம்பிக்கையிலிருந்து பிறப்பவைதான். நிச்சயமற்ற மனித வாழ்வின் ஆணிவேராக இருப்பது, ‘நாளை எல்லாம் மாறும்’ என்ற தீவிர நம்பிக்கைதான். தலைமுறை தலைமுறையாக ஒரு சமூகம் பின்பற்றி வரும் பல்வேறு விதமான நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால், அதில் பல அர்த்தப்பூர்வமான காரணங்கள் ஒளிந்திருக்கும். ‘புதிதாகத் திருமணமான தம்பதி, ஆடி மாதம் ஒன்றாக […]
வணக்கம். எங்கள் நிறுவனத்தில் ஒரு இளைஞர் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்தார். மார்க்கெட்டிங்கிற்குப் புதிதாக வந்திருக்கும் அந்த இளைஞரிடம், ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த வேலையைக் குறித்த நேரத்திற்குள் அவரால் செய்து முடிக்க முடியவில்லை. ‘ஏன் என்னால் நேரத்திற்கு இந்த வேலையைச் செய்ய முடியவில்லை’ என்று காரணங்களை அடுக்கியபோது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘அவரைப் போல் மற்றவர்கள் யாரும் பொறுப்போடு இல்லை’ என்பதே அவரின் ஆதங்கம். வெற்றி பெறும்போது அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று நினைப்பதும், […]
வணக்கம். பேச்சு என்பது கருத்துகளை பரிமாற உதவும் கருவி மட்டும் அல்ல; அது மனிதனின் தனித்த அடையாளம். கலைகளுள் தலைசிறந்த கலை. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று சொல்வார்கள். அதன் அர்த்தம், ‘பேசத் தெரிந்த பிள்ளை எளிதில் ஜெயிக்கும்’ என்பதுதான். முருகன் மயிலேறி உலகம் சுற்றி வருவதற்குள், பிள்ளையார் ‘பெற்றோரே என் உலகம்’ என்று சொல்லி அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தை வாங்கியே விட்டார். பேச்சு என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி. சரியாகப் பயன்படுத்த தெரியாமல் போனால், […]
நண்பர்களை நேசிப்பது சுலபம்; உறவினர்கள் மீது அன்பு காட்டுவது அதைவிட எளிது. எதிரிகளை நேசிக்க முடியுமா? ஒரு வழக்கறிஞராக தென் ஆப்ரிக்கா போன காந்தியை அந்த மண் மகத்தான மகாத்மாவாக திருப்பி அனுப்பியது. ‘எதிரியை நேசிப்பது எப்படி’ என்பதை அங்கு காந்தி கற்றுக்கொண்டார். நமக்கும் கற்றுத் தருகிறார். தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களின் சம உரிமைக்காக பெரும் போராட்டங்கள் நடத்தினார் காந்தி. அதனால் அங்கு ஆதிக்கம் செலுத்திவந்த வெள்ளையர்களின் தாக்குதலுக்கு அவர் அடிக்கடி ஆளாவதுண்டு. அப்படி ஒருமுறை அவர் […]