கல்லூரிப் படிப்பை முடித்த மகன் 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் உள்ள கம்ப்யூட்டர் படிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் பெற்றோர்களிடம் கேட்டான். அவர்களும் மிக மிக கஷ்டப்பட்டு பணத்தைப் புரட்டி அவனை கம்யூட்டர் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். முதலில் ஆர்வமாக வகுப்புக்குச் சென்ற மகன், திடீரென்று சோர்வானான். வீட்டில் அனைவரிடமும் எரிந்து விழுந்தான். கம்யூட்டர் பாடங்களை வீட்டில் சரியாக பயிற்சி எடுக்கவில்லை. வீட்டுப் பாடம் செய்யாமல் தவிர்த்தான். வகுப்புகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தான். அப்பாவும் அம்மாவும் தவித்துப் […]
‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ ‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’ ‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். ‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது […]
திருமண வயது வந்த மகனுக்காக வரன் பார்த்து வைத்திருந்தார் அம்மா. மகன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. தான் சுதந்திரமாக, இலக்கற்று, நிம்மதியாக வாழ நினைப்பதாக பெற்றோரிடம் சொன்னான். ‘என்ன சொன்னாலும் மகனுக்குப் புரிய வைக்க முடியவில்லையே’ என பெற்றோர் அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள். ஒரு விடுமுறை தினத்தில் நண்பர்களுடன் காட்டுக்குச் சென்றபோது ஒரு காட்டுப்பன்றி அவனைத் துரத்த, பெரிய மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். இருட்டிவிட்டது. இரவில் இறங்கி மீண்டும் அதனிடம் மாட்டிக்கொள்வதைவிட காலையில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம் […]
அலுவலகத்தில் வேலை பார்க்கும் மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை அப்பா கவனித்தார். அருகில் வந்து, ‘‘ஏன் தூங்கவில்லை?’’ என்றார். ‘‘மனசு சரியில்லை’’ என்றாள் மகள். ‘‘உனக்கு அன்பான குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா. ‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள். ‘‘என்னவென்று சொல்… நானும் தெரிந்துகொள்கிறேன்’’ என்றார் அப்பா. மகள் சொல்ல ஆரம்பித்தாள்… ‘‘என் அலுவலகத்தை கூட்டிப் பெருக்கி துடைத்து சுத்தம் செய்யும் பெண் ஒருத்திக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி […]
அப்பா, அம்மா, மகள், மகன் என்றொரு அணில் குடும்பம் மரத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த மரத்தின் கிளைகள் நெருக்கமாக இங்கும் அங்கும் வளைந்து நெளிந்திருந்தன. அனைவரும் விளையாடி கீழே இறங்கி வரும்போது மகன் அணிலைக் காணவில்லை. அப்பாவும் அம்மாவும் தங்கையும் தேடும்போது மரத்தின் மேலே முனகல் ஓசை கேட்டது. பார்த்தால், இரண்டு மூன்று கிளைகள் பின்னிப் பிணைந்த இயற்கைப் பொறியில் அது மாட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்து அதை விடுவிக்கவே முடியாது என்று அப்பா அணில் சோர்ந்து அழுதபடி […]
அந்த வீட்டில் ஒரே ஒரு குளியலறைதான். குளியலறையோடு கழிவறையும் சேர்ந்திருக்கும். இருப்பதோ மூன்று பிள்ளைகள், அப்பா, அம்மா மற்றும் வயதான பாட்டி என ஆறு பேர். எல்லா காலைப் பொழுதுகளையும் போல அன்றும் பரபரப்பாக விடிந்தது. பிள்ளைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லத் தயாரானார்கள். பல் துலக்கினார்கள், காபி குடித்தார்கள். அப்பாவும் அம்மாவும் காலை உணவையும், மதிய உணவையும் சேர்ந்தே சமைத்தார்கள். அப்பா பாதியில் தயிர் வாங்கி வர கடைக்குச் சென்ற போதுதான் அது நடந்தது. பாட்டி குளியலறைக்குள் […]
கல்யாண வரவேற்புக்கு அந்த இளைஞன் நல்ல உடை உடுத்தி நாகரிகமாக சென்றான். உள்ளே போனதும் காபி கொடுத்தார்கள். கையில் வாங்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே பஞ்சு மிட்டாய் செய்து சிறுவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு பஞ்சு மிட்டாய் கொடுக்க மாட்டார்களா? எனக்கும் பிடிக்குமே’ என்று ஏக்கமாக பஞ்சு மிட்டாயைப் பார்த்துக்கொண்டே வேகமாக காபி குடித்தான். அவன் ஏக்கமாகப் பார்ப்பதை அறிந்து அவனுக்கும் ஒன்று நீட்டினார் பணியாள். இவன் வெட்கத்தோடு சாப்பிடும்போது, அங்கே பஃபே விருந்துக்கான […]
குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. ‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் […]
மன்னர்கள் காலத்தில் நடந்தது இது. ஒரு தெருவில் முதியவர் ஒருவர் பசியால் வாடி நின்று கொண்டிருந்தார். அவருக்கு எதுவுமே நினைவில்லை. பசி அவ்வளவு வருத்தியது. அப்போது அவ்வழியே ஒரு இளைஞன் நடந்து சென்றான். இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து விரித்தால் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிதான நெய்யில் சுட்ட அப்பங்கள் சிலவற்றை விற்பதற்காக எடுத்துச் சென்றான். முதியவர் அவனிடம் ஒரு அப்பம் சாப்பிடக் கொடுக்கும்படி கெஞ்சினார். ‘‘காசில்லாமல் கொடுக்க மாட்டேன்’’ என்று அவன் மறுத்தான். ‘‘என்னிடம் காசில்லை […]
விநோதமான திருமணப் பழக்கம் அந்தப் பழங்குடியினருக்கு இருந்தது. யார் திருமணப் பெண்ணோ, அவள் சிறிய ஓலைக் குடிசையில் மூன்று நாட்கள் குலதெய்வ பூஜை செய்து காத்திருக்க வேண்டும். அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள், அந்த வீட்டைச் சுற்றி நின்று நடனம் ஆடுவார்கள். ஆடும்போது அவர்கள் கையில் நீளமான மரக்குச்சிகள் இருக்கும். நடனம் முடிந்ததும் அக்குச்சிகளை குடிசை ஓலையில் சொருகுவார்கள். உள்ளே இருக்கும் மணப்பெண்ணுக்கு அந்தக் குச்சிகளின் முனை மட்டும் தெரியும். அவள் அதில் ஏதாவது ஒரு […]